0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை

“அம்மா பேய், தான் குடியிருந்த பாழடைந்த வீட்டை, மகள் பேய்க்கு எழுதிக் கொடுத்து விட்டதாம்!”
“அப்ப அது, ‘பேய் வீட்டுச் சீதனம்’னு சொல்லு!”
– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………..


“உங்க கண் நல்லாத்தான் இருக்கு! எந்தவித குறைபாடும் இல்லையே!”
“டாக்டர்! டி.வி.யில மெகா சீரியல் பார்க்கும்போது ஒரு சொட்டு கண்ணீர்
கூட வர மாட்டேங்குதே!”

– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி
…………………………………………………………………..


“தலைவர் வலியப்போய் சி.பி.ஐ. வலையில் சிக்கிவிட்டாரா?”
“ஆமா! பெருமைக்காக, ‘ஊழல் செய்வது எப்படி?’ன்னு புத்தகம்
போட்டு மாட்டிக் கொண்டார்!”

– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி
…………………………………………………………………..


“பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது தப்பாப் போச்சு!”
“ஏன்?”
“பக்கத்துக்குப் பக்கம் பில் போடுவேன்னு சொல்றாங்க!
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..


“டிராபிக் போலீஸை கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு!”
“ஏண்டி?”
“எதைக் கொடுத்தாலும் மறைத்து கொடுக்கச் சொல்லுறார்…”
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..


“மசாலா டீ கேட்டது தப்பாப் போச்சு!”
“ஏன்?”
“மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டுக் கொடுத்துட்டாங்க!”
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..


“சென்னை பக்கம் திருட போனது ரொம்ப தப்பாப் போச்சு!”
“ஏன்?”
“வெள்ளத்துக்குள்ளே ஓடி வர முடியல!”
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..


“டாக்டர் ரொம்ப தெளிவுதான்…”
“எப்படி?”
“பாக்கெட்டையும் சேர்த்து ஸ்கேன் பண்ண சொல்லுறாரு…
பணம் எவ்வளவு இருக்குன்னு!”

– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..


“தடுப்பூசி எப்போது கடுப்பூசியாக மாறுகிறது?”
“ஒரு நர்ஸ், அவளுக்குப் பிடிக்காத மாமியாருக்கு போடும்போது!”
– கிரிஜா மணாளன், திருச்சி
…………………………………………………………………..


“கடவுளே எனக்கு ரொம்பப் பணக்கஷ்டம்…”
“பிறகு ஏன் ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுத்து வந்தாய்?”
– எஸ்.மோகன், கோவில்பட்டி

2 COMMENTS

  1. ஜோக்ஸ் அனைத்தையும் படித்ததும் மனது டக்கென ரிலாக்ஸ் ஆகிவிட்டது. வாய்விட்டுச் சிரிக்க நோய் விட்டு போகுமென்பதை உணர்ந்தேன். நன்றி.

  2. ஜோக்ஸ் அனைத்தும் “டாப் கியர்” போட்டு நான்ஸ்டாப்பாக சிரிக்க வைத்தது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

2
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...