0,00 INR

No products in the cart.

நன்மைகள் அறிவோம்!

– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி

 • தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும்.
 • நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதையும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால் கபம் அதிகமாகும். கபப் பிரச்னைகள் உள்ளவர்கள் இனிப்புத் தயிரைத் தவிர்க்க வேண்டும்.
 • இனிப்பு நீங்கி புளிப்பு மட்டும் .ள்ள தயிர், பசியைத் தூண்டும். பளிப்பு ஏப்பம், ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பளிப்புத் தயிரைத் தவிர்க்க வேண்டும்.
 • உடல் புஷ்டியாக தயிருடன் வெல்லம், கற்கண்டு, தேன் கலந்து சாப்பிடலாம். தயிர் சோறுடன் வேக வைத்த பாசிப்பயிறு, நெல்லிக்காய் துவையல் சேர்த்து சாப்பிட்டாலும் உடல் வலுப் பெறும். தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் ஜீரணக் குறைவு, மூச்சுத் திணறல் வரலாம்.
 • சோகை, காமாலை, தோல் நோய், ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். தயிரை இரவில் பயன்படுத்த நேரிட்டால், அதோடு சிறிது பெருங்காயம், இந்துப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
 • தயிர் தோய்ந்த நிலையில் கீழே தனித்து நிற்கும் தெளிவு நீர், நல்ல சத்துகள் கொண்ட பானம். தொண்டை கமறல், வாந்தி உணர்வு, களைப்பு, தலைச்சளி பிரச்னைகளைப் போக்க இதை அருந்தலாம்.

 நார்த்தங்காய்!

 • நார்த்தங்காய், சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய் ஆகும். பார்ப்பதற்கு எலுமிச்சை காய்போல் இருக்கும். இந்தக் காயினை ஊறுகாய், சாறு என ஏதேனும் ஒரு வகையில் சேர்க்கலாம்.
 • நார்த்தங்காயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நார்த்தங்காய் தோலில் காணப்படும் லிமோனாயீடுகள் புற்றுநோய் தடுப்பில் பெரிதும் உதவுகிறது.

நார்த்தங்காயில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதுடன் சளி, இருமல், காய்ச்சலைக் குணமாக்குகிறது. நார்த்தங்காயில் காணப்படும் வைட்டமின் சி, பொட்டாசியம், ரத்த அழுத்த பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.

 • அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கொண்ட நார்த்தங்காய் உடல் வலிகளைப் போக்குகிறது. தலைவலி, கீழ்வாதம் மூட்டு வலியை நீக்குகிறது.
 • நார்த்தங்காயில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் சி, வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • நார்த்தங்காய் தோலில் உள்ள லிமோனாயீடு பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து காக்கிறது. செரிமானத்துக்கு துணை நிற்கிறது.

 நாவல் பழம்!

 • நாவல் பழம் சீசன் இது.  அந்த நாவல் பழத்தில் எவ்வளவு நன்மைகள் பார்ப்போமா?
 • ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த சுத்திகரிப்பு பண்புகள், ஹீமோகுளோபினை மேம்படுத்துதல், செரிமான பிரச்னைகளை எளிதாக்குதல் போன்ற பல நன்மைகள் நிறைந்தது.
 • நாவல் பழம் ஜாம்போலின் எனப்படும் கலவையைக் கொண்டுள்ளது. இது ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. இது இன்சுலின் எதிர்ப்பிற்கு எதிரானது.
 • நாவல்பழம் புரதம், நார்ச்சத்து, ஆக்ஸினேற்றிகள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் பி 6 ஆகியவற்றின் களங்சியமாக இருப்பதால் இந்த பழத்தை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.
 • நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. பழத்தில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் ஹீமோகுளோபின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.
 • நாவல் பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
 • சருமம் வயதாவதை மெதுவாக்கும்.
 • ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
 • நாவல் பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்தை மேம்படுத்துகிறது. மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் முகவராக செயல்படுகிறது. இது உங்கள் தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
 • பொட்டாசியம் நிறைந்துள்ளதால் தமனிகளைக் கவனிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
 • நாவல் பழம் சாப்பிடுவது உங்கள் ஈறுகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
 • மாலிக் அமிலம், டானிகள், காலிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் போட்லினம் அமிலம் ஆகியவை நாவல் பழத்தில் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு பண்புகள் பொதுவான நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
விதைகள்!

பொதுவாக நாம் சாப்பிடும் சில பழங்களின் விதைகளிலும் சத்துகளும் ஏராளமாக உள்ளன. அவற்றில் போதுமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

 • பூசணி விதைகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு பலப்படுகிறது. பச்சையாகச் சாப்பிடலாம்.
 • பப்பாளி விதை பல நோய்கள் மற்றும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தைத் தடுக்கும் திறன்கொண்டது.  வாசனை கடுமையாக இருக்கும் என்பதால் உண்ணும்போது கவனம் வேண்டும்.
 • வெள்ளரி விதை வாய்க்கு ருசி கூட்டும்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...

மணிமேகலையும் வைகாசி பெளர்ணமியும்!

0
வே. இராமலக்ஷ்மி, திருநெல்வேலி ஒவியம் : லலிதா  வைகாசி பெளர்ணமியோடு கூடிய மற்றோர் வரலாறு மணிமேகலை என்னும் நூலில் உள்ளது. மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று இந்த மணிமேகலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின்...