காதல் முகவரி!

காதல் முகவரி!
Published on
அத்தியாயம் – 5
சுசீலா அரவிந்தன்
ஓவியம் : தமிழ்

ர்வத்துடன் ஓடி வந்தாள் கோமதி.
"என்னடி வெண்ணிஅதிசயமா கூப்பிட்டுவுட்ருக்க? ஆதவன் அண்ணாகிட்ட இருந்து ஏதாவது செய்தி வந்துச்சா என்ன?" உற்சாகமாய் கேட்க

முகத்தில் மகிழ்ச்சியை தேக்கிக்கொண்ட வெண்ணிலா, அந்தக் கடிதத்தை அவளிடம் தந்து,

"நீ அடுத்த முறை அவரைப் பாக்குறபோது இதை மறந்துடாம கொடுத்துடுடி" என்றாள்.

"ம்க்கும்… 'இது வெண்ணிலாவோட இதயம்'னு சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்துப் போச்சு. ஆமாஎத்தன தடவதான் நீயும் உன் இதயத்தை தந்துகிட்டே இருப்ப?" என கேலியாய் கேட்டாள் கோமதி.

"இனிமே உனக்கு அந்த வேலை இருக்காது. இதுதான் கடைசி" என்ற வெண்ணிலாவின் கைகளைப் பிடித்த கோமதியிடம்

"இல்லடிஅடுத்த கடிதம் தருவதற்குள் எனக்குக் கல்யாணம் நடந்துடும்னு சொன்னேன்" எனச் சொல்லிச் சிரித்தாள் வெண்ணிலா.

"ம்ம்ம்சரிசரிஉங்க கல்யாணத்துல ஒரு நல்ல தோழியா நூறு சதவிகிதம் மனப்பூர்வமா சந்தோசப்படுவேன்" என்றாள் கோமதி.

"அம்மா ஊருக்குக் கௌம்பிட்டு இருந்தாங்க. சாயங்காலம் வரேன். உன்னோட இதயத்தை அண்ணாகிட்ட பத்திரமா சேர்த்துடறேன்" என்றவாறு வெண்ணிலாவின் கன்னங்களை செல்லமாய் கிள்ளிவிட்டு, சிரித்தபடியே விடைபெற்றாள் கோமதி.

நேரே சேரில் அமர்ந்து செய்தித்தாளைப் படிப்பது போன்ற பாவனையில் நாட்டாமை.

யோசித்தால்கூட மகளின் மீதுள்ள பாசம் ஜெயித்துவிடும் என்பதாலோ என்னவோ,

இந்தத் திருமணம் முடிந்தால் ஏற்படப்போகும் ஜாதி பிரச்னை, ஊர் கட்டுப்பாடு மற்றும் கேலிப் பேச்சுகளையும் நினைத்தவாறே கண்களை மூடிக்கொண்டார்.

"வேலாடீ தண்ணி போட்டுத் தரேன். போய் களத்து ஆட்களுக்குக் கொடுத்துட்டு வா. அதுக்குத்தான் பாதி வேலைல ஓடியாந்தேன்" என்றவாறே, சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகியபடி வீட்டினுள் வந்தாள் வெண்ணிலாவின் தாய்.

"டி, வெண்ணிலா சாப்பிட்டாயா?" சப்தமாகக் கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

"அடிபாவிவைச்சது வைச்சபடியே இருக்கே. இன்னுமா சாப்பிடல. வர வர இவ சரியே இல்ல. டீ பாப்பாவெண்ணிலா" என அழைத்தபடியே அவளின் அறைக்குள் சென்றவளின்,

"ஐயோவெண்ணிலா" என்ற அலறல்தான் ஊரையே உலுக்கியது.

ல்லாம் முடிந்தது. செய்தி கேட்டு ஓடி வந்த ஆதவன் பித்து பிடித்தாற்போல் உணர்ந்தான். நாட்டாமையின் பார்வையில் ஏதோ அன்னியம் உணர்ந்தான். அவன் வருவதற்குள்ளாகவே வெண்ணிலாவின் தகனம் முடிந்திருந்தது.

கச்சிதமாக கோமதியும் அந்தக் கடிதத்தை ஆதவன் கைகளில் சேர்த்துவிட்டாள்.

'என் வெண்ணிலாவுக்கு என்ன ஆயிற்று?' கடிதத்தைத் திறந்து அந்தப் பினரல் எழுத்துக்களை தடவித் தடவிப் பார்த்தான். அடுத்த பேருந்துலேயே இசைமணியை சென்றடைந்தான்.

அன்பான கணவருக்கு,

வாழ்வில் இணைய முடியாவிட்டாலும் நினைவிலும் ஆன்மாவிலும் தங்களுடன் நூற்றாண்டுகள் வாழ்ந்த திருப்தி. நேற்றைய பிறந்த நாளின்போது, நாம் பேசியதை அப்பா கேட்டுவிட்டார். அதன் விலை எனது உயிர்.

அத்தான், (முதலும் இறுதியுமாய் கூப்பிட்டுக் கொள்கிறேன்.) ஒரு முறை நீங்கள், நான், கோமதி மூவரும் தருமபுரியில் நடந்த ஒரு கொலை, 'கௌரவக் கொலையா அல்லது ஆணவக் கொலையா?' என நெடுநேரம் விவாதித்தோமே. கடைசியில் அது அன்பின் கொலை. மனிதத்தின் படுகொலை என முடிவு செய்தோமே நினைவிருக்கிறதா?

இங்கும் அதுபோல அப்பா, எனக்கு விஷத்தையும் உங்களுக்கு அருவாளையும் தந்து தேர்ந்தெடுக்கச் சொன்னார். பெற்ற மகளை விட, அவளின் நல்ல வாழ்க்கையை விட அவருக்கு ஜாதிதான் முக்கியமாம். சரிஅவர் அந்த ஜாதியுடன் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

உங்களுக்கு ஒரு தீங்கும் நேரக் கூடாது என, என் முடிவை சந்தோஷமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். நீங்கள் கவலைபடக் கூடாது. என் ஆன்மா உங்களுடன்தான் வாழும்.

ஆனால் அத்தான், ஒருநாள் வரும். உண்மை அன்பு ஜெயிக்கும். அன்று இந்த ஜாதி, மதம், அந்தஸ்து அத்தனையும் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும்.

இத்துடன் நீங்கள் பினரல் கற்றுக்கொண்ட பின் தருவதாய் வைத்திருந்த எனது கவிதையும் வைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். எனக்காய் கவலைப்படாதீர்கள். எனது பிரிவுக்காய் இனி, நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடக்கூடாது.

அடுத்த பிறவி என்றொன்றிருந்தால் நாம் இருவரும் ஒரே ஜாதியில் பிறப்போம்

தங்களின் மனைவி
வெண்ணிலா.

இசைமணி கடிதத்தைப் படிக்கப் படிக்க, ஆதவனின் கண்கள் அருவியாய் கண்ணீரைக் கொட்டியது.

'இனி, நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடக் கூடாது' என்ற வரிகளின்போது கண்களை அழுத்தத் துடைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் கண்களில் சிறு கலக்கம்கூட இல்லை.

இசைமணியும் மெதுவாய் அந்தக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com