0,00 INR

No products in the cart.

அந்த ஆறு நாட்கள்!

சவாலே சமாளி!
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்

ரு முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஆசிய அளவில் கொள்முதல் இயக்குனர் என்ற உயர் பதவியை வகித்து வருபவர் சந்திரகலா. ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான மூலப்பொருட்கள் தேவை. அவற்றை பல இடங்களில் இருந்து வரவழைக்க வேண்டியிருக்கும். அதனால் பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், ஒரு பொருள் வரவில்லை என்றாலும் பலபேருக்கு அன்று வருமானம் இல்லாமல் போய்விடும்.

ஒரு கம்பெனியில் தீ விபத்து, மற்றொன்றில் தொழிலாளர் போராட்டம் என்று ஏதாவது நிகழ்ந்தால் அங்கிருந்து வர வேண்டிய உதிரி பாகங்கள் வராமல் நின்றுவிடும்.

தொடர்ந்து வேலை முடங்கிவிடும். இப்படி எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருந்தாலும் லாக்டவுன் முடியும் சமயத்தில் மிகப் பெரிய சவால் ஒன்றை சந்திரகலா சந்திக்க நேர்ந்தது…

“லாக்டவுன் முடிந்து 2021ல் கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸ் முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டம். எங்களை நம்பி இருந்த சிறு கம்பெனிகள், மிஷினரி போன்றவற்றில் அப்போதுதான் உற்பத்தி ஆரம்பமாகியிருந்தது.

புனேயிலிருந்து எங்களுக்கு மெட்டீரியல் சப்ளை செய்யும் ஒரு ஐரோப்பிய நிறுவனம், ‘நாங்கள் எங்கள் கம்பெனியை இன்றிலிருந்து மூடுகிறோம். எங்களுக்கு பெரும் நஷ்டமாகிவிட்டது’ என்று திடீரென நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். எங்களிடம் ஆறு நாட்களுக்கான மூலப்பொருள் மட்டுமே இருந்தது. அதை சப்ளை செய்தால் கார் உற்பத்தியாளர்கள் எட்டு நாளைக்கு மட்டுமே வேலை செய்ய முடியும்.

இது ஒரு சங்கிலித் தொடர் போல எங்களையும், எங்களை நம்பி இருக்கும் நிறுவனங்களையும் பாதிக்கும். டீலர்கள், கஸ்டமர்கள் அனைவருக்கும் பாதிப்புதான். ஆயிரம் பேருக்கு மேல் வேலை போகும் சூழல். இதற்கு ஆறு நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேனேஜ்மெண்ட்டில் ஒரு அவசரக் கமிட்டி அமைத்து அதன் தலைவராக என்னையும் நியமித்துவிட்டார்கள்.

புனே நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொண்டிருந்த உதிரிப் பொருட்களுக்கு மாற்றாக மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்குவது கார் உற்பத்தியில் அவ்வளவு எளிதல்ல. நிறைய பரிசோதனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இவற்றை எதிர்கொள்ள வெண்டும்.

முதலில் அதற்கு ஈடான உதிரி பாகம் எங்கே கிடைக்குமென்று உலகத்தின்
மூலை முடுக்கெல்லாம் தேடினோம். கடைசியில் கொரியாவிலும் சைனாவிலும் அதற்கு நிகரான மெட்டீரியல் இருப்பது தெரியவந்தது. அதுவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரான மெட்டீரியல்தான்.

அவர்களிடம் இடைவிடாமல் பேசி ஒருவழியாக அவர்கள் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால், எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுடையது என்று சொல்லிவிட்டார்கள்.

சரியான போக்குவரத்து ஆரம்பிக்காத சூழல் அப்போது. கொரியா விலிருந்தும், சைனாவிலிருந்தும் பொருட்களை இரண்டு கட்டமாக, கப்பலில் பாதியும் விமானத்தில் பாதியுமாக கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். அதற்கான விதிமுறைகள், ஃபார்மாலிடிகளில் ஈடுபட்டோம். கொடுக்க வேண்டிய விலையோ பத்து மடங்கு கூடுதல்.

இத்தனையும், நம்புங்கள், 48 மணி நேரத்துக்குள் நடந்த நிகழ்வுகள். இரவு பகல் தூங்காமல் வேலை செய்தோம். விமான சரக்குகள் வந்து கொண்டிருந்தபோதே, கப்பலில் வந்த சரக்குகளை, சைனாவிலிருந்து வருவதால், கோவிட் காரணமாக சிங்கப்பூரில் நிறுத்திவிட்டார்கள். அவர்களுடன் தொடர்ந்து பேசி எங்கள் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தோம்.

இதற்குள் புனே நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்குத் தேவையான மெட்டீரியல் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அங்கே திடீரென மூடிவிட்டதால் தொழிலாளர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பொருளும் வெளியே போகக்கூடாது என்று போராடிக்கொண்டிருந்தார்கள். பின்னே அதையும் சமாளித்து விடியற்காலை மூன்று மணிக்கு வேன்கள் மூலம் அவற்றையும் எடுத்துவந்தோம்.

கொரியா, சைனா பொருட்களும் வந்துசேர்ந்தன. அந்த ஒரு வாரம் மிகவும் நெருக்கடியையும் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இதில் எங்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டதால், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்கச் சொன்னார்கள். புனே ஐரோப்பிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரிடம் பேசி, சட்டரீதியாகச் செல்லாமல் ஐம்பது சதவீதம் பணம் திரும்பக் கிடைக்க வழி செய்தேன். இதனால் அதிக நஷ்டமின்றி, வேலையும் முடங்காமல் தொடர்ந்து இயங்க முடிந்தது.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...