0,00 INR

No products in the cart.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பகுதி – 2 
– சுசீலா மாணிக்கம்
ஓவியம்: பத்மவாசன்

 

மிழ் மொழியாம் திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து“.

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” 

* அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி   நினைக்கின்றவர் இவ்வுலகில் நிலைத்து வாழ்வார்.

 நம் பொன்னியின் செல்வன் புதினத்திலும்

 சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது.

 நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போதுசுந்தரம் என்னை மறந்தாயோ!’ என்று ஒரு குரல் கேட்டது.

 சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார். அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார்.

 பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து, ‘இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?’ என்று கேட்டார்.

 ஆம் ,சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்து சிவன் கோயில் இருக்கிறது!” என்று சீடர்கள் சொன்னார்கள்.

 உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார். பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அருகே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொருநாள் தன்னைத் தடுத்தாட் கொண்டது போல், இன்றைக்கும் தன்னை கூப்பிட்டு அருள் புரிந்த கருணை திறனை வியந்தார்.’ சுவாமி தங்களை நான் மறந்து விடுவேனோ? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன் என்னும் கருத்து அமைத்து,

 பொன்னார் மேனியனே! 

புலித்தோலை அரைக்கசைத்து

 மின்னார் செஞ்சடைமேல் 

மிளிர்கொன்றை அணிந்தவனே!

மன்னே மாமணியே 

மழபாடியுள் மாணிக்கமே! 

என்னே உன்னையல்லால்

இனி யாரை நினைகேனே

இன்றும் நாம்  சுந்தரர் அவர்களின் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடி இறைமையை உணர்ந்து பத்தியில் நெகிழ்கிறோமே.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். அது மட்டுமல்ல, அவர் சார்ந்த மனித குலத்தையும் இறைமையை உணரச் செய்வர் இறைமைக்குள் உருக செய்வர் என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேண்டுமா என்ன…? அதைத்தானே பொன்னியின் செல்வன் வாயிலாக நமக்கு வலியுறுத்துகிறார் அமரர் கல்கி!

திருவள்ளுவர் பயனில் இரண்டாம் அதிகாரம் வான்சிறப்பு

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூவும் மழை”

*உண்பவருக்கு தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு பருகுவோருக்கு தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

நம் பொன்னியின் செல்வனில்…

ன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்து கிராமங்களிலிருந்து, தங்கநிற தென்னங்குருத்துக்களால்  சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள்.” ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களை தாழம்பூ, செவ்வந்தி பூ , மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும் சித்ரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங் கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்பு காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தலில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்து கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்…”

 ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவள நாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று. இயற்கை அரசி பச்சை பட்டாடை உடுத்தி நவயௌவன சௌந்தரியத்துடன்  திகழ்ந்தாள். அந்த பச்சைப் பட்டாடையில்தான் எத்தனை விதமான பசுமைச் சாயங்கள்! கழனிகளில் கதிர்விடுவதற்கு தயாராயிருந்த நெற்பயிர்கள்  ஒரு சாயல் ; நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல் ;அப்போதுதான் நடவாகியிருந்த பசும்பொன்னிற பயிர்கள்

வேறொரு சாயல் ! ஆலமரத்தில் தழைத்திருந்த இலைகள் ஒரு பசுமை; அரசமரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவித பசுமை; தடாகங்களில் கொழுகொழுவென்று படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகன பசுமை ; வாழை இலைகளின் கண் கவரும் பசுமை;தென்னங்குருத்துகளின்  தந்த வர்ணப் பசுமை ; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தெளிந்த நீரின் பசுமை; நீரில் அங்குமிங்கும் பாய்ந்த தவளைகளின் பசுமை.

இவ்வளவு விதவிதமான சாயல்கள் வாய்ந்த பச்சைப் பட்டாடையின் அழகைத் தூக்கி காட்டுவதற்கென்று நட்சத்திர பொட்டுக்கள் பதித்தது போல் குவளைகளும், குமுதங்களும், செந்தாமரை மலர்களும் செங்கழுநீர் பூக்களும் ஆங்காங்கு ஜொலித்துக்கொண்டிருந்தன.

இந்த அழகையெல்லாம் வந்தியத்தேவன் இரு கண்களாலும் பருகிக்கொண்டு பிரயாணம் செய்தான். ஆடி மாதத்தில் அந்த வழியாக அவன் சென்றபோது பார்த்த காட்சிகளுக்கும் இப்போது காணும் காட்சிகளுக்கும் உள்ள வேற்றுமையை அவன் உணர்ந்திருந்தான். ஆடி மாதத்தில் ஆற்றில் புது வெள்ளம் நொங்கும் நுரையுமாக பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.இப்போதோ பிரவாகத்தின்  வேகமும் கோபமும் தணிந்து,செந்நிறம்  மாறி ,பளிங்குபோல் தெளிந்து, உல்லாஸமாகப் பவனி சென்றது“.  

பதினெட்டாம் பெருக்கு திருநாளின் வளமையும் ஐப்பசிமாத பசுஞ் செழுமையும்பற்றி பொன்னியின் செல்வனில் படிக்கும்போது இத்தனை செழிப்பிற்கும் காரணம் அன்றெல்லாம் பொய்க்காது பெய்த மும்மாரி மழைதான் என்பதை உணர்கிறோம். நிறமற்ற அந்த  மழை துளிகளால்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள் பூக்கின்றன கடலாய்வானாய்மலர்களாய்உயிர் வண்ணங்களாய்இங்கும் கூட ஓர் பச்சை நிறம் மட்டும் எத்தனை பசுமை சாயங்களை பூசிக் கொண்டிருக்கின்றது.

பதின்ம வயதில் நமக்கெல்லாம் மனப்பாட செயுளாக அமைந்த  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்…” குறளை விளையாட்டாக சொல்லிய காலங்களில் உணரவில்லை இந்த ஈரடியின் முக்கியத்துவத்தை.

“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்கா தெனின்” 

*மழை பெய்யவில்லையானால் இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும் தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

இப்படி அற இலக்கியத்தின்  ஈரடி வேதத்தை படிக்கும் போது வள்ளுவப் பெருமானின் வலிமையான வார்த்தைகளை உணர்ந்து கூடவே பொன்னியின் செல்வனின் இந்த  வளமான வரிகளை கடக்கும் போது மனதில் தோன்றுவதுதான் என்ன? ஆற்றாமை? பொறாமை? இயலாமை? புரியத்தான் இல்லை. கல்லாமையை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இத்தனை ஆமைகளை நம்முடன் நடமாட விட்டோமே!

(இன்னும் உணர்வோம்…)

3 COMMENTS

  1. திருக்குறளும் பொன்னியின் செல்வனும் விளக்க
    உரையில் திருக்குறளை சுட்டிக் காட்டி பதிவு செய்த
    விதம் அருமை !

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...