-மாலதி ஜெகந்நாதன்
விசித்திரத் துறவி
சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும் ‘சுமைதாங்கி‘!
அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும்
‘வாழை ‘!
மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும்
‘ மிதியடி‘ !
வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும்
‘ பிறவி ‘!
இன்றும் பொறுப்போம் என்றாவது சிரிப்போம்,
என நம்பி ஏமாறும் ‘விசித்திரத் துறவி ‘!
அவள்தான் ‘தாய்‘ என்னும் அற்புதப் பிறவி !
தெய்வப் பிறவி
உயிர் கொடுத்தவளுக்கு வாழ்த்து!
உரு கொடுத்தவளுக்கே,
மெய்யான இந்த எழுத்து!
குழந்தை கருவாகி
உதிக்கையிலே,
வியப்பில் சிலிர்த்து,
உருவாகி வயிற்றில்
மிதிக்கையிலே, பயத்தில்
குளித்து,
சிசுவாகி உலகில்
ஜனிக்கையிலே,
வலியில் களைத்து,
தாய் பசுவாகி பால் கொடுக்கையிலே
பெருமையில் திளைத்து
நிற்கும் பெண்மையே!
நீ நடமாடும் தெய்வம்
என்பது முற்றிலும்
உண்மையே!
” Annaiyar thinaththai munnittu Smt. Malathi Jagannathan avarGaLin ‘Kavithai’ mikka paaraattuthalGaLukku uriyathaagum. Sriman Mahakavi Bharathiyar avarGaL peNGaL viduthalaikkum, avarGaLin munnERRanGaLukkum kural koduththavar, paadupattavar. Equally, our esteemed Father of the Nation Sri Mahatma Gandhiji gave the clarion call.
– “M.K. Subramanian.”