95 வயதில் அசத்தும் சமூக ஆர்வலர்!

95 வயதில் அசத்தும் சமூக ஆர்வலர்!
Published on
-மஞ்சுளா சுவாமிநாதன்
புகைப்படங்கள்: தொல்காப்பியன்

சென்னை பெசன்ட் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஆர்வலராக இருக்கும் காமாக்ஷி சுப்பிரமணியன் அவர்களை மங்கையர் மலர் சார்பாக சந்தித்தோம். சமீபத்தில் நடந்த தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பெசன்ட் நகர் 174 வது வார்டிற்கான தேர்தலில் போட்டியிட்டவர். அப்போது அதிக வயதுள்ள ஒரு வேட்பாளர் என்ற முறையில், பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இவரை பேட்டி எடுத்து வெளியிட்டன.

ஆனால், இவரது போராட்டம் இன்று நேற்று துவங்கியது அல்ல. எவ்வாறு 'traffic ராமசாமி' என்றால் சென்னையில் பிரசித்தமோ, அதே போல 'காமாக்ஷி சுப்பிரமணியன்' என்ற பெயர் தெற்கு சென்னை மற்றும் சென்னை மாநகராட்சியில் மிகவும் பிரசித்தம்.

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி முதல் இன்றைய DGP சைலேந்திர பாபு வரை இவருக்கு பரிச்சயம். "நான் பிறந்ததில் இருந்தே fighter," எனக் கூறும் இவர், மாநகராட்சியை கேள்வி கேட்பதில் இருந்து, கட்சி காரர்களின் மிரட்டல்களை எதிர்கொள்வது வரை தனது உரிமைக்காக போராடும், ஒர் துணிச்சலான பெண்மணியாக எப்போதுமே வலம் வருகிறார்.

'Civic Issues' என சொல்லப்படும் தெரு விளக்கு ஏரியாமல் போவது, குப்பை சரிவர எடுக்காதது, மழை நீர் வடிகாலில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற நகர்புற தினப்புகார்களை இடைவிடாது மாநகராட்சியை தொடர்பு கொண்டு சரி செய்வது தான் இவரது வாடிக்கை என கூறலாம். இது போல எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் ,பொறுமையுடன் சமூக பணிகள் செய்ய உயர்ந்த மனது மற்றும் எண்ணங்கள் வேண்டும். அவ்வகையில் அனைவராலும் ' காமாட்சி பாட்டி' என அன்போடு அறியப்படும் இந்த ஆர்வலர் வளர்ந்து வரும இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறார்.

"ஏன் பாட்டி இப்படி மாநகராட்சிக்கு போன் பண்ணிட்டே இருக்கீங்களே, அவங்க உங்கள திட்டமாட்டாங்களா?" என்று கேட்டதற்கு,

"உங்க நம்பர பார்த்தாலே பேஜாரா அயிடுது! ன்னு கூட மாநகராட்சி AE சொல்லி இருக்காங்க, ஆனால், நான் அதபத்தி எல்லாம் கவலையே பட்டதில்ல," என படு கூலாக விடை அளித்தார்.

இது போல காமாட்சி பாட்டியுடனான சுவாரசியமான கேள்வி பதிலுக்கு இந்த காணொளியை காணவும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com