0,00 INR

No products in the cart.

சாமானியருக்கு அரசியல் புரிதல் ஏன் அவசியம்?

-மஞ்சுளா சுவாமிநாதன்.

 

“ நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டு  போட்டீங்க?”

“ என் புருஷன் சொன்ன கட்சிக்கு.”

“ அது என்ன கட்சின்னு தெரியுமா?”

  பேரெல்லாம்  தெரியாது, சின்னம் பார்த்து அழுத்திட்டேன்.”

“ சரி, உங்க தொகுதி வேட்பாளர் பெயராவது தெரியுமா?”

“ இல்லக்கா, அவரு சொன்னாரு போட்டுட்டேன். எங்க ஏரியால ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தாங்க!”

து சென்ற ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எனக்கும் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கும் நடந்த உரையாடல். இது என்னை சிந்திக்க வைத்தது.

சரி, எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்  இதே கேள்வியை கேட்டுப்  பார்க்கலாம் என்று சிலரிடம் விசாரித்தேன். விடைகள் பெரும்பாலும் திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. சிலர் அதைப் பற்றி பேசவே மறுத்தனர். சிலர் அவர்கள் குடும்பம் காலம் காலமாக எந்தக் கட்சிக்கு வாக்கு  அளித்தனரோ, அதே கட்சியைத் தேர்ந்தெடுத்ததாகக்   கூறினர். எங்க அம்மா உட்பட ஒரு சிலர் இன்னும் மோசம்,  ஓட்டே  போடவில்லை. காரணம், யார் வந்தாலும நம் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் வரப் போவதில்லை என்று  அவர்களுக்கு எண்ணம்.

‘நமக்கு அரசியல் எல்லாம் ஒத்து வராதுப்பா,’ ‘அரசியல் ஒரு சாக்கடை,’  ‘அரசியல்வாதி என்றாலே லஞ்சம், ஊழல்தான்’   என்று நானும்  கூட வெகு காலம் அரசியலை வெறுத்து ஒதுக்கினேன்.  ஆனால், அரசியலை இப்படி நாம் ஒரேயடியாகத் தவிர்த்துவிட முடியுமா? பல பேர் அரசியல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு எதிர்மறையாகவே இருக்கிறது. நாம் அரசியலை வெறுக்கலாம். ஆனால், புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைக்கு வாங்கும் பாலிலிருந்து, வயதான வர்கள் பயன்படுத்தும் மருந்துவரை அரசியல் எல்லாவற்றிலும் கலந்துள்ளது.

மக்கள் நலத்திட்டங்கள் (Welfare Schemes) பற்றி அறிந்துகொள்ளுதல்:

ந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில், பல கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டிற்குக்  கீழே இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்க அரசு பல நல்ல திட்டங்களைச் செயல் படுத்துகிறது. கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, கிராமப்புற மகளிர் திட்டங்கள், சமுதாய முன்னேற்றத் திட்டங்கள் இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற அடிப்படை அரசியல் புரிதல் அவசியமாகிறது.

நமது மத்திய  அரசின் முக்கிய நலத்திட்டங்கள்  சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன்…

1) Pradhan Mantri Awas Yojana : இந்தத் திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. (PMAY – U) நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டம். PMAY-G, PMAY-R – கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யும் திட்டம்.

2) நேரடி பலன் பரிமாற்றமம் (Direct Benefit Transfer) : இந்தத் திட்டம் மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக மானியங்களை கொண்டு சேர்க்கும் திட்டம். கசிவுகள், தாமதங்கள் போன்றவற்றைக் குறைக்கும்.

3) சுகன்யா சம்ரித்தி கணக்கு : இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கு தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது.

4)  தூய்மை இந்தியா மிஷன் : இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

5) மேக் இன் இந்தியா : இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்குவதற்கும்,  மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும்,  நிறுவனங்களை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் உதவுகிறது. அதுமட்டுமல்லாது, உற்பத்தியில் அர்ப்பணிபுள்ள முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறது.

இதைத்  தவிர, மாநிலங்களில் தனி நலத்திட்டங்களும், ஆண்டு பட்ஜட்களும் தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் குன்றிய பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், சுய உதவிக் குழுக்களும், தொழில் சார்ந்த பயிற்சிகளும் கூட அரசு அளிக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவாவது நமக்கு அரசியல் அறிவு தேவைப்படுகிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க…

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் வாழ்க்கை மாறாது என்ற எதிர்மறை எண்ணத்தை விடுத்து, இது என் தாய்நாடு, நான் சரியான ஒரு அரசியலுக்கே ஆதரவளிப்பேன் என்ற மனநிலை உருவாக வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (மக்கள் தொகையில்) என்ற பெருமை மட்டும் போதாது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, வேறுபாடுகளை பின்னுக்குத் தள்ளி, நம் நாட்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கும் கட்சிக்கும், தலைவர்களுக்கும்  ஓட்டுப் போட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழியாகும்.

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட…

ரசியல் புரிதல் என்பது நம்மோடு நின்றுவிடக் கூடாது. நம் அடுத்த தலைமுறைக்கும் அதன் முக்கியத்துவத்தை சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும், அரசியலின் பங்கு இருக்கிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்தால், அவர்கள் அதனைப் புரிந்துகொள்வதோடு, எப்படிப் பாதுகாத்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது என்பதையும் தெரிந்து கொள்வர்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

ம் நாட்டில் பிரிவினை வாத சக்திகள், பொய்யான பரப்புரை (false narratives) மூலமாக மக்களைத் திசை திருப்புகிறார்கள். இந்த சக்திகள் மக்களைப் பிரித்து அதன் மூலம் நமது ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் குலைக்க முயற்சிக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்துக் கொள்ள,  நமது மாநிலத்தின் அரசியல் வரலாறு, நாட்டின் அரசியல் வரலாறு அறிவது மிகவும் அவசியமாகிறது.

சமூக ஊடகங்களிடம் எச்சரிக்கை!   

ரு முறை நான் முகநூலில் ஒரு அமைப்பைச் சார்ந்த கட்டுரை படித்தேன். அதன் விளைவாக, அதே அரசியல் சிந்தனைகள் கொண்ட  கட்டுரைகளை எனக்கு முகநூல் காட்டத் துவங்கியது. You tube  இலும்  இது அதிகம் நடக்கக் கூடும். இதன் விளைவாக எனக்கு மிகவும் பாரபட்சமான கருத்துகள் உருவானது. என் கருத்துகளோடு ஒத்துப்போகாத அமைப்புகள் மேல் வெறுப்பு ஏற்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Polarization என்று கூறுவர். இதன் விளைவால், நமது பேச்சுரிமையும், கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப் படுகிறது. வன்முறைக்கும் வழிவகுக்கிறது.

ஒரு இருபது ஆண்டுகள் முன்னால் இவ்வளவு ஊடகங்கள இல்லை, இவ்வளவு  தகவல்களும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் நவீன தகவல் யுகத்தில், அரசியல் புரிதல் இல்லையெனில் நாம் சமுதாய, கலாசார  சீரழிவோடு நின்றுவிடாமல், மதக் கலவரங்கள் நிறைந்த ஒரு எதிர்காலத்தை நோக்கியே பயணிப்போம்.

இதிலிருந்து மீள ஒரே வழி, அன்னப்பறவையைப் போல நாம் அரசியல் புரிதலோடு, மண்டிக்கிடக்கும் தகவல்களில் பகுத்தாராய்ந்து   செயல்படுவதே!

2 COMMENTS

 1. மிகவும் அத்தியாவசியமான கட்டுரை மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் எவை எவை என்று அறிவதற்காகவாவது அரசியல் அறிவு மிக அவசியம் என்று எழுதி இருப்பது மக்களின் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாராட்டுக்கள் – ரேவதி பாலு

 2. பாராட்டுக்கள் மஞ்சுளா மேம்.
  சரியான கோணத்தில் எழுதப் பட்டிருக்கும் விழிப்புணர்வுக் கட்டுரை.

  கடந்த சட்டசபைத் தேர்தலின் போது எங்கள் அபார்ட்மென்ட்டில் நானும் எனது கணவரும் மட்டுமே வாக்களிக்கச் சென்றோம்.
  மற்றவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை இருந்தும் போகவில்லை.
  கேட்டால். “ப்த்ச். போகலே” என்ற பதில் வந்தது. படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் அவர்கள்.
  என்ன சொல்ல?

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...