0,00 INR

No products in the cart.

25 லட்சம் பரிசு பெற்ற லெமன் வடிவ கேக்!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

று மாதங்களாக அவ்வப்போது கால இடைவெளி விட்டு நடைபெற்று இறுதிச் சுற்றுக்கு வந்து நிறைவு பெற்றுள்ளது மாஸ்டர் செப் இந்தியா தமிழ் (MASTER CHEF INDIA – TAMIL) சமையல் கலைப் போட்டிகள். அதனை ENDEMOL SHINE, BOMBAY. மற்றும் INNOVATIVE FILM CITY, BANGALORE ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளன. அதன் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர்க்கு விருதும் இருபத்தைந்து லட்ச ரூபாய் பரிசும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இறுதி நாள் விழாவிலும் பங்கேற்றுப் பரிசளித்துப் பாராட்டியுள்ளார். இருபத்தைந்து லட்ச ரூபாய் பரிசு வென்றவர் திருச்சியைச் சேர்ந்த தேவகி விஜயராமன். அவருக்கு வயது இருபத்தொன்பது. அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

என்ன படித்துள்ளீர்கள்? என்ன பணியில் இருந்தீர்கள்?

ங்கள் பூர்விகம் திருச்சி. அப்பா விஜயராமன் ஓட்டல் தொழில் செய்து வருபவர். நான் பி.காம்., எம்.பி.ஏ., தேர்ச்சி பெற்று ஒரு வருடம் பெங்களூர் இன்ஃபோசிஸில் வேலை பார்த்தேன். பின்னர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அந்த வேலைகளில் ஏனோ என் மனம் ஒட்டவில்லை. பின்னர் எனக்குத் திருமணம் ஆனது. வேலையை உதறித் தள்ளி விட்டு இல்லத்தரசியாக வீட்டில் இயங்கத் தொடங்கி விட்டேன்.

எப்படி சமையல் கலை ஆர்வம் உங்களுக்குள் வேரூன்றியது?

ள்ளி கல்லூரி நாட்களில் வீட்டில் விதம் விதமாக மைசூர்பாகு ரெடி பண்ணி எல்லோர்க்கும் தருவேன். அப்பா அதனை, “நீ செய்வது மைசூர்பாகு அல்ல. திருச்சி மலைக்கோட்டை கற்பாகு.” என்று கிண்டல் செய்வார். அதுவே என்னை இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. மைசூர்பாகு, குலோப்ஜாமூன் என்று எனது ஆர்வத்தை விரிவுபடுத்தினேன். அப்படியே கேக் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டேன்.

முதலில் மைக்ரோ வேவ் அடுப்பில் கேக் தயாரித்து முயற்சித்தேன். அது சரியாக வரவில்லை. அதெல்லாம் கேக் போலவும் இல்லை. மைக்ரோ வேவ் முயற்சியினைக் கைவிட்டேன். நவீன ஓவன் அடுப்பு பதினைந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அப்போது திருச்சியில் “கேக் டெக்கரேசன்” பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்று பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில் தான் முதன்முதலாக கொரோனா முழு பொது ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. அப்போது வீட்டில் இருந்தபடியே கேக் தயாரித்து வெளியே அனுப்பத் தொடங்கினேன். கொரோனா முழு பொது ஊரடங்கு எனக்கு ரொம்பவே கை கொடுத்தது.

அது எப்படி?

கொரோனா முழு பொது ஊரடங்கு நாட்களில் எங்குமே பேக்கரி கடைகள் இல்லை. அந்த நேரத்தில் நான் விதம் விதமாக கேக்குகள் தயாரித்து அதனை வாட்ஸ் அப்பிலும் இன்ஸ்டாக்ராமிலும் பதிவு செய்தேன். வீடுகளில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான அளவு கேக் ஆர்டர் செய்வார்கள். கேக் தயாரித்து அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். அப்படியே அந்தத் தொடர்புகளும் ஆர்டர்களும் எனக்கு விரிவடைந்தன. வாடிக்கையாளர்களே நினைத்துப் பார்த்திடாத வகையில் புதிது புதிதான வடிவங்களில் கேக்குகள் உருவாக்கினேன். அதன் தரத்திலும் ருசியிலும் ரொம்பவே கவனம் செலுத்தினேன். அதுவே எனக்கு நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்தது. சைவ கேக், அசைவ கேக் இரண்டுமே எனக்கு கை வந்த கலையாக மாறிப் போனது.

மாஸ்டர் செப் இந்தியா – தமிழ் போட்டிக்குள் எவ்விதம் உள்ளே நுழைந்தீர்கள்?

டிவியில் எதேச்சையாக சேனல் மாற்றினேன். இது போன்றதொரு போட்டி நடைபெறப் போவதாக அறிவிப்பு பார்த்தேன். நான் இதுவரை பள்ளியிலோ கல்லூரியிலோ எந்த போட்டியிலும் பங்கேற்றது இல்லை. அது ஏனோ தெரியவில்லை. எனது உள் மனது என்னை இந்தப் போட்டியில் கலந்து கொள் என்று உந்தித் தள்ளியது. சற்றே தைரியமாகப் போட்டிக்கு விண்ணப்பித்தேன். தொடக்க நிலை போட்டிப் பயிற்சி தேர்வுக்கு நான் தேர்வானேன். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. காரணம் பொது வெளியில் எந்தப் போட்டிகளிலும் நான் இதுவரை கலந்து கொண்டதே இல்லை. அவ்விதம் இருக்கும் போது மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் போட்டி என்றால் மனம் துள்ளாதா என்ன? பலப்பல கட்டங்களில் தொடக்க நிலை நுழைவுப் போட்டிகள் நடைபெற்றன. அவைகளில் எல்லாம் கடந்து தேர்வாகி வந்து கொண்டே இருந்தேன்.

இறுதிப் போட்டி பற்றி கூறுங்கள்?

நாங்கள் பதினான்கு பெண்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தோம். அது மூன்று கட்ட இறுதிப் போட்டி. மிகவும் கடுமையானப் போட்டி. அவைகள் ஒவ்வொன்றுமே பெரும் சவாலாக இருந்தது. முதல் இரண்டு கட்டங்களில் பத்துப் பெண்கள் வெளியேற்றப்பட்டனர். கடைசி கடைசியான இறுதிப் போட்டிக்கு நான் உட்பட நான்கு பெண்கள் தேர்வானோம். அப்போதே நாங்கள் நால்வருமே வானத்தில் மிதக்கத் தொடங்கி விட்டோம். இறுதிப் போட்டியில் எங்கள் நால்வரின் தயாரிப்புகளையும் நடுவர்கள் இருவர் பரீட்சித்துப் பார்த்து அதன் ருசி மற்றும் தயாரித்த விதங்களை வைத்து மதிப்பெண்கள் வழங்கினார்கள். அவைகளில் எனது தயாரிப்பான லெமன் வடிவ கேக் ஆனது முதல் மதிப்பெண் பெற்றது. ஒரு எலுமிச்சை வடிவிலே ஆன கேக் அது. அதனுள்ளே கிரீம் அடங்கியிருந்தது. அதன் வெளிப்புறச் சுவருக்கு எலுமிச்சைத் தோலின் வண்ணமே தீட்டியிருந்தேன். பச்சை வண்ண இலைகள் மற்றும் காம்புகளையும் இணைத்திருந்தேன். அவ்வளவும் கேக் தான். போட்டியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தந்தது அந்த லெமன் வடிவ கேக். விழா மேடையில் அதற்கான விருதும் பரிசுத் தொகை இருபத்தைந்து லட்ச ரூபாய்க் காசோலையும் எனக்கு வழங்கிச் சிறப்பித்தார் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி. எனக்குப் பரிசு அறிவித்தவுடன் நான் மேடையிலேயே அழுது விட்டேன். எனது ஆனந்தக் கண்ணீரை வெகு நேரமாக என்னால் அடக்க முடியவில்லை.

வாழ்த்துகள்… தேவகி விஜயராமன்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

மகளிர் தின சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி!

5
-ஜி.எஸ்.எஸ். ஆயிரம் வகை புதிர்கள் இருந்தாலும், குறுக்கெழுத்துப் புதிர் போல குஷி தரும் புதிர் உண்டா? இதோ... உங்கள் பொது அறிவை சோதிக்க, குறுக்கெழுத்துப் புதிரைத் தந்துள்ளோம். குலுக்கல் முறையில் 10 பேருக்கு பரிசு வழங்கப்படும்....

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

கவிதைத் துறல்!

1
- பவானி, திருச்சி  சிறப்பு மெளன அஞ்சலி செலுத்த ஊரே திரண்டு வந்தால் இறப்பும் பெறுகிறது சிறப்பு. .........................................................  வாழ்க்கை இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றான பிறகுதான் பலருக்குப் புரிகிறது வாழ்க்கையின் அர்த்தம். ......................................................... வீராப்பு பட்டுப் புடைவையோ பருத்தி ஆடையோ குறுக்கே எதை வைத்தாலும் வெட்டுவேன் வீராப்பு காட்டுகிறது கத்தரிக்கோல். ......................................................... வில்லன் பணம் கதாநாயகன் ஆகியதும் வில்லன் பாத்திரம் ஏற்கிறது குணம். ......................................................... குணம் ஆறுவது சினம் ஆறாதது மன ரணம் ஆறறிவு கொண்டு ஆராய்வது குணம்.

சினிமாவில் பெண்கள்! 

-ஜெஸிகா  நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நடிகைகளுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்த தருணத்திலாவது பேச...

மிதிவண்டி!

சிறுவர் சிறுகதை : மஞ்சுளா சுவாமிநாதன் ஓவியம்: லலிதா "அடுத்ததாக பேசப்போவது செல்வி. கவிதா, ஏழாம் வகுப்பு," என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்தது. கவிதா, மேடைமீதேறி தனது சக மாணவர்களைப் பார்த்தாள், "மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனது...