0,00 INR

No products in the cart.

நடிப்பல்ல! 

கதை: மாதவி
ஓவியம்: சேகர்

ருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன்  இறங்கினாள்  மீரா.

செகரெட்டரி, நடிகை மீராவை பூங்கொத்து கொடுத்து வரவேற்க “தேங்க்யூ” என்று பெற்றுக்கொண்ட மீரா “ஆக்ஸிடென்டான குழந்தை பூமா எப்படி இருக்கா?” என்று தேடினாள். பூமா ஓடிவந்து “வணக்கம்மா”   என்றாள். “நல்லாயிருக்கியா?” என்று தலையை கோதினாள் மீரா “சூப்பரா இருக்கேம்மா..ஆ காமிங்க,” என்ற பூமா ஸ்வீட் ஊட்டி  விட்டாள்.

பூமாவை  தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற மீரா எல்லா குழந்தைகளுக்கும் பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களை கொடுத்து “பிள்ளைங்களா இன்னைக்கு பூரா உங்களோடதானிருப்பேன்,” என்றாள்.

“ஐ! ஜாலி! ஜாலி” என குழந்தைகள் ஆனந்தக்கூச்சலிட,

“உங்களுக்கெல்லாம் புதுசா டிரஸ், ஸ்நாக்ஸ் எல்லாமிருக்கு. முதலில் சாப்பிடுவோமா?” என்று மீரா கேட்க “ஓ” என்றன மழலைகள்.

கேரம், செஸ் என்று விளையாடி வேண்டுமென்றே குழந்தைகளிடம் தோற்று “ஐயே! தோத்துட்டீங்க” என்ற குழந்தைகளின் வெற்றிக்கூச்சலை மிகவும் ரசித்தாள்.

“உங்களுக்கெல்லாம் பாடத்  தெரியுமா?”

“நல்லா பாடுவோமே!” என்றன குழந்தைகள்…

“அப்ப பாட்டுப்போட்டி.  எல்லாரும் நாலு வரி பிடிச்ச பாட்டை பாடுங்க. நல்லா பாடறவங்களுக்கு பரிசு. ஆனா சினிமா பாட்டு வேண்டாம்,” என்று மீரா கன்டிஷன் போட,

“நிலா நிலா ஓடி வா” என்று மழலையாய் பாடிய குழந்தையை தூக்கி கொஞ்சினாள்.

“அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா” என்று கூப்பிட்ட குழந்தைக்கு , அது கேட்ட முத்தமழையை பொழிந்தாள். தொடர்ந்து எல்லா குழந்தைகளும் பாடி முடிக்க, தன்னை மறந்து ர்சித்தாள் மீரா.

“மேடம் யாருக்கு முதல் பரிசு?”

“எல்லாருக்கும் முதல் பரிசு. சூப்பரா பாடினீங்க. வெரிகுட்“ என்று ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ 500/-  தந்தாள்.

“செல்லங்களா லஞ்சுக்கு ஓட்டல் மீனாவுக்கு போறோம். 5 ஸ்டார் ஓட்டல்”

குழந்தைகள் “ஹுரே” என்று ஆரவாரமி்ட்டனர்.

ஒரு குழந்தை மட்டும் “இதெல்லாம் எதுக்கு செய்யறீங்க?” என்று கேட்க, திக்கு  முக்காடிப்போன மீரா, உடனே சமாளித்து “எல்லாம் ஜாலிக்குத்தான் வாங்க போகலாம்” என வேனில் குழந்தைளுடன் சென்றாள்.

நீச்சல் குளத்தில் நீச்சல், சறுக்கு மரம், தொட்டில் ராட்டினம் மற்றும் டான்ஸ் பார்ட்டி, டின்னர் எல்லாம் முடிந்து வர இரவுமணி 7 ஆயிற்று.

“பிள்ளைங்களா, ஜாலியா பொழுது போச்சா? உங்களுக்கு ஏதாவது தேவைன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்ற மீராவை “அடுத்து எப்ப வருவீங்க?” என்று குழந்தைகள் கேட்டதும் கண் கலங்கினாள் மீரா.

“சீக்கிரம் வரேன். குழந்தைங்கன்னா எனக்கு உசுரு” என்று உருகிய மீரா, நேரே தன் ப்ரைவேட் டாக்டரும் தோழியுமான டாக்டர் பவித்ரா க்ளினிக்கில் ரகசியமாய் அட்மிட் ஆனாள், தன் மூன்றாவது அபார்ஷனுக்கு.

=========================================

காற்றுக்கென்ன வேலி?
கதை: தி.வள்ளி, திருநெல்வேலி.
ஓவியம் : பிள்ளை

வெள்ளிக்கிழமை பரபரப்பாக எல்லோருக்கும் விடிய… ராகவன்- கல்யாணி தம்பதிகளுக்கு மட்டும் அன்று அமெரிக்காவில் இருக்கும்  மகளுடன் பேசும் நாள் என்பதால் மலர்ச்சியாக விடிந்தது.

“ஏங்க, சீக்கிரம் வாங்க அபி கூப்பிடறா  யு.எஸ் ஸிலிருந்து.” ராகவன் அவசரமாக ஓடி வந்தார். ராகவனுக்கும், கல்யாணிக்கும் மகள் கூப்பிடும் அந்த நேரம்தான் நாளின் முக்கியமான நேரமாக தோன்றும்.

“அபி எப்படிம்மா இருக்க? நல்லா இருக்கியா? மாப்பிள்ளை நல்லா இருக்காரா? வேலையெல்லாம் முடிச்சிட்டியா? சாப்பிட்டாச்சா?” கல்யாணி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக,

“இரும்மா! நல்லா இருக்கேன். நீயும், அப்பாவும் எப்படி இருக்கீங்க?  கோயிலுக்கு போனீங்களா? இன்னைக்கு நாள் உனக்கு எப்படி போச்சு? “அரை மணி நேரம் போனது தெரியாமல் கலகலப்பாக மூவரும் பேசிக்கொண்டே போக,

“அபி, மாப்பிள்ளையையும் ஒரு நிமிஷம் பேச சொல்லு.”

“என்னங்க, அப்பா கூப்பிடுறாரு,  வந்து பேசிட்டு போங்க..”ஆதர்ஷ் லைனில் வர,

“என்ன மாப்பிள நல்லாயிருக்கீங்களா? வேலை எல்லாம் எப்படி போகுது?  போன ஞாயிற்றுக்கிழமை சம்மந்தி கிட்ட பேசுனோம். உங்க தங்கச்சி கூட வந்திருக்கா, அவகிட்டயும் பேசினோம் நானும் கல்யாணியும்”

“மாமா, நாங்க நல்லா இருக்கோம். நீங்க  நல்லா இருக்கீங்களா? ஐ செக்கப்புக்கு போகணும்னு சொன்னீங்களே. போயிட்டு வந்துட்டீங்களா ?என்ன சொன்னாங்க? ஹெல்த்தைப் பாத்துக்கோங்க.” மாப்பிள்ளையின் அன்பான பேச்சில் மனம் குளிர்ந்து போயினர்  ராகவனும், கல்யாணியும்.

” சரி மாப்ள! நேரமாயிருக்கும்  நீங்க படுங்க. நாளைக்குப் பேசுகிறோம்” என்று சொல்லி முடிக்க,  அபி, அவசரமாக வந்து ,”ஒரு நிமிஷம்பா!  இந்த வாரம் சனி, ஞாயிறு இங்க பக்கத்துல இருக்குற ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போறோம். போயிட்டு வந்ததும் நானே கூப்பிடுறேன். நீங்க   கூப்பிட வேண்டாம்” என்றாள்.

“ஆதர்ஷ்! உங்க அப்பா அம்மாவையும்  கூப்பிட்டு பேசிடுவோம் கையோட “என்றாள் அபி.

“டேய் எப்படி இருக்க?” என்று ஆதர்ஷ்  அப்பா ஆரம்பிக்க, “மாமா! நான் அபி  பேசுறேன். நாங்க நல்லா இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் எப்படியிருக்கீங்க?”

“அபியா? நல்லா இருக்கோம்மா. அப்புறம் எப்படி போயிட்டு இருக்கு? அங்க கிளைமேட் எப்படி இருக்கு?” மாமனார் மாமியாருடன் 15 நிமிடம் மகிழ்ச்சியாக பேசியவள்,”அப்பா, இந்த வார கடைசில நாங்க பக்கத்தில இருக்கிற டூரிஸ்ட் ஸ்பாட்  போறோம்.  சனி, ஞாயிறு கூப்பிட வேண்டாம், நாங்களே திங்கட்கிழமை கூப்பிடுறோம் ” என்றாள்  அபி.

“சரிமா! போயிட்டு வாங்க. அவசரமில்லை, பொறுமையா கூப்பிடுங்க” என்றார் ஆதர்ஷ் அப்பா.

ஆதர்ஷ்! நம்மோட ஒப்பந்தப்படி உங்க அப்பா அம்மா கிட்ட நானும், எங்க அப்பா அம்மா கிட்ட நீயும்  பேசி, அவங்கள நாம சந்தோசமா சேர்ந்து வாழற மாதிரி நம்ப வச்சாச்சு. நீ வீக் எண்ட் உன்னுடைய இஷ்டப்படி போ. என்னுடைய இஷ்டப்படி நான் என் பிரண்ட்ஸ்ஸோட வெளியே போறேன்.”

அபி! நாம ஒரே வீட்டில் அவங்க அவங்க இஷ்டப்படி தனித் தனியா வாழ்றது பெரியவங்களுக்குத் தெரிய வேண்டாம். நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல, குழந்தையும் வேண்டாம்ங்கறது நாம சேர்ந்து எடுத்த முடிவு. உன் இஷ்டப்படி நீ இரு… என் இஷ்டப்படி நான் இருக்கேன்… உறக்கம் அவர்களை ஆட்கொண்டது. எத்தனை நாட்கள் இந்த நாடகம் ஓடும்? இறைவனுக்கே தெரியும்!

3 COMMENTS

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

மாதவி என்னும் மாதரசி!

-ரேவதி பாலு மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள்!

கயமை கடக்க -சிரஞ்சீவி இராஜமோகன் படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல்...

சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!

1
-ஆர். மீனலதா. சம்மர்! அக்னி நட்சத்திரம்! அப்பப்பா! என்ன வெயில், என்ன வெயில்…  சலிப்போ, அலுப்போ  தேவையில்லை.  “சவாலே சமாளி” மாதிரி “சம்மர் சமாளி”தான். ஆயுர்வேதிக் முறையில் வாதா, பிட்டா, கபா என காலங்களைக் கூறுகிறார்கள்....