0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

‘பட்டம்’ விடும் பழக்கம் உண்டா?
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

‘விட்ட’ங்கிறதைவிட, ‘விடுவதை வேடிக்கை பார்த்த’ அனுபவம் உண்டு!
ஆக்சுவலி, அந்த டீம்ல சிறுமிகளுக்குக் கண்டிப்பாக அனுமதியில்லை. ஆனால், ஆங்கில செய்தித்தாளின் மெயின் ஸ்பான்ஸரே நான்தான் என்பதால், ‘ஒப்புக்கு சப்பான், ஊருக்கு மாங்கொட்டை’யாகச் சேர்த்துக் கொள்வார்கள். (தமிழ் பேப்பரின், ‘நசநச’ காகிதம் பட்டம் செய்ய லாயக்கில்லை.)

அப்பல்லாம் ஏதுங்க ஃபெவிகால்? சோறு அல்லது இட்லிதான் பசை! நியூஸ் பேப்பரை பிளேடால் கிழிச்சு, தென்னங்குச்சியை வில் போல வளைச்சு ஒட்டி, நீண்ட வால் வெச்சு, நூல் போட்டு… எல்லாமே ஏதாவது ஒரு மொட்டை மாடியில் ரகசியமாகத் தயாரிக்கப்படும். ‘சூத்திரம் சரியா போடுடா!’ன்னு வேற பேசிக்குவாங்க. அதென்னவோ? சித்தர்கள் குறிப்பு போல ஏதோ சங்கேத பாஷை போல!!

வயல்காடு, ஏரிக்கரை போன்றவைதான் தோதான இடம். வெட்டவெளியில், காத்து வீசும் நேரம் பார்த்து, உயரமான இடத்தில் ஏறி, வாகாகப் பறக்க விடுவது எல்லாம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் லாஞ்சிங் டெக்னிக்கை மிஞ்சும் சாகசம்!

தென்னை மரத்திலோ, மின் கம்பத்திலோ பட்டம் மாட்டிக்கொண்டுவிட்டால், என்னவோ சொத்தே பறி போயிட்ட மாதிரி ஒரு சோகம்!
எல்லாம் முடிஞ்சு, தலை நிறைய புழுதியும், சிராய்த்த முட்டியுமாக நொண்டியபடி திரும்பும் அனைவரும் அச்சு அசல் கலிங்கப் போர் வீரர்களேதான்!

இப்போதும், நீல வானத்தில் எங்கோ தூரத்தில் மேகத்தைத் துரத்தும் பட்டங்களைக் கண்டால், சிறுமியாக மனசு ஓடோடி விடுகிறது பட்டத்தின் பின்னாலேயே!
(‘ஏம்மா, அனுஷா… எட்ட நின்னு ச்சும்மா வேடிக்கை பார்த்ததுக்கே இவ்ளோ நூல் விடுறியே… பானா காத்தாடியோட, கழுகு காத்தாடிக்கு டீல் போட்டு அறுத்து விட்டிருந்தா என்னென்ன எழுதியிருப்பே?’ இதுதானே உங்க மைன்ட் வாய்ஸ்? கேச் பண்ணிட்டேன் கெஜலட்சுமி மேடம்!)

‘நீ ஒண்ணுக்கும் லாயக்கில்லை; மாடு மேய்க்கத்தான் லாயக்கு!’ என்றெல்லாம் சொல்லி குழந்தைகளை அதைரியமூட்டலாமா?
– என்.பாலகிருஷ்ணன், மதுரை

சொல்லித்தான் பாருங்களேன்! ‘சரி, நாலு பசுமாடு வாங்கித் தாங்க… டெய்ரி ஃபார்மிங்ல நல்ல காசு வருதாம்!’னு சட்டுன்னு டீலை முடிச்சுக்குவாங்க!
மாடு மேய்க்கத்தான் நிறைய திறமை வேணும் பாலகிருஷ்ணன் சார். வாயில்லா ஜீவன்களுக்கு என்ன தேவைன்னு புரிய கனிந்த உணர்வோடு பழகத் தெரியணும். அதுவே ஒரு பெரிய கலை! அப்புறம் தண்ணி, தீவனம் வைக்கணும். மருத்துவம் தெரியணும், சாணி அள்ளணும், குளிப்பாட்டணும், லாடம் கட்டணும், மூக்கணாங்கயிறு போடத் தெரியணும், வேப்பிலை, துளசி புகை போடணும், சினைக்கு விடணும், பிரசவம் பார்க்கணும், விஷப்புல் மேயாமப் பார்த்துக்கணும், பால் கறந்து சப்ளை பண்ணணும். பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கிற மாதிரி பார்த்துப் பார்த்துப் பாதுகாக்கணும்.

அதனால்தானோ என்னவோ கண்ணனும் மாடு மேய்த்தான். முருகனும் மாடு மேய்த்தான்!

கண்ணன் சரி; முருகன் எப்போ?

ஆவினன் குடிவாழ் அழகிய வேலன் மாடு மேய்த்தானாமே! தேவர்களைப் பசுக்களாக பூலோகம் வரச் செய்து, அதனை வெறும் மூங்கில் குச்சி கொண்டு மேய்த்து, அதனுடைய பாலை மட்டுமே குடித்து, பாசுபதம் விரதம் காத்து, தாரகாசூரனை வதம் செய்தாராம் முருகர்!
இனி, யாராவது பேசுவீங்க?

கடற்கரையா? கடல் அலையா? எது காதல்?
– எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்


டல் என்பது வாழ்க்கை என்றால், மனத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்வுமே அலைகள். அதுல காதலை மட்டும், ‘சுனாமி’ன்னு சொல்லலாம்.
ஆசைக் கரையில் தேடினால்
வெறும் சிப்பிகள்தான் கிடைக்கும்!
அன்புக் கடலில் மூழ்கித் தேடினால்
காதல் முத்துக்கள் கிடைக்கக் கூடும்!
அமைதி கரையிலா?
ஆழ்க் கடலிலா?
ஞானக் கரையைக் கடந்தால்
மாய அலைகள் ஓயுமோ?
பக்தி அலை வீசுகையில்
மற்ற அலைகள் மாயுமோ?
நான் என்ன உமர்கயாமா? கலீல் ஜிப்ரானா? என்னல்லாம் கேள்வி வருதும்மா? ஹலோ மிஸ்டர் அர்ஷத், இந்தக் காதல் எல்லாம் ஹார்மோன்களின் தாக்குதல்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உருப்படுகிற வழியைப் பாருங்கப்பா!

’மாநாடு’ – சிலம்பரசனின் சினிமா கேரியரில் எப்படிப் பார்க்கப்படும்?
– சி.கார்த்திகேயன், சாத்தூர்

நிச்சயம் மாஸ் என்ட்ரியாக! செத்து செத்து மீண்டும் கெத்து காட்டும் துடிப்பான வேடத்தில் எஸ்.டி.ஆர்!
வந்த காட்சிகளே திரும்பத் திரும்ப வந்து அலுப்பை ஏற்படுத்தக்கூடிய, ‘டைம் லூப்’ களம்! ரொம்பவும் சிக்கலான திரைக்கதை. அதைப் புரியும்படி படம் எடுத்திருப்பதே ஒரு சவால்! அதிலும் சிம்பு மாதிரி ஒரு, ‘மூடி’ நடிகரை வைத்துக்கொண்டு படமாக்குவது மண்டைக் காய்ச்சல்! சேலஞ்சை புரிஞ்சுக்கிட்டு மொத்த டீமுமே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

சிம்புவுக்கு சரிசமமாக ஆக்ரமித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, யுவனின் இளமைத் துள்ளும் பின்னணி இசை, ரிச்சர்ட் நாதனின் அதிரடியான ஒளிப்பதிவு… எல்லாவற்றையும் விட எடிட்டர் கே.எல்.ப்ரவீன் (எத்தனை முறை படத்தைப் பார்த்தாரோ?) கூர்மையான கத்திரியால் படம் மேலும் விறு விறு!
கங்கிராட்ஸ் வெங்கட் பிரபு! குட் கம்பேக் சிம்பு!

3 COMMENTS

 1. பட்டம் விடும் பழக்கம் தங்களுக்கு இல்லையென்றாலும் அதிலுள்ள சுகத்தையும், சோகத்தையும் சுவையாகச் சொன்ன மேடத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
  எம்.இராஜேந்திரன்,
  இலால்குடி.

 2. குழந்தைகள் மாடுமேய்கலாமா என்ற கேள்விக்கு கண்ணனையும்,முருகரையும்
  வைத்து பாட்டுடன் சுட்டிக்காட்டி இருப்பது
  நன்றாக இருந்தது.

 3. பட்டம் விட்டதை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டது படிக்க படிக்க ஆர்வமாக ரசிக்கும் படியாகவும் உள்ளது. அனுஷா மேடம், தங்களின் பதிலை படித்து விட்டு இனி யாரும் யாரையும் பார்த்து ‘ நீ மாடு மேய்கத்தான் லாயக்கு’ என்று கூறவே மாட்டார்கள். பதில் வேற லெவல் . Keep it UP.

  ஆ. மாடக்கண்ணு
  பாப்பான்குளம்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா? -பி. வந்தனா, விருத்தாச்சலம் நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா...! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும்...

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...