0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ன்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ். படித்த அரசாங்க மருத்துவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர், பி.பி.செக் செய்தபோது, அந்த முதியவரின் சட்டைப் பையில் இருந்த வஸ்துவைப் பார்த்துவிட்டு, “இது என்ன பேஸ்மேக்கரா?” என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

பேஸ்மேக்கருக்கும், ஹியரிங் எய்ட் மிஷினின் பேட்டரிக்கும் வித்யாசம் தெரியாத பெண்மணி, அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறாரே! அந்தக் கொடுமையை என்ன சொல்ல…?

நல்லவேளை, அந்தப் பெரியவருக்குக் காதும் கேட்கவில்லை; தமிழும் புரியவில்லை…. தப்பித்தேன்டா சாமி!

**************

ன்னுடைய அக்கா, தனி ஆளாக பெங்களூரில் வசித்தவர். அவருக்கு திடீரென்று மூச்சுவிட முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணை உதவிக்கு அழைத்திருக்கிறார். அக்கா, லேசாக மயக்கமுறவே, பயந்துபோய் கூப்பிடு தூரத்தில் உள்ள மிகப் பெரிய பந்தா மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

“மருத்துவக் காப்பீடு இருக்கிறது; மகன் வசதியானவன்” என்று தெரிந்ததும் ‘ரமணா’ பட ஸ்டைலில் எல்லாமே நடந்தேறியது.

“நுரையீரல் பிரச்னை. 30%தான் பிழைக்க வாய்ப்பு!” என்றெல்லாம் ஏகத்துக்கும் பயமுறுத்தி, ஐ.சி.யு.வில் வைத்து, பல லட்சங்களைக் கரைத்தனர்.

பிறகு நிரந்தரமாக ஆக்ஸிஜன் மற்றும் மாஸ்க் கருவியை இரவு நேரங்களில் தூங்கும்போது பயன்படுத்தணும் என்று கொடுத்து அனுப்பிவிட்டனர்.

பிறகு அக்கா, தம்முடைய மகனோடு மும்பைக்கே சென்றுவிட்டார்.அங்கே அவருக்கு மறுபடி இருமல் தொந்திரவு வரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய் இருக்கிறார்.

அவர் என்டோஸ்கோபி செய்து, தொண்டையில் இருந்த சிறுகட்டியை அகற்றியதில், இருமல், மூச்சிறைப்பு எல்லாமே போய்விட்டது. இட்ஸ் கான்! போயே போச்சு! வெறும் மூவாயிரம் ரூபாய் செலவு!

இப்போது பெங்களூரு பிரம்மாண்ட ஆஸ்பத்திரி கொடுத்த அந்த நவீனக் கருவி பரண் மீது ‘உய்யலாலா’ பாடிக் கொண்டிருக்கிறது.

**************

ப்படிப்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் ‘ஹிப்போக்ரடிக்’ உறுதிமொழி எடுத்தால் என்ன? மகரிஷி  ‘சரக் ஷபத்’ உறுதிமொழி எடுத்தால் என்ன?

பணக் கட்டுகளின் மீது மட்டுமே அக்கறை… கூடவே அறைகுறை அறிவு… இந்த மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகிகளும் மனசாட்சியின் மீதல்லவா உறுதிமொழி எடுத்திருக்கணும்? அதை நீங்க செய்யுங்க மருத்துவ மாணவர்களே!

எந்த மொழியானால் என்ன… தொழில் நேர்மை முக்கியம்.., ஏனென்றால் மக்கள் உங்களை கடவுளாகவே பாவித்து அல்லவா தங்களை ஒப்படைக்கின்றனர்? அதை மறந்துடாதீங்க ப்ளீஸ்…

1 COMMENT

  1. இப்போது சென்னையிலும் இந்த மாதிரி பகல் கொள்ளை ஆஸ்பத்திரி என்ற பெயரில் நடக்கிறது. தடுக்கத்தான் யாரும் இல்லை. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள்!

கயமை கடக்க -சிரஞ்சீவி இராஜமோகன் படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல்...