0,00 INR

No products in the cart.

ஆயிரத்தில் ஒருத்தி!

 

-உஷா ராம்கி 

சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி, “பெண்களால், பெண்களை, பெண்களுக்காக” என்ற ரீதியில் நிறைய கட்டுரைகள் படிப்போம், பெண்களைப் பெருமைப் படுத்துவோம். இங்கே, ஒரு அழகிய மாற்றத்தோடு, சில பிரபல ஆண்கள், தாங்கள் வியக்கும் மற்றும் போற்றும் பெண்ணைப் பற்றிக் கூறுகிறார்கள். 

பெரும்பாலும் இவர்கள் எல்லாருக்குமே அம்மாவும், மனைவியும் ஸ்பெஷலாகத்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டிஇவர் ஆயிரத்தில் ஒருத்தி என்று நீங்கள் வியக்கும் ஒரு பெண்? என்று இவர்களிடம் கேட்டோம்…

துஷ்யந்த் ஶ்ரீதர்
7ம் வகுப்பு வரை பெங்களூருவில் படித்து, எட்டாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை சென்னையில் திருமதி. சித்ரா பிரசாத் தலைமையில் நடத்தப்படும் என்.எஸ்.என் பள்ளியில் படித்தேன். திருமதி. சித்ரா ஒரு சிறந்த பேச்சாளர்; நிர்வாகத் திறன் படைத்தவர். இந்தக் காலத்தில், பெண்கள் வளர்ச்சி பற்றி பேசும் அதே நேரத்தில், இன்னும் பெரும்பான்மையாக இது ஆண்கள் ஆதிக்கம் செய்யும் சமுதாயமாகத் தான் இருக்கிறது. இந்த நிலையில், ஒரு பெரிய அளவில் தன் நிர்வாகத் திறனால் என்.எஸ்.என் குழுப் பள்ளிகளை பிரமாதமாக வளர்த்திருக்கிறார் அவர். அந்தப் பள்ளி மாணவன் என்ற வகையில் ஒரு சிறந்த கல்வியாளராக அவரைப் பார்த்து நான் வியக்கிறேன்.

பட்டிமன்றம் ராஜா 

நான் வியக்கும் பெண், எங்கள் பட்டிமன்றக் குழுவின் சொத்தாக விளங்கும் திருமதி. பாரதி பாஸ்கர். ஒரு பன்னாட்டு வங்கியின் இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டு, சிறந்த இல்லத்தரசியாகவும் இருந்து, அதே நேரத்தில் சமூகப் பணிகளில், பல்வேறு மேடைகளைத் தனதாக்கி, மிகச் சிறந்த பேச்சாளராகத் தமிழ்த் தொண்டு ஆற்றும் பாரதி பாஸ்கர் அவர்களை  நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.

சிறந்த எழுத்தாளர்; கம்பர் விருது பெற்றவர். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, உலகெங்குமிலிருந்தும் அவருக்கு பிரார்த்தனைகள் நடந்தது, அவர் மக்கள் மத்தியில் பெற்ற அன்பைக் காட்டுகிறது. தன் பேச்சுத் திறனால், தமிழ் வளத்தால், நல்லக் கருத்துகளை எளிமையாக எடுத்துச் சென்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அனிருத் ஆத்ரேயா

ன் பாட்டி (அப்பாவின் அம்மா).  பதின் பருவத்திலேயே திருமணம் ஆனவர். வந்தவாசி அருகே குக்கிராமத்தில் பிறந்து, திருமணமாகி தில்லி என்னும் புத்தம் புது உலகத்தில் போய் இறங்கினார். என் தாத்தாவுக்கு நாலு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. தாத்தாவின் ஒரே சம்பாத்தியத்தில், என் பாட்டிக்கு குடும்பத்தை சரியாக நிர்வாகிக்கும் பொறுப்பு இருந்தது.

ஹிந்தி பேசும் சவாலை சமாளித்தார். அவர் நிர்வாகத் திறமையோடு, வருமானத்துக்குத் தகுந்த செலவும், சேமிப்பும் செய்யலேன்னா, எங்க தாத்தாவால எதையும் சமாளிச்சிருக்க முடியாது.

வசதியான குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்படற குடும்பத்துல வாழ்க்கைப் பட்டாலும், அந்த சின்ன வயசுல தன்னை மாத்திக்கிட்டு பக்குவமா குடும்பம் நடத்தினாங்கன்னு நெனைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கு. அவங்க மட்டும் படிச்சிருந்தாங்கன்னா நிச்சயம் பெரிய ஆளா வந்திருப்பாங்க.

ஆனந்த் அரவிந்தாக்ஷன்
அம்மாவைப் போற்றாமல் இக்கட்டுரை முழுமை பெறாது என்பதால், ஆனந்த் அம்மாவைப் பற்றிக் கூறுகிறார்.

என் வாழ்க்கையையும், என் சிந்தனையையும் உருவாக்கிய என் அம்மா, காலத்தைக் கடந்து யோசிச்ச ஒரு பெண். நான் கர்னாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற நிலையில, ‘நான் ’ என்ற எண்ணம் எனக்குத் தலை தூக்கியபோது, என்னைத் தரை மேல நடக்க வெச்சவர். அம்மா முறையா சங்கீதம் கத்துக்கலேன்னாலும், ஒரு பாட்டுக்குள்ள இருக்கும் உணர்ச்சிகளை கவனிக்கவும், அனுபவிக்கவும் கற்றுத் தந்தார். திருமண வாழ்க்கையில் பரஸ்பர மரியாதை என்ற விஷயத்தை அவங்களைப் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.

என் அப்பா இசைக்கலைஞர் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் வேலை என்பது இருக்காது. அதை எங்க அம்மா மிக நேர்த்தியாக சமாளிச்சது அழகு. நான் குறைப்படாமலும், நன்றியுணர்வோடும் இருப்பது அவங்களாலதான்.

1 COMMENT

  1. வித்தியாசமான பார்வையில் ஆண் பிரபலங்களை கொண்டு தங்களை‌ வியக்க வைத்த பெண்களைப் பற்றி கூற வைத்தது மிகவும் நன்றாக இருந்தது. சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி அமைந்த கட்டுரை பிரமாதம் .பாராட்டுக்கள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...