0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

 

ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்!

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும் இருக்கும் திரைக் கலைஞர்களுக்கு உயரிய அங்கீகாரம் ஆஸ்கார் விருது  இதில் முக்கியமானவை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளாகும்.

ஆஸ்கார் வாங்கிய முதல் பெண் இயக்குனரான கேத்ரின் பிகிலோவுக்கு ’தி ஹர்ட் லாக்கர்’ (The Hurt Locker) என்ற திரைப்படத்திற்காக 2010ல் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது.

இவருக்கு வயது 68!

அதிரடி காட்சிகளை தத்ரூபமாகவும், உண்மையாகவும் எடுப்பதிலும், ‘கிளைமேக்ஸ்’ காட்சிகளை இயக்குவதிலும் மிகவும் பிரபலமானவர் கேத்ரின்.

‘பாயிண்ட் பிரேக்’, திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார். (ஆஸ்கார் விருது பெற்ற இரண்டாவது பெண் இயக்குனர், சீனா நாட்டைச் சேர்ந்த “சோலே ஸாவோ”. (Chloé Zhao) Nomadland என்ற படத்திற்காக சென்ற ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்த விருதினை பெறும் மூன்றாவது பெண் இயக்குனர் ஜேன் கேம்பியன் (Jane Campion) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். The Power of the Dog” என்ற திரைப் படத்திற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.)

***********************

விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி இளம் பெண்!

“கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா” என்று பி.சுசீலாவின் இனிய குரலில் ஒரு பழைய பாட்டு உண்டு. இங்கே ஒரு வெண்மதி கால்களில்லாமல் பல விளையாட்டுக்களிலும் சாதனை புரிந்து வருகிறது.

இந்த சாதனைப் பெண்ணின் பெயர் சுபஜா.

நாகர் கோயிலில் ஆறு பேர் உடன் பிறந்த கடைக்குட்டி. இவருக்கு ஒரு வயதாகும் போதே தந்தை இறந்து விட, அம்மாவும் பக்கவாதம் வந்து படுத்து விட்டாராம்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக நாகர் கோயில் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறும் போது கீழே விழுந்து ரயில் சக்கரங்களில் மாட்டிக் கொண்டு ஒரு கால் சிதைந்து விட்டது. மற்றோர் கால் துண்டிக்கப்பட்டு விட்டது.  ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்த பிறகு வீடு திரும்பி, நண்பர்கள் உதவியோடு,  தேர்வு எழுதி, பன்னிரண்டாம் வகுப்பில் 880 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். காலில் அடிக்கடி ரத்தம் வரவே, ஒரு ஜெர்மானிய பெண் இவரை மருத்துவரிடம் காட்டியபோது.

‘சிதைந்த நிலையில் இருந்த காலை எடுப்பதே நலம்’ என்று மருத்துவர் மற்றொரு காலையும் நீக்கினார்.

பின்னர் நல்ல உள்ளம் கொண்ட அந்த ஜெர்மானிய பெண், தன் சொந்தச் செலவில் இவருக்கு செயற்கை மரக்கால்களைப் பொருத்திவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பிலும் சேர்த்துவிட்டார்.

படிப்பு முடிந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

விளையாட்டுக்களில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரவே, முயற்சியாலும், பயிற்சியாலும் நீச்சல், வட்டு எறிதல், ஜாவலின் த்ரோ, கூடைப் பந்து, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் கடும் பயிற்சி எடுத்து, போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வென்றிருக்கிறார்.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று உலகம் போற்றும் ஒரு பிளேட் ரன்னர் (Blade Runner) ஆக வேண்டும் என்பதே இவரது லட்சியம். இவரது வெற்றிகள் தொடரட்டும் என்று மங்கயர் மலர் வாழ்த்துகிறது.

***********************

ஓவியத்தில் விருது பெற்ற பல்கலை வித்தகர் மாணவி!

12 வயதே ஆன மாணவி சூடாமணி,  கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், என பன்முகத் திறமையோடு விளங்குகிறார். ‘உலக சாதனை விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

தனது சிறுகதைகளை, ‘அம்மாவைத் தேடி’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

(சூடாமணி என்ற பிரபல எழுத்தாளரின் பெயர் கொண்டிருப்பதாலோ) ஓவியம் வரைவதிலும் வல்லவர். கம்ப ராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களைப் பற்றி  சமூக வலைத்தளங்களில் உரையாற்றுகிறார்.

தன் யூடியூப் சேனலில் 70-க்கும் மேற்பட்ட  தமிழ் மொழி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, பலரது பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் சூடாமணி.

எட்டு வயதில், ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்ற பிறகு அதில் மேலும் திறன் வளர்ப்பதற்காக கலைக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

‘வஜூரா உலக சாதனை’ ‘பொதிகை தமிழ்ச் சுடர்’, அப்துல்கலாம் உலக சாதனை சான்றிதழ், பாரதி பைந்தமிழ் விருது, இத்தனையும் வாங்கியிருப்பவர் இவர்.  தூய்மை இந்தியா குறித்த ஓவியத்துக்காக ‘ஸ்வச் பாரத் அபியான் பதக்கம்’, இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...