0,00 INR

No products in the cart.

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
94 வயதில் தேர்தலில் போட்டி

ட்டுப் போடவே யாராவது தூக்கி வர வேண்டிய நிலையில் உள்ள முதியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 94 வயதைக் கடந்த காமாட்சி அம்மாள் என்ற பெண்மணி தேர்தலில் நிற்கிறார்.

எங்கே தெரியுமா?

அடையாறு மண்டலத்தில் உள்ள 174வது வார்டில் இவர் நிற்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் போட்டியிட, பல அரசியல் கட்சியினரும் முனைந்து வருகின்றனர். இவர்களுக்கிடையே காமாட்சி அம்மாவும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வயதில் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் எப்படி வந்தது?

சென்னை பெசன்ட்நகரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் காமாட்சி அம்மா. இவரது கணவர் வெங்கட்ராம சாஸ்திரி, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இணைச் செயலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; இதனால் இவருக்கு சமூக விழிப்புணர்வு அதிகம். அதுமட்டுமல்லாது இயல்பிலேயே மிகவும் துணிச்சலான பெண்மணியும் கூட இவர். 1991 ஆம் ஆண்டு இவர் கணவர் இறந்து விட்ட நிலையிலும், காமாட்சி அம்மா தனது சமூகத்திற்காக அயராது பாடுபட்டார். மாநகராட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினார் . அவர் ஒரு ‘Civic Activist’. அடையாறு பகுதியில் அவரை அறியாதவர் கிடையாது.

அடையார் பகுதி -13 இன் மாநகராட்சி என்ஜினீயர்ஸ் மற்றும் ஆபிசர்ஸ் அனைவருக்கும் இவர் மேல் அதிக மதிப்பு உண்டு. அடையாறு மற்றும் பெசன்ட் நகர் வாசிகள் இவரை செல்லமாக ‘காமாட்சி பாட்டி’ என்று அழைப்பது வழக்கம்.

“ஓரிடத்தில் வசிப்பவர்கள் எனக்கு எதற்கு இந்த வீன் வேலை என்று நினைக்காமல், அவர்கள் தெருவிற்காக ஒரு அரை மணி நேரம் செலவிழித்தால் கூட அநேக மாற்றங்கள் கொண்டுவர முடியும்,” என்பது அவரது நம்பிக்கை. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அனாலும் இவரது துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும்

80 வயதில் பூமிதானம்.

ன் சேமிப்பு, தனது நிலம் எல்லாவற்றையும் கோயிலுக்கு வழங்கியிருக்கிறார் 80 வயதான புஷ்பம்மாள். நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் வசித்து வரும் இவருக்கு பக்தியும் இறை நம்பிக்கையும் அதிகம். இவர் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை அங்குள்ள வினாயகர் கோயிலுக்கு தானமாக வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமின்றி, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்து வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாயையும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக அளித்திருக்கிறார்.

புஷ்பம்மாள்

”ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லோருக்கும் நல்லதே நடக்கும்,” என்கிறார் புஷ்பம்மாள்.

19 வயதுக்குள் பதக்கங்கள்

துனீசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர்க்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியாவின் சுஹானா சைனி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சுஹானா

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், சுஹானா, ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணிகள் என்ற மூன்று பிரிவுகளிலும் விளையாடி தலா ஒவ்வொரு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

 

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...