0,00 INR

No products in the cart.

பெண்களின் மூளை சிறியதாக இருப்பது ஏன்?

-ஜி.எஸ்.எஸ்.

ணின் மூளையை விட பெண்ணின் மூளை சிறியது. இப்படிக் கூறுவது ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூடத்தான்.

பெண்ணின் மூளை ஏன் சிறியதாக இருக்க வேண்டும்? இதற்கு சுவாரஸ்யமான ஒரு விடையை அளிக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.
1959ல் டிமிட்ரி பெல்யஸேவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஓர் ஆராய்ச்சியை தொடங்கினார். அந்த ஆராய்ச்சி பல வருடங்களுக்கு தொடர்ந்து. காட்டில் வசிக்கும் குள்ளநரிகளில் சிலவற்றை (அவை சின்னக் குட்டிகளாக இருக்கும்போதே) தன் வீட்டுக்கு கொண்டுவந்து வளர்க்கத் தொடங்கினார்.

காலப்போக்கில், அவை வளர வளர ஏதோ வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியைப்போலவே நடந்துகொள்ளத் தொடங்கின. சுருக்கமாகச் சொல்வதென்றால் அவை நாயைப் போல நடந்து கொண்டன. வாலாட்டுவது, குரைப்பது, உத்தரவுக்கு கீழ்படிவது, அன்புக்கு ஏங்குவது – இப்படி குள்ளநரிகளின் குணத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லா இயல்புகளை கொண்டிருந்தன வீட்டில் வளர்க்கப்பட்ட குள்ளநரிகள்.

ப்படி வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களின் மூளை அளவு காட்டில் வளரும் அதே இனத்தைச் சேர்ந்த மிருகங்களின் மூளையைவிட அளவு குறைவாகவே இருந்தது. (பொதுவாகவே நாய், பூனை, ஆடு, பன்றி போன்ற வீடுகளில் வளர்க்கப்படும் மிருகங்களின் மூளை சிறியதாகவே உள்ளது. அதே அளவு கொண்ட காட்டு மிருகங்களின் மூளையைவிட சுமார் 25% குறைவு). மனித மண்டையோட்டின் அளவு, கடந்த பல்லாயிரக்கணக்கான வருடங்களில், மிகச்சிறய அளவுகளில் குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு ஒரு காரணமாக மனித இனம் காட்டுத்தனமான வாழ்க்கை முறையிலிருந்து மாறி வருவதைக் குறிப்பிடுகிறார்கள்.

ராபர்ட் ட்ரிவர்ஸ் எனும் விஞ்ஞானி 1985ல் “சமூக பரிணாம வளர்ச்சி” எனும் நூலை எழுதினார். இதில் தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் பழகும் சமூக உணர்வுக்கும் மூளையின் அளவுக்கும் தொடர்பு உள்ளது என்றார்.

சரி, இவற்றிற்கும் பெண்ணின் மூளை அளவில் சிறியதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பல சமூகங்களில் பெண் அடக்கப்பட்டு வந்திருக்கிறாள். பல காலகட்டங்களில் வெளியில் செல்வது ஆணாகவும், வீட்டில் அடங்கியிருப்பது பெண்ணாகவும் இருந்திருக்கிறார்கள். பெண்ணின் மூளை சிறியதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் மேலே குறிப்பிட்ட விஞ்ஞானிகள்.

ஆனால் ஒன்று மூளையின் அளவு குறைந்த விலங்குகளுக்கு உணர்வுப்பூர்வமான அறிவாற்றல் அதிகமாக இருக்கும். வீட்டில் வளர்க்கப்பட்ட குள்ளநரிகள் மனிதனின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படுவது இதற்கு ஓர் உதாரணம்.

விர உடல் அளவுக்கும் மூளையின் அளவுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒரே வயது கொண்ட சராசரி ஆணின் உயரம், ஒரு சராசரி பெண்ணின் உயரத்தைவிட அதிகமாகவே இருக்கும். எனவே ஆணின் மூளை சற்று பெரியதாக இருப்பது இயல்புதான்.
சமீபத்தில் ரோசலின் பிராங்கிளின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ குழு, லிசி எலியட் என்ற நரம்பியல் விஞ்ஞானியின் தலைமையில், ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவு கீழே உள்ள வகையில் அமைந்தது.

பெண்ணின் மூளை ஆணின் மூளையை விட சுமார் 11 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுவாகவே ஒரு ஆணின் உடல் அளவைவிட பெண்ணின் உடல் அளவு குறைவாக இருப்பதுதான். உடல் அளவு அதிகமாக உள்ள ஆணின் மூளை அளவு, உடல் அளவு குறைவாக உள்ள ஆணின் மூளை அளவைவிட அதிகமாக இருக்கிறது.

எனவே பெண்ணின் மூளை அளவு குறைவானது என்று பொதுவாகக் கூறுவது அவ்வளவு சரியல்ல. பெண் என்பதால் அல்ல, உடல் பொதுவாக குறைவாக அளவில் இருப்பதால், பெண்ணின் மூளை அளவு குறைவாக இருக்கிறது.
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன…

1 COMMENT

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...