0,00 INR

No products in the cart.

போஸ்ட் கார்டு கதைகள்!

படங்கள்: பிள்ளை

முடிவு!

என்.கோமதி, நெல்லை

 “அப்பா, நாதஸ்வரம் வாசிக்கிற கண்ணனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” சொன்னாள் மஞ்சு.
“லூசா..நீ..” அண்ணன் இருவரும் கத்த, அம்மா மறுக்க முயற்சியில் தளராமல் சாதித்து விட்டாள். ஆறுமாதம் கழிந்தது. ஆஸ்திரேலியாவில், புதிதாக கட்டியுள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில், நாதஸ்வரம் வாசிக்க, ஆலயக்கமிட்டியின் செலவில் அழைக்க, மஞ்சு ட்ராலியை தள்ளியபடி, மெல்போர்ன் ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தாள் கணவன் கண்ணனுடன்.

**************************

அப்பாவி!

புதுவை சுபா

ரவு மணி ஏழு… அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த வரதன் வரிசையில் நின்றான். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

திடீரென, “அய்யய்யோ…” என்று கத்தினான் வரதன்.

உடனே, பெட்ரோல் பங்க் மேலாளர் பரபரப்பானார். பெட்ரோல் நிரப்பும் பணியிலிருந்த ஊழியர் ஒருவரின் பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு ஓட முயன்றவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தனர் வாடிக்கையாளர்கள்.

“சரியான நேரத்துல சத்தமிட்டு திருடனைக் காட்டிக் கொடுத்துட்டீங்க தம்பி…” என்று வரதனைப் பாராட்டினார் மேலாளர்.

விளங்காமல் விழித்த வரதன்… “நான் எங்க அவனைப் பார்த்துக் கத்தினேன். பெட்ரோல் விலையைக் கேட்டல்லாவா சத்தம் போட்டேன்…” என்றான் அப்பாவியாய்.

**************************

காத்திருந்தேன் அவரது முத்தத்திற்கு…

-சசிமாலா சேகர், சென்னை

தினமும் என் கணவர் காலை பத்து மணிக்கு அலுவலகம் சென்றப் பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் அவர் வருவார். நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு , அவரது வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன். என்றாவது ஒரு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் என் உயிரே போய் விடும் . நிமிடத்திற்கு நிமிடம் அல்ல , நொடிக்கு நொடி ஓடி ஓடி வாசலைப் பார்ப்பேன் . அவர் வந்து விட்டால் ஒரு பரவசம் ஏற்படுமே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது . அவர் வாசலை நெருங்கி விட்டார் எனத் தெரிந்ததும் , உடலில் கட்டியிருக்கும் துணி எப்படி  இருந்தாலும் , அதுபற்றி எல்லாம் சிந்திக்காமல் ஓடி அவரை கட்டிப்பிடித்தேன்.  அவர் என் இரு கன்னத்திலும் முத்த மழை பொழிந்தார்.  . என் உடல் ,உயிர் , மூச்சு, வாழ்க்கை எல்லாமே ஆரம்பப் பள்ளியிலிருந்து மதியம் வீட்டிற்கு வந்த என் அவர், என் அன்பு மகன் தானே!

**************************

வாழ்க்கைக்கு கண் உண்டு!

-சசிமாலா சேகர், சென்னை

வன் கொடுத்த கடிதம் என் கையில். வீட்டில் நுழையும் போது அப்பாவை பார்த்து விட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல கடிதத்தை மறைக்க முயலுகையில் , அப்பா என்னை கவனியாது தன் நண்பருடன் கை பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

“என் பொண்ணு தங்கம்டா. இந்தக் காதல் கத்திரிக்கா இதெல்லாம் அவளுக்கு ஒத்து வராது. அப்படியே இருந்தாலும்,  அவள் அதை என்னிடம் மறைக்க மாட்டாள். அவள் தேர்வு நல்லதாகத்தான் இருக்கும். நான் எதிர்க்க மாட்டேன்,” என்று. அவரது பேச்சு  என்னை கொல்லாமல் கொன்றது. அவன் கடிதத்தை படிக்கவில்லை. முதலில் அவன் யார்? நல்லவனா? என்ன செய்கிறான்? குடும்பம் எப்படி? என எல்லாம் விசாரிக்க முடிவு செய்தேன்.
காதலுக்கு கண்ணில்லை தான். ஆனால் வாழ்க்கைக்கு உள்ளதே.

**************************

ராசிபலன்

பானு பெரியதம்பி, சேலம்

“லட்சுமி … இன்னைக்கு உன்னோட ராசிபலன்ல சிக்கனம்னு போட்டிருக்கே…”

” நான் என்ன சிக்கனம் செய்யப்போறேன் ஒரு நாளுலே…?”

“தேவையில்லாததை வாங்காம இருந்தாலே போதுமே” என கணவர் ராமு கலாட்டா பண்ணும் போது , அழைப்பு மணி அடித்தது.

வாசலில் கேஸ் சிலிண்டர் போடும் தம்பி,” அக்கா உங்கள் சிலிண்டருக்கு நேத்தே பில் போட்டதாலே ஐம்பது ரூபாய் மிச்சப் படுத்திட்டீங்க,” என்றதும் லட்சுமி கணவரைப் பார்த்து அர்த்ததோடு புன்னகைத்தாள்.

**************************

புரிதல்!

பானு பெரியதம்பி, சேலம்

தீபா தன் கணவர் கல்கத்தாவிலிருந்து வாங்கி வந்த பெங்கால் காட்டன் புடவையை தன் தோழி ரம்யாவிடம் காட்டியதும்,” என்ன தீபா… இந்த மஞ்சள் கலரில் ஏற்கனவே இரண்டு புடவை இருக்கே…இப்பவும் இதே கலரா… இதற்கு வாங்காமலே இருந்திருக்கலாம். நீ அவரிடம் சொன்னயா…இல்லையா…?” என்றதும்,
” இல்லை ரம்யா …அவருக்கு இருக்கும் பல வேலைகளுக்கு இடையே என்னை நினைத்து, அதற்கு நேரம் ஒதுக்கி அன்போடு வாங்கி வரும் புடவையில் கலரும், தரமும் தெரியாது. அவரின் அன்பும், ஆசையும் மட்டுமே எனக்குத் தெரிகிறது” என்றாள் தீபா.

**************************

மூக்குத்தி

-லக்ஷ்மி ஹேமமாலினி , சென்னை

கைப்பையிலிருந்து அவள் அதை எடுத்த போது மனதெல்லாம் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது. அந்த சிறிய டப்பாவினை திறந்தவுடன் பளபளவென்று மின்னிய வைர மூக்குத்தியை  பார்த்ததும் கமலா மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விட்டாள்.எவ்வளவு நாளைய கனவு அது… ஒரு தங்க மூக்குத்தி வாங்கக்கூட வழி இல்லை, ஆனால் ஒரு வைர மூக்குத்தி  கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அவள் வேலை பார்க்கும் வீட்டில் அந்த எஜமானியம்மாவிடம்  பல மூக்குத்திகள் இருப்பதால்  வாரம் ஒன்று மாற்றிக் கொள்வார். அப்போது, இந்த வாரம் மாற்றும் போது வைர மூக்குத்தியை வெளியே வைத்து விட்டுச் சென்று விட்டார். அதை எஜமானிக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் கமலா. மூக்குத்தியை போட்டுப் பார்க்க வேண்டும்  என கையில் எடுத்தபோது, செல்போன் மணி அடித்தது.

சட்டென்று கண் விழித்த கமலா, “வைர மூக்குத்தியை திருடி எடுத்துக் கொண்டு வர மனதில் தோன்றியதே,”  என்று எண்ணி வெட்கப்பட்டாள்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...