0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?

-கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு…!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல வெச்சுக்கிட்டு சமைக்கணும். இல்லன்னா… சாப்பிடறவங்க நம்பள ‘வெச்சு செஞ்சுடுவாங்க!’

ஆனா, பத்திரிகை நம்ப கையிலயே இருக்கும். பார்த்துப் பார்த்து ‘செஞ்சு வெச்சுடலாம்!’ ஸோ… ஈஸி மேடம்!

*************************

‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கப் போகுதே… எப்படிச் சமாளிப்பது அனு மேம்?

-புவனா நாகராஜன், செம்பனார்கோவில்

ஸ்கூல் பரீட்சையில, நமக்கே ஒரு கேள்விக்கு பதில் தெரியாம ‘பே…பே’ன்னு முழிச்சுக்கிட்டு இருக்குறப்போ, நம்பப் பக்கத்துப் பொண்ணு “ஆன்ஸர் சொல்லு… ஆன்ஸர் சொல்லு”ன்னு படுத்துமே… அது மாதிரி இருக்கு…

சரி… கேட்டுட்டீங்க… எனக்குத் தெரிஞ்ச புராணக் கதையைச் சொல்லிச் சமாளிக்கிறேன்.

துக்கெல்லாம் காரணம் ‘சுவேதகி’ங்கிற ராஜாதானாம்! அவர் பொழுது போகாம, 12 வருஷம் விடாம நெய் ஊத்தி, யாகம் செய்தாராம். ஏகப்பட்ட நெய் சாப்பிட்டா என்ன ஆகும்? அக்னி பகவானுக்கு வயிற்று வலி, மந்த நோய்! மூலிகைகள் நிறைஞ்ச அடர்காட்டைத் தின்றால் மட்டுமே வயிற்றுவலி தீரும்னு பிரம்மா சொல்லிட்டாரு. உடனே அக்னி பகவான், இந்திரனின் காண்டவ வனத்தைச் சாப்பிட நினைச்சுப் போறாரு.. ஒவ்வொரு முறை அந்தக் காட்டைச் சாப்பிட முயற்சிக்கும் போதெல்லாம், இந்திரன் பெருமழையைப் பெய்விச்சு, அக்னியை அடக்கிடுவாராம். இது தொடரவே, அக்னிபகவான், ஸ்ரீகிருஷ்ணரிடம் உபாயம் கேட்டு நின்றார். அவரும் பரிதாபப்பட்டு அர்ஜுனனை அம்புகளால் ‘சரக் கூடு’ கட்டச் செய்றாரு. இந்திரன் பெய்விக்கிற மழையால இந்தச் சரக்கூண்டைத் தாண்டி உள்ளே வர முடியலை.

அக்னிதேவன், அந்த வனத்தை எரிச்சு, உண்ண ஆரம்பிச்சுட்டாரு. இப்போ, இந்திரனுக்கு திகைப்பாயிடுச்சு. கண்ணபிரான்கிட்டே வந்து முறையிட்டாரு.

“அக்னியே… நீ 21 நாட்கள் மட்டுமே புசிக்கலாம். அதுக்குள்ள உன் வயிற்றுவலி நீங்கிடும். சரக் கூடமும் கலைஞ்சுடும். பூமியைக் குளிர்விக்க இந்திரன் மழையாக வருவார். அப்போ நீ இடைஞ்சல் செய்யக் கூடாது”ன்னு சொன்னார்.

காண்டவ வனத்தை, அக்னிபகவான் புசித்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திரக் காலம்…

(ஹலோ மிஸ்டர் லே-அவுட் ஆர்டிஸ்ட்… ஒன் ரிக்வெஸ்ட்… இந்தக் கேள்விக்கு ‘அக்னி நட்சத்திரம்’ அமலா படத்தைப் போடவும். கொஞ்சமாவது குளிர்ச்சியாக இருக்கும்!)

(அப்படியே ஆகட்டும் அனு மேடம்! இதோ…)

*************************

தங்கள் முன்னால், ஒரு தட்டில், மாம்பழத் துண்டுகள், பலாச்சுளைகள், திராட்சைகள் இருந்தால் உங்கள் சாய்ஸ்?

-வாசுதேவன், பெங்களூரு

சாய்ஸாவது… கீய்ஸாவது… கொடுத்துப் பாருங்க… எதுவும் மிச்சமிருக்காது. எவ்ளோ பெட்? ஆனால் நான் மாம்பழத்தைத் துண்டங்கள் போட்டுச் சாப்பிடும் ரகமல்ல!

ஸ்டெப் ஒன்:- மாம்பழத்தை நன்றாகக் கழுவவும். மறக்காம கனிந்த பழமான்னு ‘செக்’ பண்ணிடுங்க.

ஸ்டெப் டூ:- காம்பு பக்கம் மட்டும் அதிகமா அழுத்தம் தரக்கூடாது. மற்றபடி பழத்துக்கு நோகாதபடி, மெள்ள விரல்களால் ‘THAI’ மசாஜ் செய்யவும்.

ஸ்டெப் த்ரீ:- பழம் நன்றாக இளகி, “போதும் விடு… நான் ஜுஸாகிவிட்டேன்”னு கதறும்போது, காம்பு போர்ஷனை மெள்ளக் கிள்ளி, ஓட்டைப் போடவும். ஜாக்ரதை, மாம்பழச் சாறு “யாருடா… என்னைப் பிசைஞ்சது?”ன்னு ரோஷத்துடன் எட்டிப் பார்க்கக் கூடும்.

ஸ்டெப் ஃபோர்:- ‘சர்’ என்று உறிஞ்சவும்… வாவ்! வாட் எ ஃப்ளோ!

தோல், கொட்டை எல்லாத்தையும் சப்ஜாடாக ருசித்து, ‘அப்பாடா!’ முழு பழம் சாப்பிட்ட திருப்தியில்… பரம சுகம்!

*************************

சின்னக் கலைவாணர் விவேக் பெயரில் சாலை?

-வாணி வெங்கடேஷ், சென்னை

லைஞர் பேரை, ஈ.சி.ஆர். ரோடுக்கு வெக்கணும்னா, உடனடியா இதுமாதிரி ஏதாவது செய்யணும்தானே? எல்லாமே அரசியல்… அரசியல்! (விவேக்கே இதை விரும்பியிருக்க மாட்டார் என்பது வேறு விஷயம்!) உடனே “சாந்தோம் சாலைக்கு எம்.எஸ்.வி. பேரை வையுங்க… அசோகா சாலைக்கு பி.சுசீலா பேரை வையுங்க…. அப்ப இளையராஜா மட்டும் என்ன மட்டமா?”ன்னு நெட்டிஸன்கள் கூவி வருகிறார்கள்.

கோட்டூர்புரம் சாலைக்கு எம்.எஸ். அம்மா பேரை வைக்க ஏற்பாடுகள் நடந்தபோது, “ஒவ்வொரு காலத்திலும் யாராவது புகழ் பெற்ற மனிதர்கள் வரத்தான் செய்வார்கள். பழைமையான சாலைகளின் பெயர்கள் எல்லாம் இப்படி மாற்றிக் கொண்டேயிருப்பதில், தமக்கு உடன்பாடில்லை” என்று மறுத்துவிட்டார் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி.

பெயரோ, புகழோ, வரலாற்றில் மக்கள் மனத்தில் இடம் பெறணும்; வெறும் சாலைப் பலகைகளில் அல்ல!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள்!

கயமை கடக்க -சிரஞ்சீவி இராஜமோகன் படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல்...