0,00 INR

No products in the cart.

நம் வீட்டுத் தோட்டத்தில் – 3

தொகுப்பு : லதானந்த்

செடி டாக்டர் என பலராலும் அறியப்படும் கோவை ராமச்சந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்கிறது...

செடி நடத் தேவையான க்ரோ பேக் வாங்கியாச்சு… தேங்காய் நார்க் கழிவு தயார் செஞ்சாச்சு… மண் புழு உரமும் ரெடி…

அடுத்து விதைகள் ஊன்ற வேண்டியதுதானே?

மாம். பொதுவாக நாட்டு விதைகளை இடுவதே நல்லது. இதனால் கிடைக்கும் காய்களிலிருந்து அடுத்தடுத்து விதைகளை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும். உயரம் குறைவான தொட்டிகள் அல்லது க்ரோ பேக்கில் கீரை விதைகளை நேரடியாய்த் தூவ வேண்டும்.
வெண்டை, அவரை போன்றவற்றின் விதைகளையும் நேரடியாய் ஊன்ற வேண்டும். கத்தரி, மிளகாய், தக்காளி போன்றவற்றை நாற்று விட்டு எடுத்து நட வேண்டும்.

அவரை, வெண்டை, பூசணி, பாகற்க்காய் போன்றவற்றின் விதைகளைத் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்துவிட்டு ஊன்ற வேண்டும். அப்படிச் செய்தால் விரைவாக முளைக்கும். மிளகாய், வெந்தயம் இவற்றையெல்லாம் நம் சமையலறையில் இருந்தே எடுக்கலாம்.

கீரைகளின் விதைகளைத் தூவி, மேலே மண்ணை லேசாகப் போட வேண்டும். அதே போல மிளகாய், தக்காளி, கத்தரி விதைகளையும். மற்றும் இதர பெரிய விதைகளையும் மண்ணில் விரலால் சிறு துவாரமிட்டு, அதில் விதையை ஊன்றி மேலே மண்ணைப் போடவேண்டும். அதிக ஆழம் வேண்டாம். எந்த விதை போட்டாலும் நேரடியாய் மழைத் தண்ணீர் விழும் இடத்தில் வைக்க வேண்டாம். காலை வெய்யில் படும் இடத்தில் மட்டும் வைக்க வேண்டும். மதிய வெய்யில் பட்டால் இளம் செடிகள் வாடி விடும்.
முளை விட்டதும், 10 மி.லி. பஞ்சகாவ்யா (இதுவும் எல்லா நர்சரியிலும் கிடைக்கும்) ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, ஸ்ப்ரே செய்யவேண்டும். இது பூச்சிகளின் தாக்குதலையும் தடுக்கும், செடி நன்கு வளர உதவும் பயிரூக்கியாகவும் செயல்படும்.

கத்திரி, மிளகாய், தக்காளிச் செடிகள் ஒரு ஜாண் அளவு வளர்ந்ததும், தயார் செய்து இருக்கும் க்ரோ பேக்கில், ஒரு பையில் இரண்டு செடி வீதம் எடுத்து நடவேண்டும். மாலை வேளையில் நடுவது நல்லது. நட்டவுடன் தண்ணீர் விடவேண்டும். இவற்றையும் நேரடி மதிய வெய்யில் தாக்காத இடத்தில் – பத்து நாட்கள் செடி வேர் பிடிக்கும் வரை – வைக்க வேண்டும். எந்த விதை போட்டாலும் தண்ணீரை வேகமாய்ப் பாய்ச்சாமல், மெல்ல ஸ்ப்ரேதான் செய்ய வேண்டும்.

எந்த விதை எப்பொழுது இட வேண்டும்? கால நிலைக் கணக்கு உண்டா?

ட்டம் பார்த்துப் பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை. இந்தப் பழமொழிகள் எல்லாம் சொல்வது ஒவ்வொரு செடிகளுக்கும் பிரத்யேகக் காலநிலை உண்டு என்பதைத்தான் குறிக்கின்றன. பொதுவாய் ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் நமக்கு சரிப்படும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல் போன்றவற்றை இரு பட்டங்களிலும் வைக்கலாம்.

ஆனால் அவரை, பீன்ஸ் இவற்றை ஆடிப்பட்டத்தில் மட்டுமே வைக்க வேண்டும். பூ விடும்பொழுது, தட்டவெப்பநிலை குளிர்ந்து இருந்தால் மட்டுமே காய் பிடிக்கும். அதே போல வெங்காயம், கீரைகளை தைப்பட்டத்தில் வைப்பதே நல்லது. இரண்டுக்கும் மழை ஆகாது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்த விதையும் போட வேண்டாம். வெயிலில் எதுவும் தாக்குப்பிடிக்காது. ஆடிப்பட்டம், அதாவது ஜூலை வரை செடி போடாமல் அதற்கு பதில் மண்கலவை தயாரித்தல், விதை சேகரிப்பு வேலைகளைப் பார்க்கலாம்.

பழைய மண்ணைக் கீழே கொட்டி அதில் இருக்கும் வேர்கள், தண்டுகளை நீக்கி விடவும். இரண்டு நாட்கள் நன்கு காய்ந்ததும் அதைத் தொட்டி அல்லது க்ரோ பேக்கில் போட்டு, அத்துடன் தேவையான உரங்கள் சேர்த்து, தினமும் அளவாய்த் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வர வேண்டும். அடுத்த விதைப்புக்கு அந்த மண் தயாராகிவிடும்.

உரங்களைப் பற்றி சொல்லுங்கள்…

ண்புழு உரத்தை வீட்டில் தயாரிப்பது கொஞ்சம் கடினமான வேலை. மொட்டை மாடியில் நிழலான இடம் இருந்தால் தயாரிக்கலாம். மழைத் தண்ணீரும், வெயிலும் விழாத இடத்தில் ஒரு டப்பில் நான்கு பக்கமும் துளை போட்டுக்கொள்ளுங்கள். கீழ்ப் பக்கம், காய்ந்த இலைகள் அல்லது கோகோ பித் போடவும். கடையில் வாங்கிய மண் புழு உரத்தை அதன் மீது இடவும். உரம் ஈரமாய் இருந்தால் அதில் மண் புழுவும் அதன் முட்டைகளும் கட்டாயம் இருக்கும். பசும் சாணம் அல்லது காய்ந்த சாணம் கிடைத்தால் அதையும் சேர்க்கலாம்.

இப்பொழுது மீண்டும் காய்ந்த இலைகள், காய்கறித் தோல்கள், பழுத்த பழங்களை ஒரு அடுக்காகப் போடுங்கள். இதைத் தவிர வேறு எதுவும் போடவேண்டாம். இப்படி அடுக்கு அடுக்காகப் போட்டு மேலே காகித அட்டைகள் இருந்தால் அவற்றைச் சிறு துண்டுகளாகக் கிழித்துப் போடவும். அவ்வப்பொழுது வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிக்கவும். விரைவில் புழுக்கள் நிறைய உருவாகும். அவற்றின் கழிவுகள் மேல் பக்கம் சேகரம் ஆகும். அதுவே மண்புழு உரம். முக்கிய விஷயம் ஈரப் பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ஆனால் அதே சமயம் தண்ணீர் அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.

தொழு உரம் அல்லது மாட்டுச் சாண உரம் எப்படி தயார் செய்வது?
காய்ந்த மாட்டுச் சாணம் அல்லது தொழு உரம் கிடைக்கவில்லை என்றால், பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். வரட்டிகளைப் பயன்படுத்தலாம். பத்து வரட்டி வாங்கி, கொஞ்சமாய்த் தண்ணீர் தெளித்து ஒரு பக்கெட்டில் வைத்து விடவும். லேசாக மண்ணை மேலே தூவவும். ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், நல்ல உரம் தயாராகியிருக்கும். கையால் உதிர்த்தால் பொல பொல வென்று உதிரும். தினமும் பிரட்டிப்போட வேண்டும். தண்ணீர் இல்லாமல் காய்ந்துப்போக விடக்கூடாது. நீர் தெளித்துக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சமாய்த் தோட்டத்து மண் தெளிப்பது நல்லது. அதில் உள்ள நுண்ணுயிர்கள் மக்கவைக்க உதவும்.

காம்போஸ்ட் தயாரிப்பது ரொம்ப கடினமா?

டுத்தது காம்போஸ்ட் என்கிற காய்கறிக் கழிவு உரம். இதைச் செய்யக் கற்றுக்கொண்டால், கடையில் காசு கொடுத்து உரம் வாங்கும் செலவே இல்லை. மண்புழு உரம் செய்வது போலத்தான் இதுவும். கழிவுகள் மக்க, மோர் தெளிக்க வேண்டும். கழிவுகளின் ஈரப்பதம் அதிகமானாலும் மிக அதிகமாய்க் காய்கறி கழிவுகள் போட்டாலும் நிறைய மக்காட்ஸ் (maggots) என்ற புழுக்கள் உருவாகும், இவை கழிவுகளை மக்கச்செய்ய உதவும் என்றாலும், புழுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்க காய்ந்த இலைகள், மண், கோகோ பித் முதலானவைற்றைச் சேர்க்க வேண்டும்.

காம்போஸ்ட் செய்யவே ஸ்பெஷலான மண் குடங்கள், பிளாஸ்டிக் பக்கெட் போன்றன கிடைக்கின்றன. கழிவில் இருந்து வெளியேறும் நீரை, காம்போஸ்ட் டீ என்பார்கள். அதில் ஐந்து மடங்கு நீர் சேர்த்து செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

காம்போஸ்டுக்கு இன்னும் ஒரு பெயர் கருப்புத் தங்கம். செடி வைப்பவர்கள், காம்போஸ்ட் தயாரிப்பதால் அவர்கள் வளர்க்கும் செடிகளுக்கு உரம் கிடைக்கிறது. அடுத்து சுற்றுசூழல் மாசு அடைவதை உங்களால் இயன்றளவு தடுக்கவும் முடிகிறது. காம்போஸ்டில் நுணுக்கிய முட்டை ஓடு போடலாம். மற்ற எந்த இறைச்சி கழிவுகளையும் சேர்க்க வேண்டாம்.

உரங்களைப் பற்றி இத்தனை விவரங்களா?

ன்னும் இருக்கிறது. நம் செடிகளுக்கு அன்றாடம் அரிசி, பருப்பு கழுவும் தண்ணீரை ஊற்றலாம். வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு, அந்த தோலை ஊற வைத்து, மறு நாள் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்துச் செடிகளுக்கு ஊற்றலாம். சமையல்செய்ய உபயோகித்த பூண்டு, வெங்காயத் தோலையும் இதே போலப் பயன்படுத்தலாம்.

தோசை மாவு மீந்து போனால், ஒரு பெட் பாட்டிலில்போட்டு மூடிவைத்து விட்டு, நான்கு நாட்கள் கழித்து, பத்து மடங்கு தண்ணீர் சேர்த்து, செடிகளுக்கு ஊற்றலாம். இதே முறையில் பழைய சாதம் இருந்தாலும் செய்யலாம். இவை மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக உதவும்; அதனால் செடி செழிப்பாய் வளரும்.

பழைய மோரை ஐந்து நாட்கள் வைத்திருந்து, பத்து மடங்கு தண்ணீர் சேர்த்தும் உபயோகிக்கலாம். அப்படியே போட்டால் ஆசிட் அடித்தது போலச் செடி கருகி விடும். மோரை பெட் பாட்டிலில் வைத்திருந்தால், தினமும் மூடியைத் திறந்து கொஞ்ச நேரம் வைத்திருந்து, அதில் உருவாகும் வாயுவை வெளியேற்றி விடவேண்டும், இல்லாவிட்டால் பாட்டில் வெடித்துச் சிதறும்; முகத்தில் பட்டால் மிகுந்த அபாயம். மாடித் தோட்டம் அல்லாது, பால்கனியில் தொட்டிகளில் செடி வளர்ப்பவர்களுக்கு மேற்சொன்ன குறிப்புகள் உதவும். உதவும்.

செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படிப் பாராமரிப்பது?

(பசுமை பேசுவோம்…)

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...

 ‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

 பகுதி -2 -ஜி.எஸ்.எஸ். ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.  ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி.  ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள்...

பாட்டொன்று கேட்டேன்…

இது மங்கையர் மலரின் விவித பாரதி… பகுதி-3 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க இருக்கும் பாடல்... தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல் . உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள்...