0,00 INR

No products in the cart.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை – வெற்றி வாகை சூடுமா  இந்தியா?

-மஞ்சுளா சுவாமிநாதன்

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் மகளிருக்கான 12 வது உலகக் கோப்பை போட்டி சென்ற வாரம், மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தில் தொடங்கிய நிலையில், இந்த முறையாவது கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து இந்தியர்களிடமும் உள்ளது.

எட்டு அணிகள் பங்கு பெரும் இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு 1.38  மில்லியன் டாலர்கள் வழங்க இருக்கிறது ஐசிசி. இது சென்ற முறை  வெற்றியாளர்கள் பெற்றதைத் காட்டிலும் இரு மடங்கு அதிகம்.

44 ஆண்டு கால காத்திருப்பு 

ந்திய மகளிர் துடுப்பாட்ட அணி பங்குபெற்ற முதல் உலகக் கோப்பை 1978 இல் நடந்தது. இதுவரை இந்தியா பங்கு பெற்ற 9 உலகக் கோப்பை போட்டிகளில் இரு முறை மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறை கூட வெற்றிக் கனியை எட்ட இயலவில்லை.  அதுவும் 2017 இல் இங்கிலாந்திடம் இறுதிப் போட்டியில் வெறும் எட்டே  ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியானது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீராங்கனைகள் மனதில் இன்றும் ரணமாக உள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற ‘இந்தியா – நியூசிலாந்து’ தொடர் ஆட்டங்களில் விளையாடி, அந்த நாட்டின் பிட்ச் மற்றும் விளையாடும் சூழலை  நன்கு அறிய முடிந்ததால், இம்முறை இந்திய அணியால் எளிதாக விளையாட முடியும்,  என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ். அதுவும் 2017ல் பெற்ற தோல்வியின் படிப்பினையானது நிச்சயம் வெற்றியை  பெற உதவும் என்று நம்புகிறார்.

நம்பிக்கை நட்சத்திரங்கள்  

ந்த உலகக் கோப்பையில் பங்குபெறும் இந்திய வீராங்கனைகள் மிகவும் திறமைசாலிகள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்…

துணை கேப்டன் ஹர்மன்பிரீத்  கவுர்

12 வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடி வரும் இவர் ஒரு சிறந்த ஆல்  ரவுண்டர். தற்போது நல்ல  பார்மிலும்  உள்ளார். பெண்களுக்கான ஒருநாள் விளையாட்டில், ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக  171 ரன்கள் குவித்த சாதனை இவரையே சேரும்.

ஸ்ம்ரிதி மந்தனா 

ந்தியாவின ஓபனர் ஸ்மிரிதி. 2018  ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை பெற்றவர். ஒரு நாள் போட்டிகளில் இவரது சராசரி 42 ரன்கள். இது ஒரு ஒபனர்க்கான சிறந்த சான்று.

தீப்தி ஷர்மா 

திறமையான ஆல் ரவுண்டர். பந்தை நன்றாக அடித்து ஆடக் கூடியவர். இவரது ஸ்ட்ரைக் ரேட் 65. பார்ம்மில் இருந்தால் ஒரே ரன் மழை தான் நமக்கெல்லாம்.

இவர்களை தவிர ஷெஃபாலி ஷர்மா, ராஜேஸ்வரி கேக்வாட், ரிச்சா கோஷ் என இந்த இளம் வீராங்கனைகள் அனைவருமே நம்பிக்கை நட்சத்திரங்கள் தான்.

இரு ஜாம்பவான்கள்
ப்படி நமக்கெல்லாம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றால் சச்சின் டெண்டுல்கரையும், கபில்  தேவையும் மறக்க முடியாதோ… அதுபோல இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் என்று எடுத்தால்   கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமியை மறக்க இயலாது. காரணம் அவர்கள் கடந்த 20 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

அவர்கள் இருவரின் சாதனைகள் அளப்பரியது. இந்த விளையாட்டில் அவர்களது ஈடுபாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும்  சலுகைகளும், அதற்கு கிடைக்கும் ஊக்கமும்  இன்றி பல ஆண்டுகள் அணியை வளர்க்க பொறுமை காத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் மகளிர் கிரிக்கெட்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இத் தருணத்தில்… “நாங்கள் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்த பிறகே ஓய்வு காண்போம்,” என்று மார்தட்டுகிறார்கள் இந்த சிங்கப் பெண்கள். மங்கையர் மலர் சார்பாக இவர்களை வாழ்த்தி,  இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என பிராத்திப்போம்.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...