0,00 INR

No products in the cart.

நள்ளிரவில் குண்டு மழை!

பயணம் – கிழக்கு ஐரோப்பியா – 8

– பத்மினி பட்டாபிராமன்

1945ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13ம் தேதி நள்ளிரவு. நெருப்பை உண்டாக்கும் 1861 டன் எடையுள்ள குண்டுகளும்,1477 டன் எடையுள்ள அதிக சக்தி வாய்ந்த குண்டுகளும் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரின் மீது பொழியப்பட்டன. இதில் நகரின் ரயில் நிலையங்களும், கட்டடங்களும், சர்ச்சுகளும் மிகுந்த சேதத்துக்குள்ளாயின; தீக்கிரையாகின. குண்டுகள் பொழிவது இரண்டு நாட்கள் தொடர்ந்தது. 25,000 பேர் கொல்லப்பட்டனர். போர்களின்போது மற்ற நகரங்களின் மீது குண்டு போடப்பட்டது உண்டு. ஆனால், ட்ரெஸ்டனில் குண்டு மழையே பொழியப்பட்டிருக்கிறது.

என்ன காரணம்?
ரண்டாம் உலகப் போரில் இங்கிருந்த பல்லாயிரக்கணக்கான யூதர்கள் (Jews), ஜெர்மனியின் நாஜி படையினரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு பழி வாங்குவதற்காக அமெரிக்க, பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் தொழில் நகரமாக வளர்ந்து கொண்டிருந்த ட்ரெஸ்டன் மீது குண்டுகள் போட்டன. முற்றிலும் இந்த நகரம் சேதமானது.
ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரம் சென்றபோது, அங்கிருந்த முக்கியக் கட்டடங்கள் எல்லாம் கரும் பாசி படர்ந்தாற்போல் இருக்கின்றன என்று சென்ற இதழில் பார்த்தோமே…இரண்டாம் உலகப் போரின் அடையாளங்கள்தான் அவை.

பொதுவாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சொல்லும்போது அவை உலகப் போர்களால் பாதிக்கப்பட்டதை, அதன் அடையாளங்களைக் காணாமல் இருக்க முடியாது. புனரமைப்பு செய்யப்பட்டாலும், போரின் நினைவாக சிலவற்றின் வெளித்தோற்றத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள். ஸேக்ஸனி (Saxony) என்னும் ஜெர்மனிய மாநிலத்தின் தலைநகரம் ட்ரெஸ்டன், ‘எல்பே’ நதிக்கரையில் (ஹேம்பர்கில் நாம் பார்த்த அதே எல்பே நதிதான்) அமைந்திருக்கும் இந்நகரை, 1806ல் நிர்மாணித்தவர் நெப்போலியன் போனபர்ட் (Napoleone Buonaparte). பின்னர் ஜெர்மானிய புரட்சி உட்பட, பல புரட்சிகளைச் சந்தித்த ட்ரெஸ்டன் 1871ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியுடன் இணைந்தது.

முதல் உலகப் போரின்போது சுமார் 20,000 ராணுவ வீரர்களின் இருப்பிடமாக அது ஆயிற்று. பின்னர் மோட்டார் தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, உணவு உற்பத்தி, வங்கிகள் என்று நல்ல வளர்ச்சி கண்டு வரும் நேரத்தில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. நேசப் படைகளின் குண்டு வீச்சினால் நகரம் பெரும் அழிவைச் சந்தித்தது. ஹிட்லர் ஆரம்பித்து வைத்த போர், அவரது நாட்டு மக்களுக்கே அழிவைத் தந்தது.

ட்ரெஸ்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் பீட்டர் என்னும் ஜெர்மானிய பத்திரிகையாளர், போர் முடிந்து ட்ரெஸ்டன் திரும்பியதும், நாசமடைந்த நகரை நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தார். அவை உலகப் புகழ் பெற்றன. போரின் விளைவுகள் எத்துணை பயங்கரமானவை என்பதை உலகுக்கு உணர்த்திய வரலாற்றுச் சான்றுகள் அவை.

செம்பர் ஒபரா ஹவுஸ்


ந்த நாடுகளில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெறும் இடம் ஒபரா ஹவுஸ். ட்ரெஸ்டனின் செம்பர் ஒபரா ஹவுஸ், 1841ல் கட்டப்பட்டது. அதன் வடிவமைப்பாளரின் பெயரையே கொண்டிருக்கும் இதன் அழகையும் கம்பீரத்தையும் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. உள்ளே அமர்க்களமாக, சீரமைப்புப் பணிகள் நடந்திருந்தாலும் வெளிப்புறம் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு கறுப்பாக இருப்பதை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

ஸ்டோன்பெல் டோம்
ட்ரெஸ்டனின் புகழ் பெற்ற லூதரன் சர்ச் – Dresden Frauenkirche – Lutheran church
1746ல் கட்டப்பட்டு குண்டு வீச்சினால் சேதமடைந்தது. ஐம்பது ஆண்டுகள் போர் நினைவுச் சின்னமாக வைத்திருந்த பின், 1994ல் புனரமைக்கப்பட்டது.
சிறப்பம்சமாக இதன் உச்சியில் 315 அடி உயரம் கொண்ட பெரிய டோம் கட்டப்பட்டுள்ளது. இதனாலேயே இது ஸ்டோன்பெல் டோம் என்று புகழ் பெற்றது.

கிரீடம் தரித்த வாசல்
ட்ரெஸ்டனில் ஒரு ராயல் பேலஸ் அற்புதமான ஐரோப்பியக் கட்டடக் கலையின் சான்றாக மிக கம்பீரமாக நிற்கிறது Dresden Castle.


சுமார் 400 வருடங்களாக, 1540லிருந்து அரசர்களின் வசிப்பிடமாக இருந்து வந்துள்ள இதுவும் போரில் பாதிக்கப்பட்ட இடம்தான். இதனுள்ளே மியூசியம் மற்றும் வேறு சில அலுவலகங்கள் இயங்குகின்றன. வெளிப்புறச் சுவரில் ஒரு பக்கம் முழுவதும் ம்யூரல் எனப்படும் சுவரோவியங்களைக் காணலாம். 1876ல், ‘இளவரசர்களின் ஊர்வலம்’ என்ற தலைப்பில் வரையப்பட்டுள்ளன இந்த சுவரோவியங்கள்.

இதற்கு பல நுழைவாயில்கள் உண்டு. அதில் ஒன்று க்ரோனென்டர் கேட் (Kronentor). இதன் உச்சியில் அரசரின் கிரீடம் போல அமைப்பு வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியே போனால், பிக்சர் கேலரி நம்மை வரவேற்கிறது.

அரண்மனையின் ஒருபுறம் பிரம்மாண்டமான தோட்டம். அதனுள் மிருகக்காட்சிசாலை, நகரின் வரலாற்றுச் சின்னங்கள், போரின் அடையாளமாக பழைமையோடு பாதுகாக்கப் பட்டாலும், நவீன கட்டடங்களும் நிறையவே இருக்கின்றன.
நாங்கள் தங்கிய விண்டாம் கார்டன் (Wyndham Garden) நான்கு நட்சத்திர ஹோட்டல் முற்றிலும் நவீனம். உலகின் முதன்மையான செயின் ஹோட்டல்களில் ஒன்று இது.

யூரோ கரன்சி மட்டுமே வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்குப் பயன்படுகிறது.
போர் அடையாளங்களுக்கான நகரத்தை சுற்றிப் பார்த்ததால் சிறு சாவனீர்கள் தவிர, ஷாப்பிங் எதுவும் செய்ய முடியவில்லை. கணேஷா ரெஸ்டரன்ட், பாம்பே மிர்ச்சி, ராஜ்மஹல், மசாலா இப்படி சுமார் பத்து இந்திய உணவுக் கூடங்கள் ட்ரெஸ்டனில் இருக்கின்றன. ‘டேஸ்ட் ஆஃப் இண்டியா’ ஹோட்டலில் அருமையான வட இந்திய உணவு கிடைத்தது.

செக் ரிபப்ளிக் (Czech Republic)

டுத்து நாங்கள் சென்ற இடம், ‘செக் ரிபப்ளிக்.’ நாட்டின் தலைநகரமான ப்ராக் (Prague) இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் நாஜி படைகளிடம் பிடிபட்டு, 1938லிருந்து 1945 வரை நாஜிகளின் ஆதிக்கத்தில் இருந்த நாடு. செக்கோஸ்லோவோகியா Czechoslovakia ஹிட்லர் தோற்ற பின், ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

1993ல் ஜனவரி மாதம் முதல் தேதியன்று, செக் ரிபப்ளிக் (Czech Republic) என்றும், ஸ்லோவோகியா (Slovakia) என்றும் இரண்டு தனி நாடுகளாக அமைதியாகப் பிரிக்கப்பட்டது.

செக் நாட்டின் தலைநகரான ப்ராக் செல்ல, கோச்சில் ட்ரெஸ்டனிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம். செங்கன் விசா (Schengen visa) எடுத்திருந்தபடியால் ஜெர்மனி, செக் நாடுகளுக்கிடையே செல்வதில் பிரச்னை எதுவும் எழவில்லை.

ப்ராக், ஐரோப்பாவின் மிக அழகிய நகரங்களில் ஒன்று. நகரின் நடுவே ஓடும் வ்லாடாவா (Vltava river) நதி, நகரை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் இத்தாலியில் துவங்கி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவிய பரோக் கட்டடக்கலை (Baroque architecture) முறையில் கட்டப்பட்ட வண்ணமயமான கட்டடங்களும், கோதிக் முறையில் கட்டப்பட்ட சர்ச்சுகளும், நடுவே ஓடும் நதியும் நகரை மிக அழகாக்குகின்றன.

முதலில் ஆயிரம் வருடம் பழைமையான ப்ராக் கோட்டைக்கு (Prague castle) அழைத்துச் செல்லப்பட்டோம். “கோட்டையை முதலில் சுற்றிப் பாருங்கள். பின்னர். பொடி நடையாக சார்ல்ஸ் பிரிட்ஜ் போகலாம்” என்று அறிவித்தார் எங்கள் கைடு.

‘ஆஹா… பெரும் புகழ் பெற்ற சார்ல்ஸ் பிரிட்ஜ் போகிறோமா?’ என்று சந்தோஷப்பட்டது மனம். ஆனால் அந்த, ‘பொடி நடை’ என்பது, மணிக்கணக்காக நீளும் என்று தெரியாமல் போயிற்று.
(தொடர்ந்து பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...