0,00 INR

No products in the cart.

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…

 பகுதி -12

ந்தப் பாடல் வெளியான காலகட்டத்தில் இதன் இசைக்கு நிகரான எந்த ஒரு பாடலும் இல்லை என்று சொல்ல வைத்தது. கேசட்டில் பதிவு செய்துதான் மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்டு இருப்போம்.

இத்திரைப்படத்தின் இயக்குனரைப் பற்றி சொன்னால் கண்டிப்பாக நீங்கள் இது எந்த படம்? அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் என்ன? என்று கண்டுபிடித்து விடுவீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் பிரம்மாண்ட படைப்புகளின் ‘காதலன்’.

இந்த இயக்குனரின்  அதிரடியான சமூக மாற்றக்கருத்துகள், தொழில் நுட்ப அருமை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டவை… பேசப்படுபவை! எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படியெல்லாம் யாராவது யோசிப்பார்களா? என்று வியக்கும் அளவுக்கு கற்பனை திறன் கொண்டவர். பாடலாசிரியர் எழுதும் ஒவ்வொரு வரியையும், அதில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் கேட்டு ரசித்து அழகு சேர்க்க முனையும் ஒரு இயக்குனர் என்று இவரைச் சொல்லலாம்.

உலக சினிமாக்களில் இடம் பெற்ற தொழில்நுட்பத்தில் பெரும் பகுதியை இந்திய சினிமாவிற்கு கொண்டு வந்து,  சோதனை செய்து பார்த்தவர். பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்ததால் இவரை இந்தியாவின் “ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்” என்றும் எந்திரன் துவங்கியதிலிருந்து ‘ஜேம்ஸ் கேமரூன்” என்றும் அழைக்கப்பட்டு வருபவர். எளிமையான மனிதர்… அந்த இயக்குனர் யார்? நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் சரியே! அந்த இயக்குனர் திரு ஷங்கர். திரைப்படம் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் வெளிவந்த ‘காதலன்’. இசைப்புயல். ஏ ஆர் ரகுமான் படத்தின் இசையை… சூறாவளியாக  கொடுத்திருப்பார்.

ஒவ்வொரு பாடல்களும் அவரின் பெயரை சொன்னது. இப்படி எல்லாம் கூட இசையமைக்க முடியுமா? என்று யோசிக்க வைத்தது.‘காதலனி’ன் பாடல் கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தது. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் ஒரு காரணம் என்றால்… நடனப்புயல் பிரபுதேவாவின் நடனமும் ஒரு காரணம். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க வீட்டை சேர்ந்த ஒரு இளம் நடன கலைஞர் மிகவும் செல்வாக்கு மிக்க வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை (மாநில ஆளுநரின் மகள்) காதலிப்பதுதான் கதை.  படம் முதல் வாரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை ஆனால் இரண்டாவது வாரம்  நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நான்கு தேசிய திரைப்பட விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற வைரமுத்து அவர்கள் எழுதி ஏ ஆர் ரகுமான் இசையமைத்து சுரேஷ் பீட்டர்ஸ் ஷாகுல் ஹமீது  பாடிய “ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி” என்ற பாடலை பாடாத இளைஞர்களே இல்லை எனலாம். பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு விழாவில் இப்படத்தின் ஏதாவது ஒரு பாடல் நிச்சயம் இடம் பெற்றிருந்த காலம் அது!

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த “முக்காலா முகாப்புலா லைலா”தான் இன்று நம் மங்கையர்மலர் விவித பாரதியில் கேட்க விரும்பும் பாடல்.

வாலி அவர்களின் அருமையான வரிகள், பிரபுதேவா நக்மாவின் நடன கோரியோகிராபி, பாடலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த ஆலாபனை அரசி ஸ்வர்ணலதாவின் குரல், (ஏ ஆர் ரகுமான் மற்றும் மனோ) பொருத்தமான இசை… இவை அனைத்தும் இந்த பாடலை ஹிட் ஆக்கியது.

இந்தப் பாடல்… ஸ்வர்ணலதா அவர்களின் தனித்துவமான குரலில் மேலும் அழகாகியது என்றால் மிகையில்லை.  அழகான இந்த பாடலை மங்கையர் மலர் விவித பாரதியில் கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள்.

என்றென்றும் அன்புடன் 
ஆதிரை வேணுகோபால்.
(நிறைந்தது)

1 COMMENT

  1. மங்கையர் மலரின் விவித பாரதி பாடல்களின்
    அலசல் அதற்குள் நிறைவுக்கு வந்தது கஷ்டமாயிருக்கு. ஒவ்வொரு வாரமும் சிறந்த
    பாடல்களை தேர்வு செய்து அதை விளக்கமாக
    பல அம்சங்களுடன் பதிவு செய்தது அருமை !
    பாராட்டுகள் !

ஆதிரை வேணுகோபால்
Mrs Athirai Venugopal A successful homemaker with a passion for cooking. Athirai’s cooking recipes, supplementary cookbooks and articles are being published in leading Tamil women segment magazines. She has authored and published a cookbook titled ‘Healthy Children’s Recipes’. She has also hosted cookery shows in web channels. Athirai has her own you tube channel named ’Athirai’s Fusion Kitchen’ where she presents interesting and innovative cooking recipes & tips.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...