கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்பூரா!

கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து சக்லேஷ்பூரா!
Published on
  -கங்கா கணபதி, பெங்களூரு

பெங்களூரிலிருந்து 220கி.மீ தொலைவில், ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள சக்லேஷ்புராவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம். வழியில்1792ல் திப்பு சுல்தான் கட்டிய ஸ்டார் வடிவ 'மஞ்ஜிராபாத் கோட்டை' அமைந்துள்ளது.

சிறிய மலை வாசஸ்தலமான சக்லேஷ்புராவிற்கு செல்லும் வழியெங்கும் வெண்பட்டு விரித்தார் போல் வெண்ணிற பூக்களுடன் காணப்பட்ட காபி தோட்டம் கண்களுக்கு ரம்யமான விருந்து.

காலை சுப்ரபாதமாக பல வகை பறவைகளின் ஒலி மற்றும் தூரத்திலிருந்து கேட்கும் மயிலின் அகவல், சிறந்த விருந்தோம்பலுடன் கூடிய சிறந்த உணவு என டென்ட் வடிவில் அமைந்த ஹோம் ஸ்டே வித்தியாசமாக இருந்தது.

நேரமின்மை காரணமாக, 20 கி.மீ தூர மலை ஏற்றத்தில் அமைந்துள்ள 'view point' ற்கு ஜீப்பில் சென்றோம். மிகவும் குறுகலான ஏற்றத்தில் ஜீப் பிடியுடன், உயிரையும் பிடித்துக் கொண்டு சென்றது திரில்லிங்கான அனுபவம்.

ஜீப் பானட்டில் சிறியவர்களை அமர்த்தி சிறிது தூரம் ஓட்டிச் சென்றது, இரண்டு கி.மீ டிரெக்கிங் கூட்டிச் சென்றது என  ஓர் ஜாலியான வண்டி ஓட்டுனர் அமைந்தது எங்கள் கொடுப்பினை.  அன்று மாலை அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வழிபாடு, வழியில் சிறிய அருவியில் இருந்து  சலசலத்து ஒடும் நீரோடை என அனைத்தையும் சிறிதளவேனும் ரசிக்கும் பேறு அமைத்து கொடுத்த இறைவனுக்கும், இயற்கை அன்னைக்கும், வேண்டாம் என மறுத்த போதிலும் வற்புறுத்தி அழைத்து சென்ற மகள், மருமகன்,பேத்திகளுக்கும் நன்றி தெரிவித்து பெங்களூர் திரும்பினோம்.

உங்களைக் கவர்ந்த சுற்றுலா தலத்தைப் பற்றி, புகைப்படங்களுடன், சுவாரசியமான கட்டுரைகளாக எழுதி mm@kalkiweekly.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்படும் பயணக் கட்டுரைகள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் பிரசுரம் ஆகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com