0,00 INR

No products in the cart.

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

-லதானந்த்

பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக் காட்சி.

நூறாண்டுப் பழமை வாய்ந்த பொள்ளாச்சி நகராட்சியில் பெண் ஒருவர் ஓட்டுநராகப் பணிபுரிவது இதுவே முதல் முறை. அந்தப் பெண்மணிதான் முப்பத்தைந்து வயதாகும் சாந்தி. பணிக்கிடையிலான ஓய்வு நேரத்தில் தம்மைப் பற்றிய செய்திகளை மங்கையர் மலர் வாசகிகளுக்காகப் பகிர்ந்துகொண்டார்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சாந்தி மேடம்!

னக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் புரவிபாளையம். ஐந்தாவது வரை படித்திருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போகிறவர்கள். அப்பா பத்து வருஷம் முன்பே இறந்துவிட்டார். எனக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. மூன்று பெண், ஓர் ஆண் என மொத்தம் நான்கு பிள்ளைகள் எனக்கு. என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டேன். கூலி வேலைக்குப் போவேன். அதில் கிடைக்கும் வருவாய் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை.

வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசை எப்படி ஏற்பட்டது?

சில சமயம் என் முதலாளியுடன் TATA  Ace போன்ற வாகனத்தில் பிரயாணம் செய்திருக்கிறேன். அப்போது அவர் வண்டியை ஸ்டார்ட் செய்வது, கிளட்சை அழுத்தி கியர் மாற்றுவது, ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனக்கும் அந்த வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. முதலாளியின் அனுமதியுடன் ஓட்டிப் பழகினேன். ஓட்டுவற்கான லைசென்ஸும் பெற்றேன்.

என்னென்ன வாகனங்களை ஓட்டியிருக்கிறீர்கள்? எங்கெல்லாம் சவாரி போயிருக்கிறீர்கள்?

மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறேன். தண்ணீர் லாரியும் ஓட்டியிருக்கிறேன். மஹேந்திரா, பொலிரோ போன்ற வாகனங்களும் ஓட்டுவேன். சரக்கு வண்டிகளை ஓட்டுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நெடுந்தூரப் பயணங்கள் பலவும் மேற்கொண்டிருக்கிறேன். அதுதான் எனக்குப் பிடிக்கும். அப்போதுதான் சாலைகளில் போக்குவரத்து அதிகம் இருக்காது; அதோடு அமைதியாகவும் இருக்கும். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு சரக்குகளை எடுத்துச் சென்றிருக்கிறேன். கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் விஜயவாடாவுக்கு சரக்குகள் கொண்டுபோயிருக்கிறேன்.

காய்கறி லோடுகள்தான் பெரும்பாலும் ஏற்றிச் செல்வேன். தேங்காய் லோடுகளும் அதிகம் உண்டு. மதுரையிலிருந்து கேரளாவின் அங்கமாலிக்கு அடிக்கடி ட்ரிப் அடித்திருக்கிறேன். விழுப்புரத்திலிருந்து  கேரளத்தில் இருக்கும் வைக்கம் பகுதிக்கு வெண் பன்றிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து வருமானம் இருக்காது. சீஸனைப் பொருத்தே வருமானம் கிடைக்கும்.

இப்படி கன ரக வாகனங்களை இயக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

லரும் கிண்டல் செய்வார்கள். ‘இதெல்லாம் ஆண்கள் செய்யும் வேலை. எங்களுக்குப் போட்டியாக வந்துவிட்டாயா’ என்பார்கள். சிலர், ‘இவ்ளோ தூரம் வண்டி ஓட்டுகிறாயே? சலிப்பில்லாமல் இருக்கத் தண்ணியடிப்பாயா?’ என்று வம்பிழுப்பார்கள். நான் அதையெல்லாம் சட்டை செய்யவே மாட்டேன். நானுண்டு என் வேலையுண்டு என்றுதான் இருப்பேன். ஒரு சிறு விபத்துக்கூட நான் ஏற்படுத்தியதில்லை.

பொள்ளாச்சி நகராட்சியில் ஓட்டுநர் வேலை எப்படிக் கிடைத்தது?

பொள்ளாச்சி நகராட்சி மன்றத் தலைவர் ஷ்யாமளா நவநீத கிருஷ்ணன் என் குடும்பச் சூழலையும் எனது திறமைகளையும் அறிந்து எனக்கு இந்தப் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கும் இதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாகனப் பழுது பார்ப்பு வேலைகள் தெரியுமா?

ஸ்டெப்னி கழற்றி மாற்றுவது போன்ற சின்னச் சின்ன ரிப்பேர்களை யார் துணையுமில்லாமல் நானே செய்துவிடுவேன்.”

தற்போது நீங்கள் பணிபுரியும் இந்த நகராட்சியில் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள். நான் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தினசரி எனது பணிகளை முழு திருப்தியுடன் செய்துவருகிறேன்.

உங்கள் குழந்தைகள் என்னவாக வர வேண்டும் என விரும்புகிறீர்கள்?

வர்களுக்கு விருப்பமான துறையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவிடுவேன். ‘டாக்டராகணும், எஞ்சினியராகணும்’ என்று எந்த வித விருப்பங்களையும் அவர்கள் மீது திணிக்கமாட்டேன். அவர்கள் விருப்பம் என்னவோ அந்தப் படிப்பைப் படிக்கவைப்பேன்.

 பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பெண்கள், குறிப்பாக தனிமையில் வாடும் ஏழைப் பெண்கள், ஒரு போதும் மனம் தளரக் கூடாது. ஏதாவது ஒரு தொழிலைப் பழகிக்கொண்டு அதில் காலூன்றி வாழவேண்டும். சுயமாய்ச் சம்பாதிக்கும்போது தன்னம்பிக்கை வளரும்; குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

மங்கைய மலர் வாசகர்கள் சார்பாக ஓட்டுநர் சாந்திக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

1 COMMENT

  1. சாந்தியின் சாதனைகள் பாராட்டுக்குரியது. அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள்!

கயமை கடக்க -சிரஞ்சீவி இராஜமோகன் படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல்...

சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!

1
-ஆர். மீனலதா. சம்மர்! அக்னி நட்சத்திரம்! அப்பப்பா! என்ன வெயில், என்ன வெயில்…  சலிப்போ, அலுப்போ  தேவையில்லை.  “சவாலே சமாளி” மாதிரி “சம்மர் சமாளி”தான். ஆயுர்வேதிக் முறையில் வாதா, பிட்டா, கபா என காலங்களைக் கூறுகிறார்கள்....