0,00 INR

No products in the cart.

காதலர் தினமா? இந்த அழகிகள் என்ன சொல்றாங்க?

-ராகவ் குமார்

காதலர் தினம் என்றதும் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். பலவேறு நினைவுகள் வந்து செல்லும். சினிமா மற்றும் பல்வேறு ஊடகங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு காதலர் தினத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் :

மனிஷா யாதவி:

நாடு இருக்கும் நிலையில் காதலர்தின கொண்டாட்டம் தேவையா?
கண்டிப்பாக தேவை, காதல் என்றால் அன்பு என்று அர்த்தம். அன்பு என்பது ஆண் பெண் இருவர்க்கும் இடையில் உள்ள ஈர்ப்பு மட்டும் கிடையாது. நம் அன்பு வட்டத்தில் அம்மா, அப்பா நண்பர்கள் இப்படி பலர் இருக்கலாம். குறிப்பாக வலண்டைன் என்பவர் இந்த நாளை காதலர்களுக்கு என்று குறிப்பிடவில்லை. இது அன்பை கொண்டாடும் நாள். என் கணவருக்கு காதலர் தினத்தில் பரிசு எதுவும் அளிக்கவில்லை. எங்கள் காதலை கொண்டாட ஒரு நாள் போதாது.

ஹலோ பண்பலை ஜாக்கி டோஷிலா:

காதலும், காதலர் தினமும் எந்த அளவிற்கு தற்போது இம்பாக்ட்டாக உள்ளது?
ஓரிரு நாட்களுக்கு முன்பு ‘காதலர் தினம்’ தொடர்பான ரேடியோவில் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒரு போன் கால் வந்தது, முப்பது வயது மதிக்க தக்க திருமணமான பெண் ஒருத்தர் பேசினார். தனது இளம் வயதில் தனக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருந்தது எனவும் அவருக்கும் தன் மீது ஈர்ப்பு இருந்தது என்றும், ஆனால் தாங்கள் இருவரும் காதலை சொல்லி கொள்ள வில்லை என்றும் சொன்னார்.

அந்த நபர் தற்சமயம் தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார்,அவருக்கு தற்சமயம் எதோ பிரச்சனை என்று கேள்வி பட்டேன். முடிந்தால் வரும் காதலர் தினத்தன்று மயிலாப்பூர் கோவிலுக்கு வந்தால் அவரின் பிரச்சனைகளுக்கு பேசி ஒரு தீர்வு தர உதவுகிறேன் என்றார்.
இந்த தகவலை எஙகள் வானொலி நிகழ்ச்சி மூலம் தெரியபடுத்தி கொள்வதாக கேட்டு கொண்டார். காதலும், அது தரும் நினைவுகளும் அனைவர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காதலர் தினம் ஒரு அடையாளம்.

சாக்ஷி அகர்வால்:

கடந்த காதலர் தினத்தன்று கிடைத்த ரொமான்டிக் அனுபங்களை கூறுங்களேன்?

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று நேரம் செலவு செய்தேன். மறக்க முடியாத அனுபவம் அது. காதல் என்றால் அன்பு. அன்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நான் அள்ளி கொடுத்தேன். கல்லூரி நாட்களில் காதலர் தினத்தன்று என்னிடம் சில மாணவர்கள் பல்வேறு விதமாக காதலை வெளிபடுத்தினார்கள். மறக்க முடியாத நாட்கள் அது.

சின்னத்திரை சாவித்திரி – தேவதர்ஷினி:

காதலர் தினம் அன்று சேத்தன் சார் என்ன பரிசு தருவார்?

காதலர் தினம் பற்றி பேச்சு எடுத்தாலே, இந்த டாபிக்கே பேசாதே என்று சொல்லுபவர் சேத்தன் சார்.

காதல் என்பது நாளில் இல்லை, மனதில் உள்ளது என்று நினைப்பவர். நான் கல்லூரி, பள்ளி படிக்கும் போது காதலர் தினம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால் இப்போது அந்த பரபரப்பு இல்லை.
சமூக வலைத்தளங்கள்
கூட காரணமாக இருக்கலாம்.

 

 

1 COMMENT

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...