மகளிர் தின சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி!

மகளிர் தின சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி!

Published on

-ஜி.எஸ்.எஸ்.

ஆயிரம் வகை புதிர்கள் இருந்தாலும், குறுக்கெழுத்துப் புதிர் போல
குஷி தரும் புதிர் உண்டா?

இதோ… உங்கள் பொது அறிவை சோதிக்க, குறுக்கெழுத்துப் புதிரைத் தந்துள்ளோம். குலுக்கல் முறையில் 10 பேருக்கு பரிசு வழங்கப்படும். ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் mm@kalkiweekly.com. சப்ஜெக்ட்டில் குறுக்கெழுத்துப் புதிர் என்று எழுதி அனுப்பவும். கூடவே உங்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் அவற்றையும் சேர்த்து மார்ச் 8 க்குள் அனுப்பவும்.

குறிப்புகள்:

இடமிருந்து வலம்:

  1. 'சில நேரங்களில்' தேசிய விருது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! (4)
  2. டெல்லி முதல்வர் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் (3)
  3. நவீன மீரா என்று அறியப்பட்டவர் பிரபல இந்தி கவிஞரான ____தேவிவர்மா (2)
  4. எம்.எல்.வி. என்று பரவலாக அறியப்பட்டவர் எம்.எல். வசந்த_____ (3)
  5. எழுத்தாளர் சுஜாதாவின் பிரபல நாவல்களில் ஒன்று '_______, இளம் மனைவி' (3)
  6. பந்துவராளி ____த்தில் அமைந்த பாடல் வாணி ஜெயராமுக்கு தேசிய விருதை பெற்று தந்தது (2)
  7. சங்க காலத்தைச் சேர்ந்த பிரபல பெண் கவிஞர் (4)
  8. பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற இளம்பெண் (3)
  9. சிறந்த பின்னணிப் பாடகியாக தேசிய விருது வாங்கிய முதல் பெண்மணி (3)
  10. இந்த ஹிந்தி நடிகை திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரருடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொண்டது பரபரப்பான செய்தியானது (2)

 மேலிருந்து கீழ்:

  1. சமீபத்தில் மறைந்த இந்திய இசைக் குயில் (2)
  2. தேசிய கிரிக்கெட் குழுவில் இடம்பெற்ற, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை (3)
  3. இந்திராவை இயக்கியவர்! (4)
  4. காவிய நாயகி மணிமேகலையின் தாய் (3)
  5. பொன்னியின் செல்வனின் தமக்கை (4)
  6. சென்னையின் முதல் பெண் மேயர் _____ செரியன் (2)
  7. தற்போதைய இந்திய நிதியமைச்சர் (4)
  8. இந்திய விண்வெளி வீராங்கனை எனும்போது ________ சாவ்லா நினைவுக்கு வருவார் (4)
  9. தமிழ் திரைப்பட கோரியோகிராஃபர்களில் குறிப்பிடத்தக்க பெண்மணி (2)
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com