0,00 INR

No products in the cart.

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு

மாதவி என்று சொல்லும்போதே ‘மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்’ என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள் அறியப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியையும், மாதவியையும்  இரு மாறுபட்ட துருவங்களாகவே படைத்திருக்கிறார்.  கண்ணகி ஒரு பெரும் வணிகனின் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உலக நெறிகளுக்கேற்ப வாழும் குடும்பப் பெண்.  மாதவி உலகுக்காகப் படைக்கப்பட்டவள். தவிர பரத சாத்திரம், நாட்டியக்கலைகள்,  ஆகியவற்றில் பயிற்சி பெற்றவள்.  இவள் உலகமே தனி. கற்பனை உலகில் வாழ்கிறவள். இவள் கணிகை மகள். பிறரை ஆடிப் பாடி மகிழ்வித்தே வாழ வேண்டும் என்னும் நியதிக்குட்பட்டு இவள் வாழ்க்கை அமைகிறது.  இவள் ஊர்வசி வழி வந்தவள் என்று பெரிதும் மதிக்கப்பட்டு இவள் கற்ற கலைகள் மதிப்புப் பெறுகின்றன.

சிலப்பதிகாரம் இளங்கோ அடிகளால் குடும்ப வாழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூலாகும்.  இதில் காவிய நாயகி கண்ணகியின் கணவன் பெருவணிகன் கோவலன், நடன மங்கை மாதவியிடம் மையல் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்கிறான்.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.

கோவலன் மாதவியை தன் மனைவியாகவே ஏற்றுக் கொண்டு அவளை ‘மங்கல மடந்தை’ என்று குறிப்பிடுகிறான்.  தன் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியபோது தம்பதி சமேதராக தான தர்மங்கள் மன மகிழ்வோடு செய்கிறான். அந்தக் குழந்தைக்கு கோவலனின் குலதெய்வத்தின் பெயரை ‘மணிமேகலை’ என்று  சூட்டி மிகுந்த அன்புடன் வளர்த்து வருகிறார்கள்.

மாதவி பிறப்பால் கணிகையாக இருந்தபோதிலும் இள வயதில் எந்த ஆடவரோடும் உறவு கொள்ளாமல் ஒரு உயர்நிலை வாழ்க்கை வாழ்ந்தவள்.   கோவலனை மணந்த பிறகு அவன் ஒருவனை மட்டுமே தன் வாழ்வில் ஏற்று மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்கிறாள். அதனாலேயே கண்ணகிக்கு நிகராக இவளும் மதிக்கத்தக்கவள் ஆகிறாள்.

சூழ்நிலை காரணமாகவே மாதவி  கோவலனைப் பிரிய நேரிடுகிறது.  ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனம் வெறுத்து கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனைவி கண்ணகியைத் தேடிப் போகிறான். அதன் பிறகு ஊழ்வினை காரணமாக மதுரை மாநகரில் நடந்த சம்பவங்களில் கோவலன் கொல்லப்பட்டு, கண்ணகியும் இறந்து விட மாதவி மாளா துயருக்கு ஆளாகிறாள். அதன் பின் பொதுப் பணியிலிருந்தும் கலை வாழ்விலிருந்தும் தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்கிறாள்.  கோவலன்  நினைவாலேயே வாடிய மாதவி துறவறம் பூண்டு,  தன் மகள் மணிமேகலையையும் எந்த ஒரு பந்த பாசத்திலும் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்து,  அற வழியில் ஒரு இளந்துறவி போல வளர்க்கிறாள்.

அது மட்டுமல்ல.  தன் பெண் மணிமேகலையை மிகுந்த அக்கறையோடு அவள் கோவலன் குடும்ப வாரிசு, கற்புக்கரசி கண்ணகியின் பெண் என்றெல்லாம் போற்றி மதித்து வளர்த்து வந்தாள்.   ஆடல், பாடல் கலைகள்  தன் பெண்ணிற்குக் கற்பிக்கப்பட்டாலும், அதில் நாட்டம் போகாமல் அவளுக்கு ‘அருளறம்’ என்னும் சிறந்த அறத்தை போதித்து நல் ஒழுக்கத்துடன் வளர்க்கிறாள்.

பூம்புகார் நகரத்தின் இந்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றது.  ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்கள் பலர் அங்கே வந்து மேடையேறி தங்கள் திறமைகளைக் காட்டி மக்களை மகிழ்விப்பது வழக்கம்.  அந்த வருடம் இந்திர விழாவுக்கு வரும் மக்கள் நடன மங்கை மாதவி மட்டுமல்லாமல் அவள் மகள் பேரழகி மணிமேகலையின் நாட்டியத்தையும் கண்டு களிக்கலாம் என்னும்  பேராவலுடன் வருகிறார்கள்.  ஆனால் இருவரும் துறவறம் பூண்டு பௌத்த விஹாரத்தில் தங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

மாதவியும் மணிமேகலையும் தங்கள் குல வழக்கத்திலிருந்து விடுபட்டு துறவறம் பூண்டது அந்த காலத்தில் ஒரு சமூகப் புரட்சியாகவே கருதப்பட்டது.

பூம்புகார் நகரில் வளரும் மணிமேகலை அந்த நாட்டின் அரசனால் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகி, அவனிடமிருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளில் கடல் தெய்வம் மணிமேகலாவால் காப்பாற்றப்பட்டு மணிபல்லவம் என்னும் தீவில் சேர்க்கப் படுகிறாள்.  மணிபல்லவம் என்பது தற்காலத்தின் இலங்கையாகும்.  மேலும் கடல் தெய்வத்திடமிருந்து மூன்று வரங்களைப் பெறுகிறாள்.  அதில் ஒன்றின் மூலம் ‘அமுதசுரபி’ என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்று, மக்களின் பசிநோய் தீர்க்கும் அரும்பணி ஆற்றி வந்தாள்.

இளமங்கை மணிமேகலை அவள் பெயரிலேயே ஒரு காப்பியம் எழுதப்படுகிற அளவுக்கு மிகுந்த மேன்மையான வாழ்க்கை வாழ்கிறாள். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது இரண்டுமே ஒன்றொடொன்று தொடர்பு உள்ள காப்பியங்களாகும். சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்தின் கதை முழுவதும் மணிமேகலை என்னும் தன்னேரில்லாத தலைவியை குறித்துப் பாடப்பட்டதால் இந்த காப்பியத்திற்கு ‘மணிமேகலை’ என்றே பெயர் சூட்டப்பட்டது.

சொற்ப காலமே தன்னோடு கூடி வாழ்ந்தாலும் கோவலனை தன் கணவனாகவே ஏற்றதோடு மட்டுமில்லாமல் தன் மகளை கோவலன் குடும்ப வாரிசாகவே கருதி  ஒரு தூசளவு கூட மாசு படியாமல் மிகுந்த ஒழுக்கத்தோடு வளர்த்த அன்னையாகிய மாதரசி மாதவியின் அன்பும் அக்கறையும் போற்றத்தக்கது.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...