0,00 INR

No products in the cart.

மோட்சம் தரும் ஸ்ரீ ராம நாமம்!

-ரேவதி பாலு

சாவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் ஏழாவது அவதாரம்.  இவரின் திருஅவதாரம் சித்திரை மாசம், நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் நிகழ்ந்தது.  ஒரு மனிதனாக இந்த பூமியில் அவதரித்து,  மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களையும் தானும் அனுபவித்து வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.

அவர் சுகம் துக்கம் இரண்டையும் சமமாக பாவித்தார்.    ‘காட்டுக்குப் போ!’ என்ற போதும், ‘அரசாட்சியை ஏற்றுக் கொள்!’ என்ற போது இரண்டையும் ஒன்றாகவே பாவித்து நடந்து கொண்டார்.  அது மட்டுமல்ல.  ‘தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வாழ்ந்து நிரூபித்துக் காட்டியவர். மனைவியை அவர் காட்டுக்கு வரும்படி ஒருபோதும் வற்புறுத்தவில்லை. அவளாகவே அதை விரும்பி வந்தபோது உடன் அழைத்துச் சென்றார்.  தம்பியையும் அப்படியே.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும்  மரணமுமின்றி தீருமே

இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்

ஸ்ரீ ராம நாமத்தின் சிறப்பை கம்பர் பெருமான் கம்ப இராமாயணத்தில் அழகாகக் கூறுகிறார். இப்பேர்ப்பட்ட பெருமையையுடைய ஸ்ரீ ராம நாமம் ஒலிக்கும் இடங்களிளெல்லாம்  ஸ்ரீ ஹனுமன் கூப்பிய கரங்களுடனும், கசிந்த கண்களுடனும், பக்திப் பரவசமாய்  வீற்றிருப்பாராம். ஸ்ரீராமனால் சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட ஆஞ்சனேயருக்கு வீரம், மனோ பலம், வாக்கு வன்மை என அனைத்துமே ராம நாமத்தின் மகிமையால் கிடைத்தது.

ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் ராமநாமத்தை ‘ஓ ராம நீ நாமம் ஏமி ருசிரா  ஸ்ரீ ராம நீ நாமம் எந்த ருசிரா,’ என்று அனுபவித்துப் பாடியிருக்கிறார்.  இவ்வளவு சிறப்பான இந்த ராம நாமத்தை நம் மகான்கள் போற்றி மக்களை ‘நாம ஜெபம்’ மட்டுமல்லாமல், ‘லிகித ஜெபமாகவும்’ செய்ய ஊக்குவித்தார்கள்.  ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்றும் ‘ராம ராம’ என்றும் எல்லோரும் பக்தியுடன் எழுதுகிறார்கள்.  ஸ்ரீ ராமநவமியன்றும் ராம நாமத்தை எழுதுவது நமக்கு மிகுந்த நன்மையையளிக்கும்.

பிறந்தால் முக்தி தரும் ஸ்தலம் என்று திருவாரூரை குறிப்பிடுவது போல, இறந்தால் முக்தி தரும் ஸ்தலம் காசி என்பார்கள். காசியில் எந்த ஜீவன் இறந்தாலும் உடனே பார்வதி தேவி ஓடி வந்து அந்த ஜீவனின் சிரசை தன் மடியில் வைத்துக்  கொள்ள, சிவபெருமான் அந்த ஜீவனின் வலக்காதில் ராமநாமத்தை ஓதுவாராம். அப்படி நடக்கும்போது,  காசியில் இறந்த அந்த ஜீவனுக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கத்தானே செய்யும்?

ரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்த பின் காசியாத்திரை என்று ஒரு குழுவாகக் கிளம்பி விடுவார்களாம். எப்படி? மாட்டு வண்டியிலோ, அல்லது பாத யாத்திரையாகவோ,  அப்போது ரயில், பேருந்து ஒன்றும் இல்லாத காரணத்தால்.  அந்த நேரத்தில் குடும்பத்தில் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவார்களாம்,  அதாவது இனிமேல் தங்கள் ஆயுள் முடியும் வரை காசியில் தான் இருப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டு.

அவர்கள் தங்குவதற்கேற்றார்போல், காசியில் அன்னசத்திரங்கள்  இருக்குமாம்.  எல்லாம் எதற்காக? காசியில் தங்கள் ஆயுள் முடிந்தவுடன் பார்வதி தேவியார் தம் மடிமேல் தங்களை வைத்துக் கொள்ள, சிவபெருமான் காதில் ‘ராம’ மந்திரத்தை ஓதி தங்களை மோட்சத்துக்கு அனுப்ப வேண்டும் என்னும் ஆசையால்தான்.

‘ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று ஸ்ரீ ராமர் போற்றப்படுகிறார். ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’ என்று இதைக் குறிப்பிடுவார்கள். அவர் வாக்குத் தவறாதவர், அவருடைய வில் வைக்கும் குறி தப்பாது, அவருக்கு  சீதா பிராட்டியார் ஒரே ஒரு பத்னி தான் என்று கூறுவர். ‘ஏக பத்னி’ என்பதற்கு சன்மார்க்கத்தில் வேறொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. சுத்த ஜீவனான ஸ்ரீ ராமர், தன் கண், மனம், பிராணன் அனைத்தையும் ஆன்மாவை நோக்கி வைத்திருந்ததையே அவர் ‘ஏக பத்னி விரதன்’ என்று கூறுகிறார்கள். அதாவது ஸ்ரீ ராமர் தன் ஆன்மாவைத் தவிர வேறு எதையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று பொருள்.

மற்றைய கடவுளருக்கில்லாத ஒரு பெருமை ஸ்ரீ ராமருக்கு உண்டு.  ஏனைய கடவுளர்கள் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி நல்கும்போது, ஸ்ரீ ராமர் மட்டும், தன் பத்னி, தம்பி லட்சுமணன், தொண்டர் ஹனுமன் என்று அனைவரோடும் இணைந்து, நட்புக்கும், பாசத்துக்கும் ஒரு சிறந்த உதாரணமாக காட்சி அளிக்கிறார்.

சென்னையில் அநேக இடங்களில் ஸ்ரீ ராமர் கோவில்கள் இருந்தாலும், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலும், நந்தம் பாக்கத்திலுள்ள 750 வருட பழைமையான ஸ்ரீ ராமர் கோவிலும் பிரசித்தமானவை.

த்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ராமர் அவதார தினம் இந்த வருடம் ஏப்ரல் 10ஆம் தேதி வருகிறது.  ஸ்ரீ ராம நாமத்தை நாமஸ்மரணை செய்தும்,  வீட்டில் பூஜை செய்து நீர் மோரும், பானகமும் நைவேத்யமாக அளித்தும்,
ஸ்ரீ ராமரின் பஜனைப் பாடல்களை பக்தியோடு பாடியும், ஸ்ரீ ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டும் நாமும் இந்த அவதார தினத்தை கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...