0,00 INR

No products in the cart.

சரிவிகித உணவு கொள்வோம்… நோய்களை வெல்வோம்!

 பகுதி – 4                                                          
உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் 

சந்திப்பு: பத்மினி பட்டாபிராமன்

 

சில குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமனாக இருக்கிறார்களே அது ஏன்?

ல வீடுகளில் குழந்தைகளுக்கு எது தேவையோ அதைக் கொடுப்பதில்லை.  அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து கொடுக்கிறார்கள். அது மிகத் தவறானது. பெரியவர்களே சில நேரம் கடைகளில் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்து ஜங்க் என்று தெரிந்தும் வாங்கி சாப்பிடு கிறார்கள். அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் கேட்டால் அவர்கள் ருசியைத் தான் விரும்புவார்கள். உடல் நலத்தை சிந்திக்க மாட்டார்கள்.

அதனால்  நாம்தான் அவர்களுக்கு தேவையான புரத சத்து, காய்கறிகள், பழங்கள் இவற்றை உணவில் ஒரு வயதிலிருந்தே சேர்க்க வேண்டும்.  பொரித்த உணவுகள், மைதாவினால் செய்யப்படும் பேக்கரி பொருட்கள் இவற்றை சாப்பிடுவதால் தான் குழந்தைகள் சிறு வயதிலேயே எக்கச்சக்க வெயிட் போட்டு விடுகிறார்கள்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

என் க்ளினிக்கிற்கு வரும் சில பத்து வயது சிறார்கள், வழக்கமாக அவர்கள் இருக்க வேண்டிய 20 அல்லது 25 கிலோ எடைக்கு பதிலாக, 80 கிலோ இருக்கிறார்கள்.  இது நல்லதா சொல்லுங்கள்…?

பத்து வயதுக்கு மேல்தான் அவர்களுக்கு எல்லா அங்கங்களின் வளர்ச்சி, உயரம் அதிகரித்தல் எல்லாம் ஏற்படும்.

இந்த சமயத்தில் நாம் அவர்களுக்கு எடையைக் குறைக்கும் உணவைக் கொடுக்க முடியாது. எனவே இந்த வயதில் வரும் பருமனான குழந்தைளுக்கு தேவையானதை சொல்வது மிக கடினமான வேலை. இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளுக்கு பிடித்த ஜங்க் உணவை வீட்டிலேயே செய்து கொடுத்து விடுகிறார்கள் அல்லது வாங்கிக் கொடுக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெற்றோர் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி, அலுவலகம் சென்றாலும் சரி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் வாங்கிக் கொள்ளவோ, தருவித்துக் கொள்ளவோ வசதி செய்து  கொடுத்து விடுகிறார்கள். (அதான் ஸ்மார்ட் ஃபோன் இருக்கிறதே) இதனால் அவர்களுக்கு சரிவிகித சத்தான உணவு கிடைப்பதில்லை. காலை உணவோடு பழங்கள், மதியம் காய்கறி, புரோட்டீன், முட்டை, இரவு உணவில் பருப்பு காய்கறிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மதியம் இரவு இரண்டு வேளையுமே காய்கறிகளும், கீரை போன்ற க்ரீன்ஸ்,முளை கட்டின பருப்பு போன்ற புரோட்டீனும் வளரும் குழந்தைகளுக்கு அவசியம்.

குழந்தைகள் குண்டாக இருக்கிறார்களே என்று சிலர், கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்தை  கொடுக்காமல் நிறுத்துவார்கள். அப்படி செய்யவே கூடாது. மாவுச்சத்தும் அவசியம். அதைக் குறைத்துக் கொண்டு, எண்ணை பதார்த்தங்களை அனேகமாகத் தவிர்த்து, காய்கறிகள் பழங்கள் அதிகம் சேர்க்கலாம்.

மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் தேவை என்றால், உலர்ந்த தாமரை மொட்டுக்கள் மக்கானா என்ற பெயரில் கிடைக்கிறது. அதை எண்ணையின்றி அல்லது மிக குறைந்த எண்ணையில் ரோஸ்ட் செய்து தரலாம். அரிசிப்பொரியும் நல்லது. முழுவதும் எண்ணையில் பொரித்தவற்றைக் கொடுக்காதீர்கள்.

உடல் எடை கூட இருக்கும் சிறுவர்கள், கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சி, ஓடுதல், குதித்தல், பாண்டி விளையாட்டு, ஸ்கிப்பிங் என்று அவசியம் செய்ய வேண்டும். இரண்டு மூன்று மாடிகள் இருந்தால் அவற்றில் ஏறி இறங்க வேண்டும். நீச்சல் கூட நல்ல உடற்பயிற்சி. அது போல சைக்கிள் ஓட்டுவதும் மிக நல்ல உடற்பயிற்சி.

வேலைக்குப் போகும் பெண்களில் பலர், வீடு அலுவலகம் என்று பரபரப்பாக இயங்குவதால் நேரமின்மை காரணமாக அவசரமாக அல்லது நேரம் தப்பி உண்கிறார்கள். இவர்கள் தங்கள் உணவை எப்படி பேலன்ஸ் செய்வது டாக்டர்?

உண்மைதான். குடும்பத்தாருக்கு தேவையானதைச் செய்கிறார்கள். தங்களுக்கு என்று வரும் போது  அலட்சியப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் ஹெல்த்தியாக இருந்தால் தானே குடும்பம் நன்றாக இருக்கும். என்ன அவசரம் என்றாலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது.இரண்டு தோசையோ இட்டிலிகளோ இவற்றோடு பழங்களும் அவசியம்.

மதிய உணவில் ப்ரொட்டீன், காய்கறிகள் நிச்சயம் வேண்டும். நறுக்க நேரமில்லை என்றால் வெள்ளரிக்காய் கேரட் தக்காளி போன்றவற்றை எடுத்துச் சென்று அப்படியே சாப்பிடலாம் மதிய உணவில் மோர் அல்லது தயிர் அவசியம் சேர்க்க வேண்டும்.

கையில் பழங்கள் எடுத்துச் சென்று, இரண்டு மூன்று பேராக மதியம் நறுக்கி பகிர்ந்து கொள்ளலாம். அருகில் கடைகளில் பழங்கள் கிடைத்தாலும் வாங்கி நறுக்கி ஃப்ரெஷ் பழங்கள் உண்ணலாம். சென்னா (வறுகடலை) போன்றவையும் மிக நல்லதே.

இரவு உணவுக்கு ஒன்றரை கப் சூப் நல்லது. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் அதிகமாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து அருந்தலாம்.

இரவில் புதிதாக ஒரு பொரியலோ அல்லது காலையில் பொரியல் அதிகம் செய்து வைத்து இரவிலும் அதையே உண்ணலாம். இப்படி சரிவிகித உணவு நிறைவாக எடுத்துக்கொள்ளும் போது, மாலையில் பஜ்ஜி போன்ற எண்ணைப் பண்டங்களை தவிர்த்து விட முடியும்.

ஒரு வங்கியில் மாலை சிற்றுண்டியாக எண்ணையில் பொரித்த பண்டங்கள் வரவழைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனையின் பேரில் ஒரு மாதம் மாலை சிற்றுண்டிக்கு,  சுண்டல், முளை கட்டிய பயறு போன்றவை உண்டு முயற்சித்ததில் நல்ல பலன் தெரியவே,  பின்னர் அவற்றையே தொடர்ந்தார்கள். எண்ணையில் பொரித்தவை தேவைப்படவில்லை.

உங்களது Integrated Dietics பற்றி சொல்லுங்கள்

நான் உணவியல் துறையில் சுமார் 35 வருடங்களாக இருக்கிறேன்.  எத்தனை பாடுபட்டாலும் பருமனாக இருப்பவர்கள் ஒரு சிலரது எடையை அவர்கள் நினைக்கும் அளவுக்கு  குறைக்க முடிவதில்லை.

மிகச் சிலருக்கு முடி உதிரும் பிரச்னைகள் அதிகம் இருந்தால் அவற்றுக்கும் தீர்வு சரியாக அமைவதில்லை. இதற்காக, நவீன மருத்துவ முறை சத்துணவு (Modern allopathic nutrition) மற்றும் பாரம்பரிய ஆயுர்வேதம் (Ayurvedic traditional nutrition) பரிந்துரைக்கும் சத்துணவு இரண்டும் இணைந்து ஒரு சரிவிகித உணவு முறையை Integrated Dietics பின்பற்றுகிறோம்.

ஒவ்வொரு நபருக்கும்  ஆயுர்வேத மருத்துவ முறைப்படியும், எங்களது அனுபவத்தைக் கொண்டும் அவரது உடலுக்கு  ஏற்ற உணவு எது என்று தனியாக ஒரு சத்துணவு சார்ட் தயார் செய்து தருகிறோம்.

யாருடன் இணைந்து இந்த முறையை தயாரிக்கிறீர்கள்?

னது மகள், டாக்டர் மதுமிதா கிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர். Ayrvedha paediatrics ல் MD பட்டம் வாங்கியவர்.  நாங்கள் அளிக்கும் இந்த ஒருங்கிணைந்த டயடிக்ஸ் மூலம் பலருக்கு உதவ முடிகிறது.

டாக்டர் மதுமிதா கிருஷ்ணன்

வயிற்றில் அமிலம் சேரும் அசிடிடி மற்றும் சிறுநீரகத்தில் பிரச்னை உள்ளவர்கள் நிறைய பேர் எங்களிடம் வரும்போது அவர்களுக்கு இந்த முறை மூலம் உதவுகிறோம்.

உடலின் அதிக எடையால் அவதிப் படுபவர்களுக்கும் Integrated Dietics பயனளிக்கிறது. முடி உதிர்தல், வறண்ட சருமம் மற்றும் சருமப் பிரச்சினை (சொரியாஸிஸ் போன்ற) உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கிறது.

உணவு ஒரு நபரின் குணாதிசயத்திலோ, உடல் அமைப்பிலோ மாற்றம் செய்யுமா டாக்டர்?

ங்கிலத்தில், Food for thought என்பார்கள் நாம் உண்ணும் உணவுக்கும் நம் சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உணடு. சந்தோஷமாக இருக்கும் போது ஸ்வீட் எடு கொண்டாடு என்று சொல்வதில்லையா? மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஸ்வீட் தானே தருகிறார்கள்.

ஆயுர்வேதம் சொல்வது போல், மனம் மூன்று குணங்களில் செயல்படுகிறது. சாத்வீக, ராஜச, தாமச என மூன்று  குணாதிசயம் உருவாக நம் உணவு முக்கிய காரணமாகிறது.

இருந்தாலும் இதில் முக்கிய அம்சம், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் அவரது சூழ்னிலையைப் பொறுத்து இது வேறுபடும்.  உதாரணமாக ஒருவர் தூங்கும் போது தாமச குணம், அவர் வேலையில் ஈடுபடும் போது ராஜச குணம், மனம் அமைதியான நிலையில் சாத்வீக குணம் இவை மேம்பட்டு காணப்படும்.

இந்த குணங்களை மேம்படுத்தி, பக்குவப்படுத்த சில உணவு வகைகள் இருக்கின்றன. உதாரணமாக, சாத்வீக குணத்தை மேம்படுத்த இனிப்பு, க்ரீம் போன்றவை கொண்ட பால்,நெய் தேன் இவற்றை சொல்லலாம்.

உப்பு, காரம், புளிப்பு கடுப்பு அதிகம் கொண்ட உணவுகள்  ராஜச குணத்தை அதிகரிக்கும்.

அதிக நேரம், அதாவது மூன்று மணி நேரத்துக்கு மேல் சமைத்த உணவுகள்  உண்ணுவது  தாமச குணத்தைக் கொடுக்கும்.  இவ்வாறாக உணவுக்கு ஏற்றபடி நம் உடலும் மனமும் மாற்றம் அடையும்

இந்த கருத்துக்களைக் கூறிய டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,  “நல்ல சத்தான சரிவிகித உணவு  உட்கொண்டு நலமாக வாழ்வோம். உங்களுக்கு எத்தகைய  சந்தேகம் கேள்விகள் இருந்தாலும் என்னை அணுகலாம்” என்கிறார்.

மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடை பெற்றோம்.

ஆயுர்வேத உணவுக்கு டாக்டர் மதுமிதா கிருஷ்ணன் அவர்களின் வெப்சைட் www.madhumithakrishnan.in  அணுகலாம். Dharinikrishnanan’s easy diet என்ற பெயரில் இவரது யூட்யூப் சேனல் இருக்கிறது.

நிறைவுற்றது.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...