0,00 INR

No products in the cart.

தைப்பொங்கல்…!

கவிதை

– வெற்றிப்பேரொளி, தஞ்சாவூர்.

தைப்பொங்கல்…!

தைப்பொங்கல்! தைப்பொங்கல்! தைப்பொங்கல் தமிழர் பொங்கல்!
தைத்திங்கள் தலைநாளில் தமிழின் பொங்கல்!

மைப்பொங்கல் விழிமாதர் வைக்கும் பொங்கல்!
மனையெங்கும் பரவிவரும் மகிழ்ச்சிப் பொங்கல்!

யற்பொங்கல் நெல்மணிகள் வீடு சேரும்!
வளப்பொங்கல் ஊருக்குள் வரிசை கட்டும்!

துயர்ப்பொங்கல் தான்முடிந்து இன்பப் பொங்கல்!
தோழமையின் கதவுதட்டும் உறவுப் பொங்கல்!

வாலிபத்துப் பொங்கல்தான் வனப்புப் பொங்கல்!
வானருவி இறங்கிவரும் வெள்ளித் தொங்கல்!

சேலினத்துப் பொங்கல்தான் பெண்ணின் கண்கள்!
செவியோரம் தேனிறைக்கும் கவிதைப் பண்கள்!

நெய்ப்பொங்கல் இலைநிறையும்!
நெஞ்ச மெல்லாம் நேசத்தின் சுவை வழியும்!

வாசல் முற்றம் பெய்திருக்கும் வண்ணமழைக் கோலப் பொங்கல்!
பூசணிப்பூ கொலுவிருக்கும் பொலிவுப் பொங்கல்!

ன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் பொங்கல்!
கடைவிழியால் பேசுகின்ற இனிமைப் பொங்கல்!

பொன்னிதழில் முத்தமிடத் துடிக்கும் பொங்கல்!
பூங்கழுத்தில் பொற்றாலி ஏறும் பொங்கல்!

தேன்பொங்கல் திருநாளில் ஒன்றுகூடி
தித்திக்கும் புன்னகையால் வாழ்த்துக் கூறி

வான்பொங்கும் கதிரவனை வணங்கி நிற்போம்!
வாழியவே வையமெலாம் மகிழும் பொங்கல்!

4 COMMENTS

  1. சர்க்கரை ப் பாெ ங்கலாக இனிமை யாக
    மனதுக்கு இதமாக இனிப்புக்கவிதையாக
    அழகாக ப் பாராட்டும்படி இருந்தது.
    து.சே ரன்
    ஆலங்குளம்

  2. தைப்பொங்கல்- கவிதை …….வார்த்”தை”களால் வர்ணஜாலம் பல புரிந்து உள்ளத் “தை” கொள்ளை கொண்டது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பட்டிக்காடு பட்டணமாச்சு!

0
கவிதை! - நிவேதிதா, சென்னை ஓவியம்: தமிழ் பட்டிணம்தான் வந்து நானும் பத்து வருஷம் ஆகிப்போச்சே!_  ஆனா பாழாப்போன  மனசு  மட்டும் பட்டிக்காட்ட தேடிப்  போச்சே! கேப்பங்கூழு  ருசிக்கு ஏங்கி என் நாக்கு  செத்துப் போச்சே!_  திண்ண கத  நூறு கேக்க பலமைலு தூரம்  இதோ பயணமாச்சே! வயக்காடு...

தாயே அனுமதி கொடு!

1
கவிதை! -ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு இதுவரை உன்னை முந்திப்போக நினைத்ததில்லை! இப்போதெல்லாம் மூன்றுகால் போட்டியிலும் நீயேதான் முதலிடம் பிடிக்கிறாய்! எண்பது வயதிலும் எனக்கு எதுவும் தெரியாதென்றே நம்புகிறாய் நீ இல்லா விட்டால் எனக்கு வாழத் தெரியாது என்றும் புலம்புகிறாய். உண்மைதான்... நான் கட்டியிருக்கும் கந்தல் வேட்டியைக் கூட நீதான் கசக்கி பிழிகிறாய் நான் குடிக்கும் கஞ்சிக்கு கூட உப்பு போதுமா போதாதா என்று...

கவிதை!

0
-ச்ஜேஸூ, ஜெர்மனி செயற்கை உரம்! முடிச்சுக் கயிற்றின் முத்த உறவு விடுபட உற்சாகத் துள்ளலுடன் தாய்மடி மோதி பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி! இடையிடையே தாயின் நாவருடல் இதமான சுகம் தர மீண்டும் மடி கிறக்கம் தேடியோடுகிறது கன்று! சற்று நேரத்தில்- இளைத்த வயிறு ஊதிய பலூனாய் பெருக்கிறது யூரியா தின்று கொழுத்த பாலக்கீரை போலவே!

கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் – ஜூலை 15

0
கவிதை! (கறுப்பு காந்தி) - ஆர். மீனலதா, மும்பை படித்தவரில்லையெனினும் பண்பிலே உயர்ந்து நின்று பாமரர்களின் கல்விப் பசி, வயிற்றுப் பசியாற்றி பனைமரமென உயர்ந்த பச்சைத் தமிழர்! சிறைச்சாலையின் தீவிர சித்ர வதையிலும் சிரித்த முகத்துடன் சிந்தித்து தன் அறிவினை வளர்த்த சிந்தனைச் சிற்பி! அரசியல் எதிரிகளை அன்புடன் நடத்தி அனைத்து மக்களும் நலன்பெற அரசின்...

புகைப்படக் கவிதை!

- மங்கையர் மலர் வாசகீஸ் FB  பகிர்வு! பாடம் ..!  பயமறியா  பருவத்திலேயே பாசம், நேசமென போதித்தது இயற்கையா? இறைவனாயென இன்றளவும் யோசிக்கிறேன்...!! -பானு பெரியதம்பி, சேலம் பழைய தத்துவம் புதிய படத்திற்கு... நால்வரோடு சேர்ந்து ஐவரான உண்மை நண்பர்கள் ரசிக்கும் இயற்கை காட்சி -உஷாமுத்துராமன், திருநகர்   என்னப்பா  பார்க்கறீங்க நல்லா...