0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

பீட்ரூட் ரோஸ் மில்க்

செய்முறை: பீட்ரூட் நன்கு மண் போக அலம்பிவிட்டு காம்புகளை நறுக்கி எடுத்துவிட்டு துண்டு, துண்டாக நறுக்கி தோலுடன் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி விடவும். தண்ணீர் கொஞ்சமாகவிட்டு அரைக்கவும். ஜூஸ் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு சம பங்கு சர்க்கரை பாகு வைத்து (1 கம்பி அளவு) இறக்கி நன்கு ஆறியதும் ஜூஸ் பாகும் ஒன்றாக கலந்துவிட்டு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்து அதை பிரிட்ஜ்ஜில் வைத்து விடவும். பின்பு பாலை காய்ச்சி ஆற வைத்துவிட்டு அதையும் பிரிட்ஜ்ஜில் வைத்துவிடவும். வேண்டும்போது பாலை ஒரு தம்ளரில் ஊற்றி ஜூஸ் சிறப்பை 2, 3 ஸ்பூன் அளவு மட்டும் அதில் ஊற்றி விட்டால் ரோஸ் மில்க் ரெடி. மிகவும் சத்தானது. பீட்ரூட்டில் செய்தது என்று சொன்னால்தான் தெரியும்.

******************************

மாங்காய் ஜூஸ்

தேவை: அதிகம் புளிப்பு இல்லாத மாங்காய் 1 கிலோ, சர்க்கரை, மாங்காய் கலர், மாங்காய் எசன்ஸ், K.M.S என்ற இவை எல்லாம் தேவை.

செய்முறை: ஒரு பாட்டிலை எடுத்து அதை ஸ்டெரிலைஸ் அதாவது வெந்நீரில் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை தோல் சீவிவிட்டு அப்படியே குக்கரில் வேக வைக்கவும். பின்பு அதை எடுத்து ஆறவிட்டு கையால் மசித்து மாங்காய் பல்புகளை எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் சர்க்கரையை கொட்டி கிளறி நன்கு கொதிக்கவிட்டு தோசை மாவு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விடவும். மாங்காய் கூழ் அளவு சரிக்கு சரி சர்க்கரை அளந்து எடுத்துக் கலந்து கொள்ளவும். இந்த மாங்காய் ஜூஸை பாட்டிலில் கொட்டி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது கொஞ்சமாக எடுத்து அதில் ஐஸ் வாட்டர் கலந்து சில் என்று சாப்பிட ஆஹா சூப்பர்தான்.
-ராஜி பார்த்தசாரதி, திருச்சி.

******************************

கேரட் – ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க்

தேவை:  நல்ல கேரட் – 5, சர்க்கரை – 1½ கப், பால் – 1 லிட்டர், ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன், ட்ரை ஃப்ரூட்ஸ் – ¼ கப் (ஒன்றிரண்டாக பொடித்தது)

செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டுக் காய்ச்சியெடுத்து நன்கு ஆறவிடவும். கேரட்டைத் தோல் சீவி  2 -3 துண்டுகளாக வெட்டி லேசாக ஆவியில் வைத்து எடுக்கவும். பின்னர் கேரட், சர்க்கரை, ஆறிய பால் கொஞ்சம் இவைகளை மிக்ஸியில் இட்டு அரைத்தெடுத்துக் கொண்ட பின் மீதிப் பாலைவிட்டு மிக்ஸ் செய்யவும். ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

இதை ஃப்ரிட்ஜ்ஜில் சுமார் ½ மணி நேரம் வைத்து வெளியே எடுத்து தம்ளரில் விட்டு மேலே பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ்களைத் தூவி அருந்தினால் சுவையோ சுவை! சத்தோ சத்து! அனைவரும் விரும்பிக் குடிப்பார்கள்.
-ஆர். மீனலதா, மும்பை

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...