0,00 INR

No products in the cart.

கோயில் யானை வருகுது…

வாசகர் ஜமாய்க்கிறாங்க…
ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

 

காந்திமதியின் காலுக்குச் செருப்பு!

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர் மருத்துவ குணம் வாய்ந்த ரூ. 12,000/- மதிப்புள்ள தோல் செருப்புகளை செய்து அணிவித்துள்ளனர்.

திருநெல்வேலி டவுன் பகுதியில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் யானையின் பெயர் காந்திமதி. பதிமூன்று வயதில் கோயிலுக்குள் வந்தது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது.

திருவிழா நாட்களில் சுவாமி – அம்பாள் ரத வீதியில் உலா வரும்போது யானை காந்திமதிதான் முன் செல்வது வழக்கம். குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்க பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று யானையையும் குழந்தையாக பாவித்து பாசத்துடன் கோயில் நிர்வாகம் மற்றும் நெல்லையப்பர் கோயில் பக்தர்கள் பராமரித்து வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு யானையை சோதனை செய்த மருத்துவக் குழுவினர் வயதுக்கு ஏற்ற எடையைத் தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது. எனவே யானையின் எடையைக் குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைப்படி வாக்கிங் செல்கிறது. அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாகக் கொடுப்பது எனத் தொடர் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளால் யானை 6 மாதத்தில் 150 கிலோ எடை குறைந்தது. தற்போது சரியான எடையை அடைந்திருந்தாலும் வயது முதிர்வின் காரணமாக மூட்டுவலி ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் காந்திமதி யானை செல்லும்போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ள காந்திமதி யானை நடக்கும்போது கால்வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூபாய் 12,000/- மதிப்பிலான தோல் செருப்புகளைச் செய்து பக்தர்கள் யானைக்கு அணிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்குத்தான் முதன் முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. காலில் வெள்ளி சலங்கை கட்டி யானை காந்திமதி வலம் வரும்போது புதிய  செருப்பும் அணிந்து வலம் வருகிறது.

****************     *****************

ஆண்டுதோறும் ஆகஸ்டு 12 அன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் இந்த நாள் 2012 ஆகஸ்டு 12 கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்தப் படத்தின் கதையை ஒரு தனியார் வளர்க்கும் யானையை மீண்டும் காட்டிற்குள் விடுவது பற்றியது, இந்தப் படம் 2012 ஆகஸ்டு 12ல் வெளியானதால்  அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

****************     *****************

 அகிலாவுக்கு நீச்சல்குளம்!

திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா யானைப்பாகன் சொல்லும் அனைத்திற்கும் அழகாக கட்டுப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்துமே சற்று அதிக குழந்தைத்தனம் கொண்டதாகவே இருக்கும். இதன் காரணமாக கோயிலில் உள்ள அனைவருக்குமே அகிலா மிகவும் பிடிக்கும். இந்தக் கோயிலில் காவியியில் இருந்து துதிக்கை மூலம் தண்ணீர் கொண்டு வந்து யானை சிவபெருமானை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த கோயிலிக்கும் யானைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

அகிலாவுக்கு 19 வயது நிறைவு பெற்று 20 வயதை எட்டும் நிலையில் திருக்கோயில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா மே மாதம் கொண்டாடப்பட்டது. யானையை அலங்கரித்து கஜ பூஜை செய்து, பிறந்தநாள் வாழ்த்துப் பாடி பக்தர்கள், யானை பாகன்கள், திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்று பழங்கள், காய்கறிகள், கூலை மிட்டாய், கொழுக்கட்டை வழங்கி அகிலாவை மகிழ்வித்தனர். யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துகளைச் சமமாகப் பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி, தனது நன்றியைத் தெரிவித்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

இந்தக் கோயில் நந்தவனத்தில் அகிலாவுக்காக நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் 1200 சதுர அடியில் சேற்றுக் குளியலுக்காகப் பள்ளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. காலை எழுந்தவுடன் அகிலாவுக்கு அங்கு அமைக்கப் பட்டிருக்கும் நீர்ச்சாரலில் குளியல், அதனையடுத்து விதவிதமான காலை உணவு. பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்.

அகிலா மாலை நேரத்தில் நந்தவனத்தில் நடைப்பயிற்சி. பின்னர் அங்கே இருக்கும் நீச்சல் குளத்தில் நீச்சலடித்து கும்மாளம் போட்டு அனைவரையும் வியக்க வைக்கிறது. அவ்வப்போது சில சில சேட்டைகள் செய்து பக்தர்கள் அனைவரையுமே ரசிக்க வைக்கிறாள் செல்லக்குட்டி அகிலா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

மணிமேகலையும் வைகாசி பெளர்ணமியும்!

0
வே. இராமலக்ஷ்மி, திருநெல்வேலி ஒவியம் : லலிதா  வைகாசி பெளர்ணமியோடு கூடிய மற்றோர் வரலாறு மணிமேகலை என்னும் நூலில் உள்ளது. மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று இந்த மணிமேகலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின்...