0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

படங்கள் : பிரபுராம்

” படத்துல ஏன் வில்லன் கோஷ்டியை ஹீரோ ஒரு டெம்போவுல
துரத்திட்டுப் போய் சண்டை போடறாரு?”
“படத்துல ‘டெம்போ’ இல்லைனு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க!”
-வி. ரேவதி, தஞ்சை

…………………………………………

“எதிர் வீட்டு பாட்டி அடிச்சதுல அந்த தாத்தாவோட
32- பல்லும் கொட்டிப் போச்சா! எப்படிங்க?”
“தாத்தா பல் செட் தானே கட்டிருந்தாரு”
-வி. ரேவதி, தஞ்சை

…………………………………………

“குறிப்பிட்ட வயசுக்கு மேல ஹோட்டல்ல சாப்பிடறதை
அறவே நிறுத்திடறதுதான் நல்லது.”
“செரிமானம் ஆகாதுன்னா?”
“இல்ல… வயசாயிட்டதால, மாவாட்றது கஷ்டமா இருக்கு!”
-வி. ரேவதி, தஞ்சை

…………………………………………

“எதிர் வீட்டுப் பொண்ணு ஒரு ஐஸ் கம்பெனி அதிபரோட மகனை உருகி, உருகி காதலிச்சா… அவன், அல்வா கொடுத்துட்டு வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு போயிட்டான்!”
“அடடா… அப்புறம்?”
“இப்ப, உறைஞ்சு போய் உட்கார்ந்திருக்கா….!”
-வி. ரேவதி, தஞ்சை

…………………………………………

“ரொம்ப நேரமா கதவை தட்டியும் ஏன் சார் திறக்கலை?”
“கடன்காரப் பசங்கதான் வந்துட்டாங்கன்னு நினைச்சுட்டேன் சார்!
-வி. ரேவதி, தஞ்சை

…………………………………………


“தேர்தல் பிரசாரத்தில், ‘ஸ்நேக்ஸ்’ சுட்டபோது, தலைவருக்கு, தீப்புண் ஏற்பட்டுவிட்டது!”
“அதுதான்… ‘வடை’யாளம் மறைய,
நீண்ட நாளாகுமான்னு டாக்டரிடம் விசாரிக்கிறாரா?”

-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

…………………………………………

“போருக்கு எதற்கு சானிடைஸர் மன்னா?”
“எதிரி, சுகாதாரப் பிரியன்… கைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டால்தான், அவன், கால்களைத் தொடவே அனுமதிப்பான் அமைச்சரே!”
-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

…………………………………………


“வாய்க்கு ருசியா சாப்பிடணும்போல இருக்கு!”
“மனைவிகிட்ட சொல்ல வேண்டியதுதானே?”
“சொல்லிட்டேனே ஊருக்கு போயிட்டு வான்னு”
எஸ். ஸ்ருதி, சென்னை

…………………………………………

“நாம மெகா சீரியலை ரொம்ப இழுத்துட்டோமோ?”
“ஏன் சார்?”
“இல்லே, ஹுரோயின் தனக்கு அறுபதாம் கல்யாணம்னு சொல்லி இன்விடேஷன் குடுத்துட்டுப் போறாங்களே!”
எஸ். ஸ்ருதி, சென்னை

…………………………………………

“என்னங்க! உங்க உடம்பெல்லாம் காயம்?”
“ஒருத்தர் ஜோக் ஒண்ணு சொன்னாரு. அதைக் கேட்டிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.”
ஜி. பாபு, திருச்சி

……………………………………

எதற்கு நம்ம பையனை இப்படி போட்டு அடிக்கிறீங்களே… ஏன்?”
“கடிதத்தை அவனிடம் கொடுத்து தபால்பெட்டியில் போட்டுட்டு வாடான்னு சொன்னா, ‘தபால் பெட்டி பூட்டி இருக்குது’ன்னு கடிதத்தை போடாமல் திரும்பி வந்திட்டான்.”
-ஜி. பாபு, திருச்சி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...