0,00 INR

No products in the cart.

“பயணங்களே  எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி வருகிறது!” – அமுதா கிருஷ்ணா

-தனுஜா ஜெயராமன்

சென்னையைச் சேர்ந்த அமுதா கிருஷ்ணா சுற்றுலா செல்வதை  வெறும் பொழுது போக்காக வைத்துக்கொள்ளாமல் தனது வாழ்க்கையாகவே வாழ்ந்து வருபவர். முதலில் தனது குடும்பத்தாருடனும், தற்போது தனி பயணமாகவும்  இந்தியாவை வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பார்க்காத மாநிலங்களையோ  ஊர்களையோ விரல் விட்டு எண்ணி விடலாம். “பயணங்களே எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சியானதாகவும் ஆக்கி வருகிறது,” என உற்சாகத்துடன் கூறுகிறார் அமுதா கிருஷ்ணா. 

அவர் தனது பயண நிகழ்வுகளையும், அனுபவங்களையும் நம்மிடையே பகிர்ந்ததிலிருந்து….

உங்களுக்கு பயணங்களில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நான் படித்தது M.A. வரலாறு. அப்போதே நமது நாட்டின் பூகோள வரைபடத்தையும் வரலாற்று சிறப்புகளையும் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருந்தேன்.  இயற்கை மீதும் தீராத காதல் இருந்தது.  நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது இந்தியாவை முழுவதுமாக வலம் வந்துவிட வேண்டும் என்ற ஆவல் மனதில் வேட்கையுடன் இருந்து வந்தது.

அந்த  ஆசை சாத்தியமானது எவ்வாறு?

ன் சிறுவயது தோழி ஒருவர் வடநாட்டில் குடியிருந்தார். அவரது கணவரின் பணி காரணமாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வெவ்வேறு ஊருக்கு மாற்றலாகி விடுவார். எங்கள் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின்  காரணமாக அவர்கள் சென்னைக்கு வருவதும் , நாங்கள் வடநாட்டை சுற்றி வருவதும் சாத்தியமானது . அதன் பிறகு சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டோம்.

உங்க பயணத்திற்கு குடும்ப நபர்களின் ஆதரவு எவ்வாறு இருந்தது?

ற்போது வரை எனது பயணங்களுக்கு என் குடும்பம்  முழு ஒத்துழைப்பு தருகிறது. கணவர் வரமுடியாத சமயங்களில் மகன்களுடனும் , பிள்ளை களின் பரிட்சை நேரங்களில் அம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்து , கணவரோடும் என் பயணங்கள் தொடர்ந்தது. இன்றும் நான் என் வளர்ந்த மகன்களோடு பயணங்கள் மேற்கொள்வதை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

தனிப் பயணங்கள் சாத்தியமானது எப்படி?

கணவர் மற்றும் மகன்களின் பணிசூழல் காரணமாக தனிப் பயணங்களை மேற்கொள்ளத் துவங்கினேன். குடும்பத்தாரோடு ஏற்கெனவே பல இடங்களுக்குப் பயணித்த அனுபவம் எனது தன்னம்பிக்கையை மிகவும் அதிகப்படுத்தியிருந்தது. ஒரு கட்டத்தில் தனியாக பயணிப்பது என்பது எனக்கு  வசதியாகவும், சுலபமாகவும் மாறிவிட்டது.  தற்போது பல்வேறு மாநிலங்களுக்குத் தனி பபயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.

உங்கள் பயணங்களுக்கான செலவுகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

டிக்கடி பயணங்கள் மேற்கொள்வதால் பணசிக்கனம் மற்றும் நேர சிக்கனங்கள் பழகிவிட்டது. கிடைத்த இடங்களில் தங்கி, எளிய உணவுகளை உண்டு, குறைவான உடைகளில் நிறைவான பயணத்தை மேற்கொள்கிறேன். இதற்கு எனது முந்தைய பயண அனுபவங்கள் தற்போது பெரிதும் கைகொடுத்து வருகிறது. விமானம் முதல் ரிக்ஷா வரை அனைத்து வகையான வாகனங்களிலும் பயணம் செய்த அனுபவங்கள் உண்டு.

உங்கள் தனிப் பயணங்கள் குரூப் பயணங்களாக மாறியது எப்போது?

னது பயணங்கள் குறித்து பேஸ்புக்கில் எழுதி வந்தேன். பலரும் ஆர்வமாய் தொடர, பல்வேறு சந்தேகங்களையும் விவரங்களையும் கேட்கத் தொடங்கினர். அதனால் யாத்ரா  என்ற பயணப் பக்கத்தை தொடங்கினேன். தற்போது அதில் ஏழாயிரம் பேர் உறுப்பினர்களாக தொடர்கிறார்கள். பின்னர் நானும் எனது மகனும் பயணங்கள் குறித்து  சில இடங்களில பேச , பலர் ஆர்வமாக வர ஆரம்பித்தனர். தற்போது ‘Tamil Travellers & Adventures’ என்ற குழுவை ஆரம்பித்து , அதில் 12000 பேர் உறுப்பினராக உள்ளோம். அதில் தொடங்கியது தான் குரூப் பயணங்கள்.

குரூப் பயணங்கள் பயனுள்ளதாக இருக்கிறதா?

ன்றைய  தலைமுறையுடன் பயணிப்பது புதிய உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பலருடன் சேர்ந்து பயணிப்பது பயணத்தை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும்  மேற்கொள்ள ஏதுவாகிறது.

எனது குழு உறுப்பினர்கள் ஐம்பது பேருடன் கொடைக்கானல் மலையில் டென்ட் அமைத்து தங்கியது வித்யாசமான அனுபவமாக இருந்தது. சமீபத்தில்  இமாச்சல ப்ரதேசத்தில் 33 நாட்கள் தங்கி பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

உங்கள் பயணத்தில் திகிலான த்ரில்லிங்கான அனுபவம் பற்றி?

ருமுறை கோத்தகிரியில் கேத்தரின் அருவியைக் காண காட்டுப்பாதையில் நடந்தோம். எதிரில்  கரடி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது மரண பயத்தில் நாங்கள் பீதியுடன் ஓட, எங்களோடு வந்த நபர் அப்போதும் சீரியஸாக கரடியை வீடியோ எடுத்துக்கொண்டே ஓடியது மறக்க முடியாத ஒரு அனுபவம். அதே போல, வடநாட்டின் மலைப்  பிரதேசங்களில் பலமுறை கரணம் தப்பினால் மரணம் என ஆபத்தான மலை விளிம்பில்  உயிரை கையில் பிடித்தபடி பயணித்திருக்கிறோம்.

நீங்கள் பார்க்க விரும்பும் இடங்கள்?

ந்தியாவில் நான் பார்க்க  விரும்பும்  இடங்கள் மிஸோராம் , லடாக் , அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள். விரைவில் கண்டுவிட திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதே போன்று காஷ்மீர் பலமுறை போயிருந்தாலும், ஆப்பிள் சீசனை காண முடியவில்லை. ஒருமுறை சீசன் போது செல்ல வேண்டும். வெளிநாட்டில் ரஷ்யா போக ஆசை. ட்ரான்ஸ் சைபீரியன் ரயிலில் பயணிக்க ஆசை. ஆப்ரிக்க காடுகளையும் சுற்றி வர வேண்டும்.

உங்களைப் போலவே தனிப்பயணம் போக விரும்பும் பெண்களுக்கு தங்களது வழிகாட்டுதல்கள் என்ன?

தற்போது இணையவசதி இருப்பதால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் சுற்றுலாவிற்கான திட்டமிடுதல்  செய்வது எளிது. தனிப்பயணங்கள் நமது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்கச்  செய்யும். அதுவும் பெண்களுக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும். தனியாக விடுதியில் தாங்காமல், குழுவாக தங்க  பல்வேறு ஹாஸ்டல்களும் உண்டு.  இணையத்தில் பிரத்யேக திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் கூட உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! வாருங்கள் பயணிப்போம்! உலகை வலம் வருவோம்!

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...

ஆட்டிஸம் எனும் விந்தை!

- மஞ்சுளா சுவாமிநாதன் பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று...

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

1
-சேலம் சுபா அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன்...