வாழ வைக்கும் வாழை!

வாழ வைக்கும் வாழை!
Published on
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
  • வாழைப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கும் அருமையான பழம்.
  • வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. ரஸ்தாளி பழம், மலைப் பழம், கற்பூர வாழைப்பழம், பேயன் பழம், நவரை வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம், செவ்வாழை பழம், நேந்திரன் வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், கருவாழைப்பழம், ஆவன் வாழைப் பழம், பச்சை வாழைப்பழம் ஆகியனவாகும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்ல பழம் இது. 'வாழ வைக்கும் வாழைப்பழம்' என்பார்கள்.
  • வாழைப்பழத்தில் ஆவன் வாழை (மஞ்சள் வாழை – மஞ்சள் நிறமாக இருப்பதால்) மங்களகரமான நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுத் திகழ்கிறது. இதன் குணம் குளிர்ச்சி.
  • இயற்கை மருத்துவ முறையில் தினமும் வாழைப்பழங்களைச் சாப்பிட்டு வந்தாலே போதும்… நமக்கு வேண்டிய போதுமான சத்துக்கள் கிடைத்து விடுமாம்.
  • திருநெல்வேலியில் நாட்டு வாழைப்பழம், கோழிக்கோடு, பூலான்சுண்டன் என்ற பெயர்களில் வாழைப்பழம் கிடைக்கும். மட்டி, கதலி என்று மிக மிக சிறிய ரக வாழைப் பழமும் கிடைக்கும்.
    பூலான்சுண்டன் என்ற வாழைப்பழம் மிக மிக தித்திப்பாக இருக்கும். நுனி வரை இனிப்பாக இருக்கும். வாழைப் பழத்தில் ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும் அதிலுள்ள சத்துக்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருப்பது சிறப்பம்சாகும்.
  • இந்தப் பழத்துக்கு உயிர்ப்பழம், உயிர் காக்கும் பழம் என்ற பெயர்களும் உண்டு.
  • வாழைப்பழத்தில், 'சி' வைட்டமின் அதிக அளவில் இருக்கிறது. மேலும் 'ஏ', 'பி' சத்துக்களும், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்தும் அளவாக உள்ளன.

மருத்துவப் பயன்கள் :

  • உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்தும்.
  • ஜீரண சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலைப் பெருக்கும். மூளைக்கு நல்லது.
  • உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
  • மெலிந்த குழந்தைகளை புஷ்டியாக்கும்.
  • ரத்தம் விருத்தியடையும். புதிய ரத்த அணுக்களை உருவாக்கும்.
  • மலச்சிக்கலைப் போக்கும்.
  • பித்தம் சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.
  • தேமல், படைகள் மேல் வாழைப்பழத்தைப் பூசினால் குணமாகும்.
  • குடற்புண்களை ஆற்றும்.
  • குடற்கிருமிகளைக் கட்டுப்படுத்தும்.
  • சீதபேதியை குணமாக்கும். குடலைச் சுத்தப்படுத்தும்.
  • மலைப்பழம் தோல் தடிப்பானதாகக் காணப்படும். நல்ல மணமும் ருசியும் கொண்ட பழம் இது. இப்பழத்தில், 'சினுமலைப் பழம்' என்று ஒரு வகை உண்டு. சாப்பிட்டால் மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்த விருத்தி செய்யும். எளிதில் ஜீரணிக்கும். உடல் பலம் பெறும். தலைமுடி செழித்து வளரும்.

செவ்வாழைப் பயன்கள் :

  • செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின், 'சி' அதிகமாக உள்ளன. பீட்டா கரோட்டீன் தமணிகள் தடிமனாவதைத் தடுக்கும். தவிர, உடலை இதயநோய், புற்று நோயின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது, உடலுக்குள் செல்லும்போது வைட்டமின், 'ஏ'வாக மாற்றப்பட்டு கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
  • உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும்.
  • சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
  • செவ்வாழைப் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.
  • இயற்கையான அன்டாசிட் தன்மை கொண்டதால் நெஞ்செரிச்சல் பிரச்னை நீங்கும்.
  • செவ்வாழைப் பழம் தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தியுடையது.
  • ரத்தத்தின் தரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. செவ்வாழைப் பழம் சருமத்திற்கு நல்லது. ஓட்ஸ், பிசைந்த செவ்வாழைப்பழங்கள் மற்றும் சில துளிகள் தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேஸ்ட் உருவாக்கி முகத்தில் தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சருமம் மிருதுவாகும்.
  • பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் செவ்வாழைப்பழத்தில் இருப்பதால், நாள் முழுவதும் தொடர்ச்சியான ஆற்றலைத் தருகிறது.
  • கண் பார்வை தெளிவாகத் தெரிய உதவுகிறது.
  • செவ்வாழைப்பழம் உடலுக்கு நல்ல வலு சேர்த்து, உடலின் ஆரோக்கியத்திற்கு உற்ற துணையாக உள்ளது.
  • வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா? குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை தற்போது இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாத்து உயிர் பிழைக்க வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை வாழையிலையில் வைத்துப் பாதுகாப்பார்களாம். ஒரு வாழையிலையில் பிறந்த சிசுவை வைத்து, மற்றொரு வாழையிலையை மேற்புறமாகப் போர்த்தி வைத்தால் குழந்தை பிழைத்து விடும். வாழையிலையில் உள்ள மருத்துவப் பண்புகள், நோய்களை விரைவில் குணமாக்கும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. உயிரைக் காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் இந்த தாவரத்திற்கு வாழை என்று பெயர் வந்ததாம்.
    வாழைப்பழத் தோலை காலில் முள் குத்தியிருந்தால் அந்த இடத்தில் தடவினால் முள் வெளியே வந்து விடும்.
  • சருமத்தில் சிவப்பு திட்டு திட்டாக இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழ தோலை தடவினால் சருமம் இயல்பு நிறத்திற்கு வந்துவிடும்.
  • காயங்கள் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை அரைத்து தடவினால் அது விரைவில் ஆறிவிடும். வாழைப்பழத் தோலுக்கும் நல்ல பலன் உள்ளதால் முகத்தில் தேய்த்து மரு, பருவை நீக்கலாம்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com