0,00 INR

No products in the cart.

I love you அம்மா !

உங்கள் குழந்தைகள் அன்னையர் தினத்தன்று கொடுத்த பரிசுகளில் நீங்கள் பொக்கிஷமாக கருதும் பொருளின் புகைப்படத்துடன், அதன் காரணத்தையும் எழுதி அனுப்ப எமது வாசகிகளிடம் கோரியிருந்தோம். அவர்களின் நெகிழ்ச்சியான நினைவுகள் இதோ உங்களுக்காக …

 

நானும், என் கணவரும் எப்பவும் வீட்டுச் சாவியை ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டு, தேவை ஏற்படும் போது தேடிக்கொண்டே இருப்போம். அவசரத்துக்கு சாவி உடனே அகப்படாது. இதைக் கவனித்துக் கொண்டே இருந்த என் மகன், ஒரு அன்னையர் தினத்துக்கு, படத்துல உள்ள  கீ ஸ்டாண்ட்ஐ வாங்கி எனக்கு பிரசண்ட் பண்ணினான். அம்மா! வீட்டுச் சாவிகள் எல்லாவற்றையும் இதில் மாட்டிக் கொள். இனிமேல் சாவியைத் தேடற வேலை இருக்காது என்றான்.

இதை நான் ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். எங்கள் வீட்டுச் சாவிகள் அனைத்தும் இப்போது இந்த ஸ்டாண்ட்லதான் தொங்குகின்றன.
 –ஜெயா சம்பத்

சித்தார்தன், கெளதமன், சாக்கிய முனி  என்று  பல பெயர்களில் அழைத்த போதிலும், அவன் ஞானம் பெற்ற பிறகு அழைக்கப்பட்ட ‘புத்தன்’ என்ற பெயரே அனைவரும் விரும்புவர்.

‘துன்பத்துக்கு காரணம் ஆசையே’ என்று போதித்த  புத்தர் சிலையை அன்னையர் தினத்தில் பரிசாக பெற்ற நேரம் மிகவும் மகிழ்ந்தேன்.
-சுந்தரி காந்தி

பொதுவா என் மகனிடம் “அன்னையர் தினத்தில் உன் அன்னைக்கு நீ தரும் பரிசென்ன? ” என்றால்  “நானே உனக்கொரு பரிசுதானே” என்பான். பொக்கிஷமா பாதுகாக்கும் அளவுக்கு இதுவரை  அவனிடமிருந்து ஸ்பெஷலா எதையும் பெற்றதில்லை. ஒரு சமயம்  அன்னையர் தினத்தன்று,  என்னையும் என் கணவரையும்  அமெரிக்காவின் அழகான இடங்களில் ஒன்றான ‘துலிப் கார்ட’னுக்கு அழைத்துச் சென்று வண்ண வண்ணப் பூக்களின் நடுவே விதவிதமா படமெடுத்துக் கொடுத்தான்.

“இந்த நாளின் இனிமையான  நினைவுகளையும், இந்தப்  படங்களையும் பொக்கிஷமா வச்சிக்கோங்கமா. இதுதான் என் பரிசு,” என்றான். உண்மைதான். அன்று அவன் எனக்களித்த பரிசு விலை மதிக்க முடியாத, என்றும் நினைவில் நிற்கும் அற்புதமான பொக்கிஷம்.
-ஜெயகாந்தி மகாதேவன்

ன்னையர் தினத்திற்கு, என்றென்றும் வாடாத வாழத்துகளும், என்றென்றும் திகட்டாத முத்தங்கள் மட்டுமே. ஆனால், ஒரு முறை திருக்குறள் கதைப் போட்டியில்  கலந்து கொண்டு என் மகன்கள் ரஞ்சன் மற்றும் ரத்தன் ஓலைச்சவடியில் சான்றிதழ் பெற்று வந்தது மறக்க முடியாத நினைவுப் பரிசாக பாவிக்கிறேன்.

புகைப்படத்தில் இரண்டு மகன்களுடன் நான்  (சுடிதாரில் இருப்பது)
 –கோமதி டாடாகுமார்

ன் மகள் ஜெய்ப்பூர் சுற்றுலா சென்றிருந்த பொழுது,  அழகிய வேலைப்பாட்டோடு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய யானை பொம்மையை வாங்கிவந்து அன்னையர் தினத்திற்கு பரிசாகக் கொடுத்தாள்.

அந்த யானையின் வயிற்றில் அதன் குட்டியும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாயும், சேயுமாக இருக்கும் இந்த மர பொம்மை, வருடங்கள் பலவாயினும் இன்றும் எனக்கு பொக்கிஷமே.
பானு பெரியதம்பி

னக்கு விலங்குகள் என்றால் பிடிக்கும். அதிலும் யானையை ரொம்பவே பிடிக்கும். அதனால் என் பையன் ஒரு அன்னையர் தினத்துக்கு எனக்கு வாங்கிக் கொடுத்த யானை பொம்மையை (15 வருடங்களுக்கு முன்னால்)  நான் பொக்கிஷமாக, பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த பொம்மையில் ஒரு யானை தன் குட்டிகளுடன் இருப்பதால் அதை  ‘பிள்ளை குட்டி யானை’ என்று சொல்லி விற்றதாக என் பையன் சொன்னான்.
-ராதிகா ரவீந்திரன் 

னது நீண்ட நாள் கனவு கருகமணி மாலை. 2020ம் ஆண்டு எனது மகன் அன்னையர் தின வாழ்த்துகளுடன் கருகமணி மாலை பரிசளித்தான்.

கண்களில் கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டேன்.  மறக்க முடியாத பரிசு.
 –உஷா சங்கரன்

ண்ட்ராய்டு போனை வைத்துக் கொண்டிருந்த எனக்கு “ஐ”போன் வேண்டும் என்று நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது  என்னுடைய 60ஆவது பிறந்த நாளுக்கு என் மகள் அமெரிக்காவில் இருந்து “ஐ”போன் அலைபேசியை வாங்கி அனுப்பிய போது என் மனதில் சந்தோஷம் அலையலையாக மேலே எழும்பி எழும்பி குதித்தது.

பொக்கிஷமாக வைத்திருக்கும்  அந்த போனை யாரையும் தொட விடாமல் தினமும் எடுத்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்து என் மகளுக்கு கொடுப்பது போல எண்ணி மகிழ்வேன்.                                                                                                         உஷா முத்துராமன் 

2003ல் என் மகள் குஜராத்தில் உள்ள  ஓர் கம்பெனியில் பணியில் அமர்ந்தாள். அவளை சந்திக்க சென்ற பொழுது நாங்கள் இருவரும் ஒரு துணிக்கடைக்கு சென்றோம். அங்கு ஒரு புடவை மிகவும் அழகாக இருந்தது. ஆனால் நான் எதோ ஒரு தயக்கத்துடன் அந்த புடவையை வாங்கிக் கொள்ளாமலேயே ஊருக்கு வந்துவிட்டேன்.

என் மகள் அதை நினைவில் வைத்திருந்து திருச்சி வந்தவுடன் சாரதாஸ் கடைக்கு அழைத்துப் போய் அதே மாதிரி பேட்ச் வொர்க் செய்த புடவையை அன்னையர் தினத்திற்காக  வாங்கி அன்புடன் பரிசளித்தாள். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆன பின்பும், நான் பலமுறை அணிந்து சந்தோஷப்பட்ட பிறகும் புடவையின் நிறமும் மங்கவில்லை. கிழியவும் இல்லை. புதிது போலவே இருக்கிறது.   இது தானோ என் மகளின் அன்பின் ஒளி?
சுதா திருநாராயணன்

னக்கு இரண்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள். என் பிறந்த நாளாக இருக்கட்டும், திருமண நாளாக இருக்கட்டும், அன்னையர் தினமாக இருக்கட்டும், காகிதத்தில்  அழகழகாக என்னை வரைந்து, நிறைய இதயம் போட்டு, அவர்கள் மனதில் தோன்றும் வரிகளை எழுதி பரிசளிப்பார்கள்.

இவை ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான். அவர்கள் வளர்ந்து, சம்பாதித்து எதிர்காலத்தில் எனக்கு வேறு பரிசுகள் தரலாம்… ஆனால், இந்த கிருக்கல்களுக்கு  மதிப்பே கிடையாது.
தேன்சிட்டு .

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...