0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை

 “எல்லாத்துக்கும் பொறாமைப்படுற உன் மாமியார் இப்போ எப்படி இருக்காங்கடீ?”
“எங்க எதிர்வீட்டு மாமியோட மருமகளுக்கு வந்திருக்கிற கொரோனா, இவங்க மருகளான எனக்கு வரலையேன்னு பொறாமைப்படுறாங்கடீ!”
-கிரிஜா நந்தகோபால், திருச்சி
……………………………………………………………………………….

 “வளவளன்னு மந்திரம் சொல்லி நேரத்தைக் கடத்தாம, சீக்கிரம் தாலி கட்ட வையுங்க புரோகிதரே!”
“ஏம்மா?”
“நாங்க சம்பந்தி சண்டை ஆரம்பிக்க டயம் ஆகுதுல்ல!”
-கிரிஜா நந்தகோபால், திருச்சி
……………………………………………………………………………….

 “ஏங்க, கல்யாணத்துக்கு முன்பு என்னை ஓவியம்னு வர்ணிப்பீங்களே இப்போ ஏன் வர்ணிப்பதில்லை?”
“அப்போ நீ பேசாம இல்ல இருந்த!”
– எஸ். மாரிமுத்து, சென்னை
……………………………………………………………………………….

 “இந்த வங்கியில் உள்நாடு, வெளிநாடுன்னு இரண்டு இடத்திலும் வாடிக்கையாளர்கள் இருக்காங்களாமே?”
“ஆமாம், டெபாசிட் செய்தவர்கள் உள்நாட்டிலும், கடன் வாங்கினவங்க வெளிநாட்டிலும் இருக்காங்களாம்!”
– எஸ். மாரிமுத்து, சென்னை
……………………………………………………………………………….

 “கொத்தனாரை கல்யாணம் செய்தது தப்பா போச்சு.”
“ஏன்?”
~எல்லாத்தையும் பூசி மறைத்து விடுகிறார்.”
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………….

“என்னப்பா ஆறு மாசமாக உன்ன காணோம்?”
“ஆன்லைன் திருட்டு கிளாஸ்க்கு பயிற்சிக்கு போய் இருந்தேன் சார்.”
விஜயகுமாரி, திண்டுக்கல்.
……………………………………………………………………………….

 “என் மனைவியை ரெண்டு மாசமாக காணோம் சார்…”
“”அதுக்கு?”
“காவல்துறை தேடக்கூடாதுன்னு சொல்ல வந்தேன்.”
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………….

 

நம்ம தலைவரை நடந்தே நாலு பேர் கூட்டிட்டு போறாங்க…?”
“அவுங்கதான் கட்சியோட வழிகாட்டு குழு.”
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...