0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

 

நீச்சலில் சாதித்த மாற்றுத் திறனாளி சிறுமி!

ந்தியாவையும் – இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தி கடல் கால்வாயை, ஆட்டிசம் நோய் பாதித்த வாய் பேச இயலாத பதிமூன்று வயதுச் சிறுமி ஒருவர் நீந்திக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படை பிரிவில் பணியாற்றுபவர் மதன்ராய், இவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய்.  இவர் ஆட்டிசம் என்னும் மன இறுக்கம் கொண்ட  நோயால் பாதிக்கப்பட்டவர்.

சிறு வயது முதலே இவருக்கு நீச்சலில் ஆர்வம் இருந்தது. இதனைக் கண்ட பெற்றோர், அதனை ஊக்கப்படுத்தியதில் நீச்சலில் பல சாதனைகள் புரிந்தார். இந்திய கடற்படையினருக்கான பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, இந்தியா-இலங்கைக்கு இடையே உள்ள கடல்பகுதியை கடந்து சாதனை புரிய பெற்றோருக்கு விருப்பம் இருந்தது.

இரு நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஜியாராய் கடலில் நீந்தினார். இலங்கையின் தலைமன்னார் பகுதியில் தனது நீந்த ஆரம்பித்து இந்தியாவின் தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல் முனையில் கரையேறினார்.

மொத்தம் உள்ள 29 கிலோமீட்டர் துாரத்தை பதிமூன்று மணி நேரம் பத்து நிமிடத்தில் கடந்தார். 2004-ல் புலா சவுத்ரி என்ற பெண் இதே துாரத்தை 13 மணி நேரம் 52 நிமிடத்தில் கடந்ததுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது. இப்போது ஜியாராய் இந்த சாதனையை நாற்பது நிமிடம் முன் கூட்டியே முறியடித்து அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.

ஜியாராய் நீந்திய பாதையில் ஆபத்தான கடல்வாழ் உயிரினங்கள் தவிர, கடல் கொந்தளிப்பும்  அதிகம் இருந்ததாம். பிரதமர் மோடி தமது ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்வில் மிகவும் பாராட்டி பேசியிருக்கிறார்.

பிரதமரின் தேசிய பாலர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள செல்வி ஜியா ராய் உலகின் அனைத்து கடல்களிலும் நீந்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

***************************

குறும்படம் மூலம் சாதிக்கும் ‘பிளாக் ஷீப்’ நந்தினி!

சாமானிய மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் இவற்றை குறும்படங்கள் மூலம்  வெளிக் கொணர்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் நந்தினி.

எளிமையான யதார்த்தமான நடிப்பின் மூலம், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்களின் வழியாக மக்களிடையே பிரபலமானவர் இவர்.

‘பிளாக் ஷீப்’ நந்தினி மற்றும் ‘இவள்’ நந்தினி என அடையாளப்படுத்தப்படும் இவர், தான் நடித்த ‘சேல்ஸ் கேர்ள்’ குறும்படத்தில் துணிக்கடையில் பணி புரியும் பெண்களின் துன்பங்களை பதிவு செய்திருந்தார். ‘தூய்மையின் காவலர்கள்’ குறும்படத்தில் துப்புரவு பணியாளர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையையும், ‘அக்கா கடை’ குறும்படத்தில் ரோட்டுக் கடையில் உணவு விற்பவர்களின் கண்ணியத்தையும் சிறப்பாக தன் குறும் படத்தில் படமாக்கியிருந்தார்.

சமுதாயத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களை சாதாரணமாகப் பார்ப்பதைத் தவிர்த்து, அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதால் ஒரு எழுத்தாளராக பயணத்தைத் தொடங்கி, பின்பு குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறும்படத்தில் நடிக்கும்போது அல்லது அதனை உருவாக்கும்போது, மக்களிடையே அதன் கருத்துகள் சென்றடைய வேண்டும் என்பது இவரது குறிக்கோள்.

பெண்களுக்கு இவர் சொல்லும் முக்கிய செய்தி என்ன தெரியுமா?

“உங்களிடம் உள்ள குறைகளை பெரிதாக நினைக்காதீர்கள். நான் உயரம் குறைவாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன், பருமனாக இருக்கிறேன் என்று உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொள்வதை முதலில் நிறுத்துங்கள். சாதிப்பதற்கு வெளிப்புற தோற்றம் முக்கியமில்லை.

உங்களுக்குப் பிடித்த பணியைச் செய்யத் தொடங்குங்கள். யூகங்களையோ, தோல்வியைப் பற்றிய பயத்தையோ உருவாக்காதீர்கள். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என நினைத்து இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.  வெற்றி ஒருநாள் உங்கள் வசப்படும்.”
என்ன வாசகிகளே… நந்தினி சொல்வது உண்மைதானே!

***************************

இயற்கை விவசாயம் செய்யும் கஜலட்சுமி!

வெற்றிகரமான இயற்கை விவசாயி, மேம்பாட்டுப் பயிற்சியாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர் கஜலட்சுமி தயாளன். மதுரையைச் சேர்ந்த இவர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கொடைக்கானல் அருகிலுள்ள வாழைகிரி எனும் பகுதியில் 78 ஏக்கர் இடம் வாங்கி, கணவர் உதவியுடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மலை வாழை, ஆரஞ்சு, அவகேடோ, எலுமிச்சை,முள்ளங்கி, பீட்ரூட், பட்டர் பீன்ஸ், முட்டைகோஸ், சவ்சவ், புஷ் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், பலா மற்றும் மா மரங்களை வளர்க்கிறார் கஜலட்சுமி.

“இயற்கை முறை விவசாயத்தில் செலவு குறைவுதான். உரங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை.  படுகை முறையில் ஆடு, கோழி கழிவுகளையும், மரங்களின் இலைச்சருகுகளையும் உரமாக்கி பயன்படுத்துகிறோம்,” என்று கூறுகிறார்.

‘பஞ்சகவ்யா’ மற்றும் கடல்பாசி வளர்த்து, அதன் நீரையும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் திரவ உரத்தையும் இவர்களே உருவாக்குகிறார்கள். இது பூச்சிக் கொல்லியாகவும் பயன்படும்.

கஜலட்சுமியின் மற்றோர் சிறப்பு, இவர் ஈடுபட்டு வரும்  community farming எனப்படும் ‘கூட்டு விவசாய முறை’. சமூக நுகர்வோர் குழு ஒன்று கூடி, ஒரு நிலத்தை அணுகி குழுவாக பயிரிடத் தொடங்குவது அல்லது  பண்ணைகளில் நுகர்வோர்கள் மாதாந்திர சந்தா கட்டணத்தை செலுத்தி விவசாயியுடன் ஒப்பந்தம் செய்வது என, விளைச்சலைப் பண்ணையின் அனைத்து சந்தாதாரர்களும் விகிதாசாரமாக பகிர்ந்து கொள்வார்கள்.

இம்முறையில் ஆளுக்கொரு பயிரினை விளைவிக்கலாம். பல வகையான பயிர்கள் பயிரிட்டால் சந்தைப்படுத்துதலும் எளிதாக இருக்கும்.  இந்த ‘கூட்டு விவசாய முறை’ இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், நம் நாட்டில் உள்ள தரிசு நிலங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பது கஜலட்சுமியின்  உறுதியான எண்ணம்.

நம் குழந்தைகளூக்கு வேளாண்மைப் பற்றிய அறிவை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள் என்று ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...