0,00 INR

No products in the cart.

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…
பகுதி-8

ங்கையர் மலர் வழங்கும் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல் 1977 ஆம் ஆண்டு  கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த “ஆறு புஷ்பங்கள்” என்ற திரைப்படத்தில் சந்திரபோஸ் அவர்கள் பாடிய

“ஏண்டி முத்தம்மா” என்ற பாடல். இசை எம் எஸ் விஸ்வநாதன். சந்திரபோஸ் அவர்களின் அருமையான குரல்வளம் பாடலின் தனிச்சிறப்பு. காட்சியும், இசையும், சொல்லும், ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் இருக்கும்.

மெல்லிசை மன்னரின் கிராமிய இசையில் மாறுபட்ட குரலில் ஒரு அருமையான பாடல்… அதன் இனிமையை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும் ஆறு புஷ்பங்கள். அற்புதமான பாடல் காட்சிகள் அணிவகுத்து செல்லும் மாட்டு வண்டியோடு நம்மையும் கூட்டிச் செல்லும் உன்னதமான கிராமத்தை நோக்கி. (இது போன்ற அருமையான கிராமிய காட்சிகள் இனி வருமா? நாம் கண்ணால் இதுபோன்ற காட்சிகளை காண்போமா?!) கவியரசு +மெல்லிசை மன்னர் + மாறுபட்ட குரலோன் சந்திரபோஸ் கலவை = சிலிர்ப்புடன் ஈர்ப்பு! இதயத்தில் மண்டிக்கிடக்கும் இன்ப உணர்வுகளை கிண்டி கிழங்கெடுத்து இசை விருந்தாய் கொடுக்கும் மண்மணப்பாடல். மெல்லிசை மன்னரின் கூட்டணியில் சந்திரபோஸின் சேர்ப்பு சந்தோஷத்தின் வார்ப்பு. அந்தஅளவுக்கு தெள்ளத்தெளிவாக அழகான குரலில் பாடியிருப்பார் சந்திரபோஸ்…

சந்திரபோஸ் ஒரு இசையுலக சிற்றரசன் என்றே சொல்லலாம். எண்பதுகளில் இளையராஜா என்ற பேரரசனின் இசை ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அவரின் எல்லைக்குள் வரமுடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத் பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக ஏவிஎம் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாகவும் பின்னர், ஆஸ்தான இசையமைப்பாளராகவும் அமரும் அளவுக்கு சந்திரபோஸ் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றால், தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியமும், வேகமும் அவருக்குள் அதிகமாக இருந்ததுதான் காரணம். அதுதான் அவரை அந்த உயரத்துக்கு இட்டுச் சென்றது. 80களில் ஈழத்து ரசிகர்களால் பெரிதும் விரும்(ப்)பப்பட்ட ஒரு இசையமைப்பாளர் சந்திரபோஸ் என்றும் பெருமையாகச் சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் அறிமுகமானபோது பாடிய பாடல்தான் இந்த “ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை”… என்ற பாடல்.

1978ல் வெளியான “மச்சானைப் பார்த்தீங்களா “திரைப்படம் சந்திரபோஸ் அவர்களுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக “மாம்பூவே சிறு மைனாவே “பாடல் காலத்தை விஞ்சிய தேன் விருந்து. (பாடலின்ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிடார் இசையும் கலக்கும் ) கே. பாலாஜி அவர்களின்  மொழிமாற்ற படங்களுக்கெல்லாம் இசை சந்திரபோஸ்தான் (குறிப்பாக விடுதலைப் படத்தில் இடம்பெற்ற “நீலக்குயில்கள் ரெண்டு” என்ற பாடலை இன்று வரை யாராலும் மறக்க முடியாது)

ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் “சங்கர் குரு” .இந்த படத்தில் வரும் “சின்ன சின்ன பூவே “…என்ற பாடலும் சந்திரபோஸ் இசையமைத்த “காக்கி சட்டை போட்ட மச்சான்”என்ற பாட்டும் இந்த படத்தின் வெற்றியில் பங்கு போட்டது. (மலேசியா வாசுதேவன் அவர்களும் சைலஜா அவர்களும் அவ்வளவு எனர்ஜிட்டிக்காக இந்த பாடலை பாடி இருப்பார்கள்) “பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் “வண்ணாத்திப்பூச்சி வயசு என்ன ஆச்சு?” என்ற பாடல் அந்த காலகட்டத்தில் எல்லா திருவிழாக்களிலும் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல் என்றே சொல்லலாம். ஏவிஎம்மின் “வசந்தி” என்றொரு படத்தில் கே ஜே ஜேசுதாஸ் சித்ரா பாடும்” ரவிவர்மன் எழுதாத கலையோ “என்ற பாடலை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் . இசைஜாலம் புரிந்து இருப்பார் அந்த பாடலில் சந்திரபோஸ். “மனிதன் “திரைப்படத்தில் கே ஜே ஜேசுதாஸ், சித்ரா பாடும் “ஏதோ நடக்கிறது “பாடல் மெல்லிசையாக மனதில் இடம் பிடித்தது.

இவர் இந்த அளவுக்கு உச்சம் தொட காரணம் இவரது பாடல்களின் மெட்டுக்களும், கோர்ப்புகளும் எளிமையாகவும் அதே நேரம் இனிமையாகவும் இருந்தது தான். (ஆரம்பகாலங்களில் இவரும் தேவாவும் இணைந்து ஒரு மெல்லிசைகுழு வைத்திருந்ததார்களாம்)… இவர் இசையமைத்த சில புகழ்பெற்ற பாடல்களில் முக்கியமான ஒன்று…”சரணம் ஐயப்பா என்ற படத்தில் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடும்

“பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால்

 ஐயனை நீ காணலாம் 

சபரியில் ஐயனை நீ காணலாம்… ஐயப்பா சரணம் ஐயப்பா..

 ஐயப்பா சரணம் ஐயப்பா 

அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்” இந்தப் பாடலின் இசையில் மனம் உருகிப் போகும் மனம் லேசாகி போகும் ஐயப்பன் நம் அருகே அமர்ந்து கொண்டு இருப்பது போல் நமக்குத் தோன்றும் அவ்வளவு அழகாக இசையமைத்து இருப்பார் சந்திர போஸ் “கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

3 COMMENTS

  1. கண்ணை மூடிக்கொண்டு பாடினால் நம்மை சபரிமலைக்கே அழைத்துச்செல்லும் பாடலும் ,ராகமும் .ஓம் சரணமய்யப்பா

  2. சந்திரபோஸ் நல்ல இசையமைப்பாளர். அவரைப்
    பற்றி ஹைலைட் செய்ததற்கு நன்றி !

  3. ஆஹா ஏண்டி முத்தம்மா 80 களின் இளைஞர்களின் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆதிரை வேணுகோபால்
Mrs Athirai Venugopal A successful homemaker with a passion for cooking. Athirai’s cooking recipes, supplementary cookbooks and articles are being published in leading Tamil women segment magazines. She has authored and published a cookbook titled ‘Healthy Children’s Recipes’. She has also hosted cookery shows in web channels. Athirai has her own you tube channel named ’Athirai’s Fusion Kitchen’ where she presents interesting and innovative cooking recipes & tips.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...