0,00 INR

No products in the cart.

நேரம்

 

சிறுகதை : மஞ்சுளா சுவாமிநாதன்
ஓவியம் : சில்வெஸ்டர் பீட்டர்

லுவலகத்தில் ஒரு கலந்துரையாடலை முடித்த சுதா, சைலன்ட் மோடில் போட்டிருந்த தனது செல்போனை எடுத்துப் பார்த்தாள். அதில் இரண்டு மிஸ்டு கால்கள் அம்மாவிடமிருந்து. அலுவலக வேலைகளை முடித்துவிட்டு அம்மாவை அழைத்த சுதா, ‘‘என்னம்மா விஷயம்?” என்றாள்.

‘‘தோசை மாவு அரைச்சு வெச்சிருக்கேன். இட்லி பொடி, சாம்பார் பொடியும் தயார் பண்ணியிருக்கேன். சாயந்தரம் ஆதர்ஷ அனுப்பு, குடுத்துவிடறேன்” என்றாள் அம்மா.

‘‘சரிவெச்சுடுறேன்நிறைய வேலை இருக்கு” என்று பரபரத்தாள் சுதா.

‘‘அப்புறம்…” என்று மெல்ல இழுத்த அம்மா, ‘‘ரெண்டு வாரத்துல சங்கரி கல்யாணம் திருச்சியில இருக்கு. போயிட்டு வரணும்” என்றாள்.

‘‘அதுக்கென்ன…? கார் தரேன். டிரைவர் மணி அண்ணனை கூட்டிட்டு போ. ரொம்ப நாளா சமயபுரம் போகணும்னு சொன்னியேஅங்கேயும் போயிட்டு வா” என்றாள் சுதா.

‘‘என்ன சுதா இப்படி சொல்ற? உன் சித்தி பொண்ணு கல்யாணத்துக்குக் கூட வர மாட்டியா? நீயும் மாப்பிள்ளையும் கலந்துகிட்டாதானே நல்லாயிருக்கும்” என்றாள் அம்மா.

‘‘பார்க்கறேன்மாநிறைய வேலையிருக்கு. லீவு வேற கிடைக்காது. வெங்கட்டும் ரொம்ப பிசிஇப்போ அந்தக் கல்யாணம் ரொம்ப முக்கியமா?” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் சுதா.

சுதாவும் அவளது அம்மாவும் ஒரே ஏரியாவில்தான் வசிக்கின்றனர். திருமணமான நாள் முதல், அம்மாவின் உதவியைக் கொண்டே வீட்டையும், அலுவலகத்தையும் சமாளித்து வந்தாள் சுதா. இன்று சுதாவிற்கு கல்யாணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அம்மாவுக்கும் மகளுக்குமான உறவு ஒருவரையொருவர் சார்ந்தே அமைந்துள்ளது. ‘ஆபீஸ்லேர்ந்து வரும்போது காபி பொடி வாங்கிட்டு வா… மருந்தெல்லாம் வீட்டுக்கு டெலிவரி பண்ண சொல்லிட்டேன்நீ அந்தக் கடைக்கு ஜிபே பண்ணிடுகரண்டு பில் வந்துடுச்சு, ஆன்லைன்ல கட்டிடுஅப்புறம் பைசா தரேன்…’ என்று அம்மா கமலாவும், ‘ஆதர்ஷ பாட்டு கிளாஸுக்கு கூட்டிட்டு போநான் இன்னிக்கு வர லேட் ஆகும், கொஞ்சம் டிபன் செய்து கொடு…’ என்று சுதாவும் மாறி மாறி உதவி செய்து கொள்வார்கள்.

அம்மா, அப்பாவால் முன்பு போல அதிக வேலைகள் செய்ய முடியவில்லை. இதை சற்று நினைத்துப் பார்த்தால் சுதாவின் மனம் கனத்து விடும். தன் பெற்றோர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று கூட தோன்றும். ஆனால், நேரமின்மையால் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி, அந்த எண்ணங்களை மறந்துவிடுவாள் சுதா.

ணிதத்தில் முதுகலை பட்டதாரியான தனது அம்மாவிடம் ஒருமுறை, ‘‘ஏம்மாப்ரீத்தி அம்மா மாதிரி நீங்களும் ஏன் வேலைக்குப் போகல?” என்று கேட்டாள் சுதா. அதற்கு கமலா வழக்கமான சிரித்த முகத்துடன், ‘‘நான் வேலைக்குப் போனா உன்ன யார் பார்த்துப்பா?” என்று யதார்த்தமாக பதிலளித்தாள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த உரையாடல், நேற்று நடந்ததுபோல இருந்தது சுதாவுக்கு. சுதாவின் அப்பாவிற்கு அடிக்கடி ஏற்பட்ட உத்தியோக மாற்றல்களினாலும் அடிப்பட்டுப் போனது கமலாவின் உத்தியோகம். ஆனால், இதைப்பற்றி ஒருமுறை கூட அம்மா வருத்தப்பட்டதாக சுதாவிற்கு நினைவில்லை.

பொதுவாகவே, அம்மா காலத்துப் பெண்களின் மனநிலைதான் அது. இதில் சுதாவிற்கு கோபம் என்னவென்றால், அந்தத் தலைமுறை ஆண்கள் பெரும்பாலோருக்கு தங்கள் மனைவியின் முக்கியத்துவம் தெரியாமல் போனதுதான். அதிலும் குறிப்பாக, ‘நான் அவளுக்கு எந்தக் குறையும் வெச்சதில்லகேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துடுவேன். குடும்பத்தைப் பார்ப்பதைத் தவிர வேற என்ன வேலை?’ என்பது போன்ற அப்பாவின் பேச்சுகள்தான்.

ன்று சுதாவிற்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்திருந்தது. தனது வெற்றிக்குக் காரணமான அம்மா, ஒரு பட்டதாரியாக இருந்தும் வேலைக்குச் செல்லாமல் தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் செய்த தியாகங்கள், சமரசங்களை ஒரு நொடி எண்ணிப் பார்த்தாள் சுதா. அப்போது அம்மாவிடமிருந்து வந்த செல்போன் அழைப்பு, அவளது எண்ண அலைகளைக் கலைத்தது. அழைப்பை எடுத்தாள் சுதா.

‘‘வர சனிக்கிழமை அப்பாவுக்கு டாக்டர் செக் அப் இருக்கு மறந்துடாதேம்மா” என்றாள்.

‘‘மறக்கலநான் வர்றது கஷ்டம். வெங்கட்ட கூட்டிட்டுப் போகச் சொல்றேன்” என்றாள் சுதா.

‘‘மாப்பிள்ளையா…? நீ வந்தா நல்லாயிருக்கும். அப்பாவும் சந்தோஷப்படுவார்” என இழுத்தாள் அம்மா.

‘‘ஏம்மா வெங்கட் வந்தா என்ன பிரச்னை?”

‘‘பிரச்னை எல்லாம் இல்லநீ வர ட்ரை பண்ணு” என ஏமாற்றம் நிறைந்த குரலில் கேட்டுக் கொண்டாள் அம்மா.

ன்று மாலை வீட்டில் வெங்கட்டிடம், ‘‘எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே நீங்கஎன் அப்பாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போக முடியுமா?” என்றாள் சுதா.

‘‘ஏன் சுதா நீ போகலியா?” என்று கேட்டான் வெங்கட்.

‘‘இல்லசனி, ஞாயிறுதான் எனக்கு வீட்டு வேலை செய்ய நேரமே கிடைக்குது. அப்ப போய் ஆஸ்பத்திரி போனா, ஒரு நாள் பூரா அதுல வீணாப்போயிடும். தவிர, அன்னிக்கு ஏதாச்சும் நல்லா சமைக்கலாம் என்று பார்த்தேன்” என்று தயங்கியபடியே கூறினாள்.

‘‘நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காத… ‘என்ன பெத்தவங்களாலதான் நான் இன்னிக்கு வேலைக்குப் போறேன்இத்தனை வெற்றிகளைப் பெற்றிருக்கேன்’னு எத்தனை முறை என்கிட்ட சொல்லியிருக்க. ஆனா, பதிலுக்கு அவங்க உன்கிட்டேயிருந்து எதிர்பார்க்கிறது உன்னேட நேரத்ததானே? அத உன்னால அவங்களுக்குக் குடுக்க முடியாதா? உன் அம்மா, அப்பாவிற்கு நீ செலவு செய்யற நேரம் எப்படி விரயமாகும்? அவங்க உனக்காக கொடுத்த நேரத்துனாலதானே நீ இன்னிக்கு நல்லாயிருக்க?” என்றான்.

‘‘………”

‘‘சரிஇதுக்கு மேலயும் நீ போகலேன்னா, உங்கப்பாவ கூட்டிட்டு போறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல” என்றான் வெங்கட்.

பாம்! பாம்!’ என தனது கார் ஹாரனை அழுத்தினாள் சுதா. “மாப்பிள்ளை ஒரு நிமிஷம் வீட்டுக்கு வாங்ககாபி குடிச்சிட்டு போகலாம்” என்றது அம்மாவின் குரல். கார் கண்ணாடியை கீழிறக்கிய சுதா, ‘‘மாப்பிள்ளை இல்லம்மா நான்தான்” என்றாள். அப்போது, அம்மாவின் முகத்துல தெரிந்த புன்னகைக்கு ஈடு இணையில்லையே என்று தோன்றியது சுதாவிற்கு. ‘‘வா சுதா காபி குடிச்சிட்டு போலாம்” என பூரிப்புடன் வரவேற்றாள் அம்மா.

1 COMMENT

 1. நேரத்தை விரையமாக் க கூடாது. கடந்து பாே ன காலத்தை திரும்ப ப் பெற முடியாது.
  அத னால் நல்ல படியாக பயனுள்ளதாக
  நே ரத்தை பயன் படுத்துங்கள் என்று அறிவுறுத்திய கதை “நே ரம்”. அதே சமயத்தில் அப்பாவுக்கு உதவி செய் தால் நேரம் ” வே ஸ்ட்” ஆகிடும் என சுதா தன் கணவனிடம் சாெ ல்வது மன தைச் சற்று நெ ருட லாக்கியது.
  நே ரத்தை பயனுள்ளதா?
  பயனற்றதா? எனறு தீர்மானி்ப்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. பாெ துவாக காலம்
  பாெ ன் பாே ன்றதை மறக்கக் கூடாது.
  து. சேரன்
  ஆலங்குளம்

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...