0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கிழமைகளின் பெயரில் உள்ள ஊர்கள்:

ஞாயிறு கிராமம் – சென்னை மாவட்டம்

திங்களூர் – தஞ்சை மாவட்டம்

செவ்வாய் பேட்டை – சேலம் மாவட்டம்

புதன் சந்தை – நாமக்கல் மாவட்டம்

வியாழன் மேடு – திருச்சி மாவட்டம்

வெள்ளியூர் – திருவள்ளூர் மாவட்டம்

சனியூர் – தென் ஆற்காடு மாவட்டம்

-பி. மஹதி, ஸ்ரீரங்கம்.

==========================

கட்டி பெருங்காயத்தை ஈஸியாக பொடி செய்தல்!

ரு பீங்கான் கிண்ணத்தில் உள்ளே எண்ணெய் நன்கு தடவி விடவும். அதில் பெருங்காய கட்டிகள் வைக்கவும். பின் அதை மைக்ரோ அவனில் உள்ளே வைத்து 2 நிமிடம் ஆன் செய்யவும். அது பொரிந்து உப்பி வரும். பின் வெளியே  எடுத்து ஆறவிட்டு கத்தியால் சுற்றிலும் கீரிவிட்டு மெதுவாக எடுத்து ஒரு கவரில் போட்டு தட்டிவிட்டு, மிக்சியில் போட்டு பொடி செய்து டப்பாவில் போட்டு உபயோகிக்கலாம்.
-ராஜி பார்த்தசாரதி, திருச்சி

==========================

எப்போதும் உதவும் டிப்ஸ்!

நாம் எந்த ஊர்களுக்கு போனாலும், அந்த ஊர்களின் வரலாறு மற்றும் சிறப்பான கோயில்கள் பற்றி எழுதி வைத்துக் கொண்டால் திரும்பவும் போகும்போது, அல்லது மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல மிகவும் செளகரியமாக இருக்கும். போகும்போது கையில் சிறிய கல்கண்டு பாக்கட் ஒன்று எடுத்துப் போனால், கடவுளுக்கு அவர்கள் அதை நைவேத்தியம் செய்து திரும்ப நம்மிடம் கொடுத்தால் தாகம் தணிய மிகவும் செளகரியமாக இருக்கும்.

வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு பூண்டுக் குழம்பு, எள்ளுப்பொடி, நிலக்கடலை, சின்ன வெங்காயம், முளைக்கட்டிய பயறு வகைகள், இவையெல்லாம் கொடுத்தால் இவர்களுக்கு நன்கு ஹார்மோன் வளரும். சாதம் வடித்த கஞ்சியில் வெண்ணெய் போட்டுக் கொடுத்தால், சூட்டினால் வரும் வயிற்று வலி நன்கு குறையும்.

நாம் காரிலோ அல்லது டிரெயினிலோ பயணம் செய்யும்போது கையில் ஒரு துணிப்பை எடுத்துப் போனால் அதில் நாம் சாப்பிடும் பிஸ்கட் கவர், வாழைப்பழத் தோல், டிபன் சாப்பிட்ட கவர் , பேப்பர் கப்புகள் போன்றவைகளை போட்டு வைத்துக் கொண்டு வண்டி நிற்கும்போது குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். சுத்தம், சுகாதாரம்தான் நமக்கும், நம் நாட்டடிற்கும் தேவை. இதை நாம் கடைபிடிக்கலாமே.
-ராஜி பார்த்தசாரதி, திருச்சி

==========================

படமும் செய்தியும்!

நாய் வளர்ப்போரின்  அஜாக்கிறதையைப் பற்றி  மங்கையர் மலரில் படித்தேன். கோவையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில், ஆங்காங்கே இது போன்ற பாக்ஸ் வத்திருக்கிறார். நாயை அழைத்து வருபவர்கள், கூடவே அசிங்கத்தை அள்ளக்கூடிய உபகரணத்தையும் கொண்டு வருகிறார்கள். அவர்களே எடுத்து அந்த பாக்ஸில் போட்டு விடுகிறார்கள். துப்பரவு பணியாளர்கள் தூய்மைபடுத்தி விடுவார்கள. எந்த கெட்ட நாத்தமும் இருக்காது.  இது போல அனைத்து பொது இடங்களிலும் வைத்தால் , மக்கள் போக்கில் நிச்சயம் மாற்றம் வரும்!
-ஜானகி பரந்தாமன், கோவை

==========================

ஐந்தறைப் பெட்டிக்கு வந்த ஆபத்து!

மீபத்தில் என் மகன் வீட்டிற்கு சென்றிருந்தேன். வழக்கமா அங்கு செல்லும்போதெல்லாம் சமையல் வேலையை என் பொறுப்பில் எடுத்துக்கொள்வேன். இந்த முறை கிச்சனுள் சென்றபோது அலமாரியில் காற்றுப் புகாத (ஏர்டைட்) கன்டைனர்களில்  மளிகைப்  பொருட்களை பெரிதிலிருந்து மிகச்சிறிய சைஸ் வரை அடுக்கி அதில் பொருட்களும் நிரப்பி இருந்ததை கண்டேன். நாம் அன்றாடம் உபயோகிக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் போன்றவையும் சிறிய டப்பாவில் தனித்தனியா இருந்தது. ஐந்தறைப்பெட்டி வைத்துப் பழகிய எனக்கு அவற்றை ஒவ்வொன்றாக திறந்து மூடி கையாள்வது  சிரமமாகப்பட்டது. சுற்றிலும் பார்த்தேன். பழுதாகி ஒரு மூலையில் இருந்த ஃபிரை  பான் ஒன்றை எடுத்தேன். குட்டி குட்டி டப்பாக்களின் மூடியை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, பானுக்குள் டப்பாக்களை அடுக்கினேன். சரியான அளவுள்ள ஒரு தட்டைப் போட்டு மூடியதும் ஐந்தறைப்பெட்டி தயார். அங்கிருந்தவரை, அதை கிச்சன் மேடை மீதே வைத்து உபயோகித்தேன்.

மீண்டும் எங்கள் வீட்டுக்கு செல்லும்போது பழையபடி மாற்றி வைத்துவிட்டேன். இல்லேன்னா  ‘மாமியாரால  சிஸ்டமே கெட்டுப்போச்சி’ ன்னு சொன்னா என்ன செய்வது. நமது பாரம்பரிய சமையலறை சாதனமான ஐந்தறைப் பெட்டியை இன்றைய தலைமுறைப் பெண்கள் மொத்தமா ஒதுக்கிவிட்டது வருத்தமாகத்தான் இருக்கு.
-ஜெயகாந்தி மகாதேவன்,  சென்னை 

==========================

நவபாஷாணம்!

வம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்கக் கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன வாம். நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கை.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால்  தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

==========================

தானமும் பலன்களும்!

முக்கிய நாட்களான   அமாவாசை, பெளர்ணமி, மற்றும் அட்சய திருதி நாட்களில் எந்தெந்த பொருட்களை தானம் தந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

அன்னம் – வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்.

தேன் – புத்திர பாக்கியம் உண்டாகும்.

தீபம் – கண்பார்வை தெளிவடையும்.

அரிசி – நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்.

நெய் – நாட்பட்ட தீராத நோய்களை போக்கும்.

பால் – துக்கம் நீங்கும்.

பழங்கள் – புத்தியும், சித்தியும் உண்டாகும்.

தேங்காய் – நினைத்த காரியம் வெற்றியாகும்.

நெல்லிக்கனி – ஞானம் உண்டாகும்.

அமாவாசை நாளில் பசுவிற்கு  அகத்தி கீரை உணவளித்தல் என்பது பித்ருக்ளை மகிழ்விக்கும். அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.
-சுந்தரி காந்தி, சென்னை

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...