0,00 INR

No products in the cart.

அன்பு வட்டம்

அனு மேடம், அதியமானுக்குக் கிடைத்தது போல தங்களிடம் ஒரு நெல்லிக்கனி இருந்தால் யாரிடம் தருவீர்கள்?
– என்.கோமதி, நெல்லை
நேரா ஸ்ரீரங்கத்துக்கு பஸ் பிடிச்சுக்கிட்டுப் போய், உ.வே.ஸ்ரீ.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்கிட்ட பணிவுடன் சமர்ப்பித்து விடுவேன்.
பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீ வைஷ்ணவ சிறப்பையும் நிலைநாட்டி வரும் அவரது ஆன்மிகச் சொற்பொழிவுகளை வியந்தும் லயித்தும் கேட்கும் லட்சக்கணக்கானவர்களில் நான் கடைசி வரிசை ரசிகை!
வெறும் உபதேசியாக மட்டும் இல்லாமல், பகவானுக்கும் பக்தர்களுக்கும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துவரும் அவரது அறக்கட்டளையின் பெயர், ‘கிஞ்சித்காரம்’ (‘கிஞ்சித்’ என்றால், சிறிது, ‘காரம்’ என்றால், செய்தல்; நம்மால் இயன்ற கைங்கரியங்களைச் செய்தல்)
அத்தகைய உயர்ந்த நோக்கம் தொடர்ந்து செயல்பட அவர் நீடுழி வாழணும் இல்லையா?
“சுவாமி… உங்களைப் போன்ற அறிவில் சிறந்த ஆச்சாரியர் வாழ்ந்தால் உலகம் மேன்மையுறும். இறைப்பணி உய்யும்!” என்று சொல்லி நான் நெல்லிக்கனியைத் தந்தாலும், அதை ஏதேனும் ஏற்கத்தக்க காரணம் சொல்லி, வாங்க மறுத்து விடுவார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால்,
ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு கண்ணன் திருவடிகள் தவிர, வேறு எதுவும் பெரிதில்லை!

பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, கல்லூரிகளை அமைத்து, அதில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமித்தால் பாலியல் தொந்தரவு இருக்காது இல்லையா மேடம்?
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி


ரொம்ப சரி; சூப்பர் ஐடியாவாதான் இருக்கு! அப்படியே அவங்க படிச்சு வெளியே வந்ததும், அலுவலகம், பஸ், ரயில், கடைத்தெரு, கோயில், மருத்துவமனை… இப்படி நிறைய இடங்களில் புழங்க வேண்டியிருக்குமே? அங்க எல்லாமே, ஆண் வாசனையே இல்லாம ‘ஹிட்’ அடிச்சு விரட்டிடலாமா கெஜலட்சுமி?
பிரச்னை சேர்ந்து படிப்பதிலோ, சேர்ந்து வேலை செய்வதிலோ இல்லை; கண்ணோட்டம் + மன ஓட்டத்தில்தான் உள்ளது.
‘கல்வி’ என்பது வெறும் டிகிரி வாங்கவோ, சம்பாதிக்கவோ மட்டுமல்ல; வாழ்வின் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ளத்தான்! இதைப் பெண்களுக்குக் கற்பிக்கணும்.
‘பெண்’ என்பவள் வெறும் போகப்பொருள் அல்ல; அவளை அத்துமீறிச் சீண்டினால் அழிந்து போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று ஆண்களுக்கு எச்சரிக்கை செய்யணும். இதற்கு முதல்கட்டமாக சமூக அமைப்பும், சட்ட அமைப்பும் உதவிக்கரம் நீட்டணும். ஏன்னா, பெண்ணுக்கு உண்மையான சுதந்திரமும், கௌரவமும் வழங்காத நாடோ, வீடோ உருப்பட்டதாகச் சரித்திரமே கிடையாதேங்க!

நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு?
– வாசுதேவன், பெங்களூரு

‘மகதீரா’ படத்துல ராம்சரண், காஜல் அகர்வால் நடனத்தைப் பார்த்திருப்பீங்க… ‘தீர… தீர… தீர… மனசாகலேதுரா’ பாடல் காட்சியில் இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட கற்பனைக்கு அற்புதமா துணை போயிருப்பார். பாலுமகேந்திராவின் லோ பட்ஜெட் பாடல் காட்சியா? ஓ.கே! நோ ப்ராப்ளம் (ரோகிணி நடித்த, ‘ஆசை அதிகம் வெச்சு’) தனுஷை அடுத்தக்கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போன ‘மன்மத ராசா… மன்மத ராசா’ என்ன ஒரு ஃபாஸ்ட் பீட்! என்ன ஒரு ரிதம்! புதுமுகங்களுக்கும் வெளிச்சம் போட்ட மீடியம் பட்ஜெட் பாடல் காட்சி.
இப்படி… அவர் ஒரு ஆல் பட்ஜெட் கொரியோகிராஃபர்! ஆல் டைரக்டர் ஃபேவரிட்! நிச்சயம் வருந்தத்தக்க இழப்பு!

சேலத்தில் ஒட்டகப் பாலில் டீ, காபி விற்பனையாமே?
– வாணி வெங்கடேஷ், சென்னை

ப்படியோ வடிவேலு காமெடியை நிஜமாக்கிட்டாங்க! ஆனால், விலைதான் யானை விலை, குதிரை விலை! ஹோட்டலைப் பிரபலமாக்க இப்படியும் ஒரு யுக்தி போலிருக்கு. எங்க ஊர்ப் பக்கமெல்லாம், வீதியில கழுதைகளை ஓட்டி வந்து கழுதைப் பால் விற்பாங்க. ‘குழந்தைக்கு நல்லது’ என்று தாய்மார்களும் வாங்கிப் புகட்டுவாங்க!

சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி, ஜீரணக் கோளாறு ஏதேனும் இருந்தால், குழந்தைகள் சிணுங்கிக்கொண்டே இருக்குமாம். அதற்குக் கழுதைப் பால்தான் பெஸ்ட் மெடிசினாம்! கிழவிகள் சொல்லிக் கேள்வி!

சரி, ஒட்டகப் பால் பற்றிய கேள்விக்கு, கழுதைப் பால் பற்றிய பதிலையும் சேர்த்துப் படிச்சதுக்கு, அமலாபால் ரசிகர்கள் சார்பாக தேங்க்ஸ்… நன்றி… நன்னி… தன்யவாத்!

2 COMMENTS

  1. கோமதி அவர்களின் வித்தியாசமான கேள்வியும் ..அதற்கு மேடத்தின் உணர்வுப்பூர்வமான பதிலும் மிக மிக அருமை ..

    தி.வள்ளி

  2. உ.வே.ஸ்ரீ.வேளுக்குடி சுவாமி அவர்களின் “கிஞ்சித்காரம்”அறக்கட்டளை பற்றி தெரியவைத்த அனுவிற்கு நன்றி.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா? -பி. வந்தனா, விருத்தாச்சலம் நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா...! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும்...

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...