தக்காளி… தக்காளிதான்!

தக்காளி… தக்காளிதான்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

படம் 1; ஜோக்ஸ்… பல

– ஆர். மகாதேவன், திருநெல்வேலி
ஓவியம்: பிள்ளை

"கல்யாணத்துக்கு மொய் வைக்க வர்றவங்க
பணம் வைக்க வேண்டாம். வேற என்ன வேண்டுமாம்… மொய்யா?"
"க்காளிப் பழம் கொடுத்தா போதுமாம்."

"மாலா வீட்ல திருட்டுல என்ன போச்சுடி?"
"ப்ரிஜ்ஜில இருந்த தக்காளி பழம்மான்டி!"

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை

"என்னப்பா ராத்திரி பூராவும் தூங்காம
வீட்டு தோட்டத்துக்கு காவல் இருந்தாயா…. ஏன்?"
"க்காளி செடியில பழம் இருக்கு.
திருட்டுப் போகாம பாருங்கனுட்டா மனைவி!"

"ன்ன கேட்டேன்னு இப்படி காளி மாதிரி ஆடறே?"
"நீங்க கேட்டது தக்காளி சட்னியாச்சே!"

"லைவர் மேடையில பேசாதபோது அவர் மேல
மக்கள் என்னத்த வீசினாங்க? நன்றி! நன்றிங்கிறாரே!"
"க்காளிப் பழமாம்!"

"ன் மாமியார் ஊர்லேயிருந்து
வரப் போறாங்கன்னு சந்தோஷமா சொல்றியே ஏன்டி?"
"ரு கிலோ தக்காளிப் பழம் கொண்டு வர்றாங்க!"

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com