0,00 INR

No products in the cart.

மெகா சீரியல் காமெடிகள்!

FB பகிர்வு! மங்கையர் மலரில் பதிவு!
  • இன்ஸ்டன்ட் வில்லத்தனம் பண்ணுவதற்கு இவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் செல்ஃபோன்தான்.
  • சீரியலில் மட்டும்தான் குடும்ப சண்டை ஹாஸ்ப்பிடலில் அரங்கேறும். ஒரு காட்சி முடிந்ததும் நமக்கு டவுட் வந்திடுமே என்று திடீரென நர்ஸ் அல்லது டாக்டர் வந்து சத்தம் போடுவர்.
  • ஒரு சில சீரியல்களில் வீட்டைக் கவனிப்பது, சமையல் செய்வது என எந்த உருப்படியான வேலையும் செய்யாமல் சதா சதிதிட்டம் தீட்டுவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்களே! அது எப்படி? இதுதான் மெகா சீரியல் காமெடியோ!
  • பலரும் கூறியுள்ளதுபோல் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் பெற்றோர்கள் தலைமுடி நரைப்பதில்லை. இந்த மேஜிக்தான் நம்பர் ஒன் மெகா சீரியல் காமெடி.
  • எது எப்படியோ…. நம் மங்கையர் மலரில் குமுறுவதற்கு கன்டென்ட் கொடுத்த மெகா சீரியல் வாழ்க.
    – நளினி ராமச்சந்திரன்

டைமுறைக்கு ஒத்து வராதது எல்லாம் சீரியலில் பார்க்கலாம். குழி தோண்டி புதைத்த பிறகு எலி வளை தோண்டி ஒரு மனிதன் வெளி வருதல் இது… என் மனதில் இருந்த ஒரு பெரிய போராட்டம் ஆகும். ஒரு கதை முடிய 5 வருடத்திற்கு மேல் ஆகும். கதையின் தொடக்கத்திற்கும், முடிவிற்கும் சம்பந்தமே இருக்காது. காலையில் எழுந்ததுமே சீரியலில் மூழ்கிவிட்டு தன் எதிரில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே வாழ்க்கையை கடந்து செல்வதால், ஒரு சிலரின் வாழ்க்கையே காமெடியா மாறிவிடுவதற்கும் வழிவகுக்கும் கொடுமை இது!
– கலைமதி சிவகுரு

‘சின்னப்பூவே மெல்ல பேசு’ன்னு ஒரு டப்பிங் சீரியல். பிரபல தொலைக்காட்சி சேனலில் வருது! ஒரு நல்லவனை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட வில்லி, தன் காதலன் மூலம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட்டதாக இன்னொரு வில்லியின் அம்மாவிடம் சொல்கிறாள்!ஆறேழு மாசமாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறாள்!ஆனால் வயிறு ஒரு மில்லிமீட்டர் கூட முன்னே வரவில்லை! பார்ப்பவர்களை முட்டாளாக நினைக்கிறார்கள் போலும்!
– ஆ.கலைமலர்

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கற பொண்ணு ஆறு வருஷம் கழிச்சும் செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கும். சீரியலில் அத்தனை சுறுசுறுப்பு!
தூங்கி எழும் போது கூட ஃபுல் மேக்கப் தழையத் தழைய பட்டுப் புடவை, நகைகள் சகிதம் பெண்களும், வீட்டில் பூஜையறை உட்பட அனைத்து இடங்களிலும் ஷூக்கள் அணிந்த காலுடன் ஆண்களும், வயதுக்கு மீறிய பேச்சு பேசும் குழந்தைகளும் நிறைந்தவையே மெகா சீரியல்கள்.
– ஆர். பிரசன்னா

ஹீரோயினுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தணும்னா அவள் சமைச்ச சாப்பாட்டில் உப்பு, மிளகாய்ப் பொடியை அள்ளி, அள்ளி போடுவது, ஒருத்தர் பேசினால், அந்த சீனில் உள்ள பத்து பேரின் முகபாவங்களையும் மாறி மாறி காட்டுவது, (அதற்குள் சீரியலுக்கான நேரம் முடிந்து விடும்) மறுநாள் மீண்டும் வேறு டயலாக் . அத்தனை பேரின் வேறு முக எக்ஸ்பிரஷன்ஸ்… போதும்டா சாமி.
– சாந்தினி.என்

ரண்டு திருமணமும் விவாகரத்தும் மளிகை கடை பொருள் போல மலிந்து காணப்படுகிறது தொலைக்காட்சி தொடர்களில்.
– சக்தி

சீரியல் இனிமேல் யாராவது பார்ப்பார்களா என்பது சந்தேகம்! அலுத்துப் போச்சுங்க!
– சந்திரிகா சண்முகம்

சீரியல் பார்க்கும் அனைவருமே பைத்தியகாரர்கள் என்ற நினைப்பு.
4 மாதத்தில் முடியவேண்டிய கதையாய் இருந்தாலும் 4 வருடங்கள் இழுத்தடித்து, யார் இதில் நடிக்க ஆரம்பித்தார்கள், இப்போது யார் வருகிறார்கள் என வயதானவர்களை குழப்பி, தேவையே இல்லாமல் வில்லிகளை புகுத்தி, வேண்டாம் சாமி சீரியல்களுக்கு ஒரு கும்பிடு! 1975க்கு முன் எப்படி வாழ்நதோமோ அப்படியே இருந்து விடலாம், என நினைக்க வைக்கிறது.
– பத்மா முரளி

ஹாஸ்பிடல், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கடத்தல், ஃபைட் சீன், ஆக்சிடென்ட் என்று கண்டிப்பாக சில பல சீன்கள் இருக்க வேண்டும். எல்லா கஷ்டங்களும் (அளவுக்கு அதிகமாக) ஹீரோயினுக்குத்தான் வர வேண்டும். அப்படி வராவிட்டால் அவள் ஹீரோயினே கிடையாது. ஹீரோவுக்கு கல்யாணமாகி இருந்தாலும் அவன்மேல் ஆசைப்படும், அவனை மனைவியிடம் இருந்து பிரிக்க போராடும் ஒரு கேரக்டர் கட்டாயம் வேண்டும்.

பணக்காரன் ஏழை ஆக வேண்டும், மீண்டும் கஷ்டப்பட்டு போராடி பணக்காரன் ஆக வேண்டும். அம்மனிடம் வேண்டி தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றும் சீன் வேண்டும். நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லும் சாமியார், ஜோசியர் கட்டாயம் வேண்டும். ஆக மொத்தம் எதுவுமே நார்மலாக எதார்த்தமாக இருக்கக் கூடாது. அதுதான் மெகா சீரியல்!
– காயத்ரி வெங்கடராமணன்

ந்த தொலைக்காட்சி தொடர்களைப் பாா்த்தாலும் திருமணம் செய்வது ஒருவரை. காதலிப்பது ஒருவரை என இரண்டு பேருடன் குடும்பம் நடத்துறது சர்வ சகஜம். அனைவரும் அமா்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. காலப்போக்கில் தியேட்டரில் சினிமா பார்ப்பது குறைந்தது போல் டிவி தொடர்கள் பார்ப்பதும் குறைந்துவிடும்.
– சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

செம்பருத்தி சீரியலுக்கு இல்லையா சார் ஒரு எண்டு. வருச கணக்கா போகுது. நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது தொடங்குச்சு. இப்ப என் நாலு வயசு பொண்ணு அந்த சீரியலை பார்த்து, ஏன்மா பார்வதியை திட்றாங்கனு? கேட்டாளே பார்க்கலாம்! அதுக்கு பிறகு ஏன் வச்சேன் அந்த சீரியலை. என் மகள் பார்த்தாச்சு.என் பேத்தி வந்து பார்க்குற வரைக்கும் ஓடும் போல. அதுவும் அந்த சமையல்காரி பார்வதி ஒரே நாளில் அந்த மொத்த ஜமீனுக்கும் சொந்தக்காரினு சொல்லி ஒரு டிவிஸ்ட் வச்சாங்க பாருங்க நாங்க அப்படியே ஷாக் ஆகிடோம்.
– தீபா திபிகா

சீரியல் எப்போது ஆரம்பமாகும் எ‌ன்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த காலம் போய் சீரியல் பற்றி நினைத்தாலே பதறி ஓடவைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஒரே மாதிரியான கதைக்களம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வில்லிகளின் பேச்சும் செயலும் வெறுப்பேற்றி விடுகிறது. பரிகாரம் என்ற பெயரில் கோவிலில் நடைபெறும் செயல்கள், அதனை தடுக்க வில்லிகள் போடும் ஒரே மாதிரியான திட்டங்கள் என கடவுளையும் விட்டு வைப்பதில்லை. ஓவர் மேக்கப் புடன் சுற்றி வருவது. எதிலும் எங்கேயும் லாஜிக் என்பதே இல்லை…
– வாணி கணபதி

வ்வளவு சேனலில் வரும் ஒரு தொடராவது பாசிட்டிவ் விஷயங்களையோ,
உறவுகளின் மேன்மையையோ சொல்கிறதா என்று பார்த்தால் இல்லை.
ஒரு தொடரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன். தவறான பழக்கத்திலிருந்து மீண்டேன் என்று யாரேனும் சொல்ல முடியுமா? இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா? யார் கண்ட்ரோல் பண்ண வேண்டும் என்பது போன்ற கேள்விகள் தோன்றுகிறது. பதில் தான் தெரியவில்லை. ஊரை திருத்துவதை விட நாம் தெளிவாக இருப்போம் என எண்ணி எங்கள் வீட்டில் தலைப்பு செய்தியும், பக்தி சேனல், சமயங்களில் ஸ்போர்ட்ஸ் சேனல் என செலக்டிவ்வாக பார்ப்பதில் டென்ஷன் குறைகிறது.
– மகாலக்ஷ்மி சுப்ரமணியன்

தொலைக்காட்சி தொடர் என்றால் இயக்குனர் சிகரம் தயாரிப்பில் வெளிவந்தவை மட்டுமே. இப்போது எந்த தொடரையும் பார்ப்பதில்லை. நிறுத்திவிட்டேன்.
-அரங்கநாயகி அரசன்

ங்க பக்கத்து வீட்டு ஆறு வயசு பொண்ணு பாட்டியிடம் சொன்னாள்,”ஆச்சி..இன்னிக்கு கல்யாணத்தோட தொடரும் போட்டுடுவாங்க. நாளைக்குத் தான் பர்ஸ்ட் நைட்.” விவரம் தெரியாமல் போற போக்கில் சொன்னாலும், ஷாக்காகிட்டோம். சீரியல்களில் கல்யாணத்தோட நிப்பாட்டிடலாமே. தேவையேயில்லாம ஒரு வாரத்துக்கு பர்ஸ்ட் நைட் காட்சி வேண்டாமே. கட் பண்ணிட்டா நல்லது.
– கோமதி சிவாயம்

காதில் பூவைத்து வருகிறது சீரியல்கள். வேலக்காரிகளைக் கூட வைத்து செய்யும், அபத்தமான சீரியல்கள். விளம்பரங்கள்தான் ஜாஸ்தி. ஒரு மாதம் வருபவர் அடுத்து அவருக்கு பதில் இவர். ஒரே ரொமான்ஸ் வேறு. திருமணமானவரை அவரிடம் இருந்து பிரிப்பது மேக்கப் பட்டுப் புடவை செருப்புடன் வீட்டில் நடப்பது ஐந்து வருடங்களாக இழுத்தடிப்பது கர்ப்பிணிகள் ஆட்டோவில் வேகமாக செல்வது என ஒரே அபத்தம். ஒன்லி காமெடிக்கு போய்விட்டோம்.
– வசந்தா மாரிமுத்து

தொலைக்காட்சியை திறந்தாலே தொல்லை தரும் சீரியல்கள். வில்லியாக மாமியார் என்றால் கள்ளமில்லா மருமகள். கொல்லியாக மகள் என்றால் வில்லனாக மருமகன். தலையாட்டும் மற்ற ஆண்கள். அலங்காரம் ஆடம்பரம் என்று அறுவையான சீரியல்கள். அவசியம் தடை செய்யப்பட வேண்டும்.
– வெ.ஜெயலட்சுமி

வர்கள் செய்யும் அக்கப்போர் அட்டகாசம் சொல்லி மாளாது. கல்யாணம் முதல் கடைசி ஊர்வலம் வரை விளாவாரியாக காட்டாமல்… கதையில் நல்ல கரு… திருப்பம்… குடும்பம் சூழலை சமாளிக்கும் விதம், இப்படி நற்கருத்துகளை, இச்சமூகம் அறிய, இளைய தலைமுறை கற்று கொள்ள நல்ல கதைகளை காமெடியும் கலந்து எடுக்கணும். ஆமா எனக்கு ஒரு சந்தேகம்… இந்த தலைக்கவசம், முகக்கவசம், சமூக இடைவெளி, இதெல்லாம் சீரியலுக்கு கிடையாதா? காட்சிகளை அந்தந்தக் காலத்தை ஒட்டி எடுக்கணும். தொடர் தயாரிப்பு கவனத்திற்கு….. உங்களுக்கும் நிறைய சமூக கடமைகள் இருக்கு.
-கணபதி லதா

மெகா சீரியலில் பழைய மெட்டி ஒலி மட்டுமே பார்க்கிறேன் அது தான் வாழாக்கையை தத்ரூபமாக சித்தரிக்கிறது. இதற்கு இப்பொழுது இருக்கும் ஆதரவை பார்த்தாவது தயாரிப்பாளர்கள் திருந்தமாட்டார்களா என்ற வருத்தம் ஏற்படுகிறது.
– ராஜலக்ஷ்மி கெளரிசங்கர்

ணவன்மார்களை சார் என்று அழைக்கும் கலாச்சாரம், திரைப்படத்தைப் போல் எதற்கெடுத்தாலும் பாடல் காட்சி, இரண்டு பெண்டாட்டி கதை அதை அவர்களுக்குள் ஒருவரே வரவேற்றுக்கொள்வது, புதிது புதிதாக குடும்பத்தில் குழப்பத்தை எப்படி ஏற்படுத்துவது, சந்தேகித்தல், ஒரே செட்டிங்கை பல நாடகங்களுக்கும் பயன்படுத்துவதற்காகவே கான்செப்ட் திணித்தல் என பல்வேறு கோமாளித்தனங்கள் மெகா சீரியல் உலகை வலம் வருகிறது.
– பார்வதி முத்தமிழ்

நேக சீரியல்கள் செம காமெடி… கதைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத மேக்கப், நகைகள்… எதார்த்தம் இல்லாத கதை நகர்வுகள்… குழந்தைகளைக் கூட விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்கள்.. பெரிய விஷயங்களை அனாயசமாக பேசும் குட்டி குழந்தைகள்.
மொத்தத்தில் சமுதாயத்தை சீரழிக்க சீரியல்கள் மட்டும் போதும் .
– தி.வள்ளி

தூங்கும் போது கூட நிறைய நகை போட்டு… பட்டுபுடைவை கட்டுவது, படில எண்ணெய் கொட்டி வழுக்கி விழ வைப்பது… சாப்பாட்ல உப்பை அள்ளிப்போடுவது.. பணத்தை அவங்க பைல ஒளிச்சு வச்சு திருட்டு பட்டம் கட்டுவது… இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே பார்ப்பது? விடுடா சாமி!
– சரோஜா அருணாசலம்

ன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன்”
“நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்க்கிறேன்”
“கர்ப்பத்தை கலைக்க வழி செய்கிறேன்”
இந்த மாதிரி அபத்தமான டயலாக்குகள்… சரியான போர்!
– லலிதா பாலா

சிரியல் பக்கமே தலை வைத்து படுத்ததில்லை. அதை பார்த்தால் வாழவே பிடிக்காது. நீங்க வேற.
– கதிர்மகள்

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...