
சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம்.
முதலீடு: உங்களது தேவை போக, சேமிக்கப்பட்ட பணம்… வேறு ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது. அந்த வேறு ஒரு இடத்தில் சேமிக்கப்பட்ட பணம் அப்படியே இருப்பதில்லை. வளருகிறது. அந்த வேறு ஒரு இடத்திற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன; வங்கி சேமிப்பு கணக்கு (Bank Savings Account), வங்கி வைப்பு நிதி (Bank Fixed Deposit), ஊழியர் சேமநல நிதி (Employee Provident Fund), பொது சேமநல நிதி (Public Provident Fund), அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post office Saving schemes) போன்றவற்றில் பணத்தை சேமிக்கலாம். இவை மட்டுமன்றி தொன்மையான ஓவியம், தொன்மையான நாணயம், பட்டா நிலம், கட்டிய வீடு, பரஸ்பர நிதி திட்டங்கள், பங்கு சந்தை பங்குகள் போன்றவற்றை சேமித்த பணத்தைக் கொண்டு வாங்கி , பின்னர், அவற்றின் மதிப்பு உயரும்போது, மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
முதலீடு செய்வதற்கு பல முகாந்திரங்கள் இருந்தாலும், முதலீடு என்பதற்கு அடிப்படையில் மூன்று குணாதிசயங்கள் உள்ளன.
எந்த ஒரு முதலீட்டிலும் நிறை குறைகள் இருக்கும். மேலே குறிப்பிட்ட குணாதிசயங்கள் மூன்றில், இரண்டோ அல்லது ஒன்றோ மட்டுமே அதனால் நிறைவேற்ற முடியும். உதாரணமாக,
பங்கு சந்தை முதலீடு: நீர்ப்பு தன்மை அதிகம். பணத்தை இழக்கும் அபாயம் அதிகம். வளரும் விகிதம் அதிகம்.
நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு: நீர்ப்புத்தன்மை மிக குறைவு. பணத்தை இழக்கும் அபாயம் நடுத்தரம். வளரும் விகிதம் நடுத்தரம்.
வங்கி வைப்பு நிதி முதலீடு: நீர்ப்புத்தன்மை அதிகம். பணத்தை இழக்கும் அபாயம் குறைவு. வளரும் விகிதம் குறைவு.
எனவே, எந்த ஒரு முதலீட்டினையும் அதன் நிறை குறைகளுக்கு ஏற்ப, நமது குறிக்கோளின் காலவரையறைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டினைத் தொடங்குவதற்கு முன்பாக காப்பீட்டினைத் தொடங்குவது முக்கியமானது. முதலீடு என்பது சேமித்த பணத்தைப் பெருக்குவதற்காக செய்யப்படுகிறது. காப்பீடு என்பது இதுவரை சேமித்த பணத்தைக் காப்பதற்காக செய்யப்படுகிறது.
நண்பர்களே! மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளில், முதல் மூன்றும் காப்பீடு போன்றவை. அடுத்த மூன்றும் எளிமையான முதலீடுகள். கடைசி மூன்றும் திறன் சார்ந்த முதலீடுகள். என்னைப் பொறுத்த வரை, எளிமையான முதலீடுகளே போதுமானவை. அவை உங்களுக்கு நல்ல சராசரியான ஒரு பணப் பெருக்கத்தினைக் கொடுக்கும். திறன் சார்ந்த முதலீடுகளில், அதைச் சார்ந்த திறன் உங்களுக்கு இருந்தால் மட்டும், இறங்க வேண்டும்.
உங்களது முதலீடுகள் வெற்றியடைய வாழ்த்துகள்.