கல்லாதது கடலளவு – 9 

கல்லாதது கடலளவு – 9 
Published on

-நாராயணி சுப்ரமணியன் 

திருக்கை மீன்களால் பிரபல தொலைக்காட்சி பிரபலம் ஸ்டீவ் இர்வின் இறந்தார் என்கிறார்களே? திருக்கை மீன்கள் ஆபத்தானவையா?

திருக்கைகளில் Sting Ray என்று அழைக்கப்படும் இனங்களின் வாலில் ஒரு முள் போன்ற அமைப்பு இருக்கும். அது எதிராளிகள்/இரையின் உடலில் விஷத்தை செலுத்தக்கூடியது. பெரும்பாலும் இந்தவகை திருக்கை மீன்கள் நம்மைவிட்டு விலகிச்செல்லும் சாதுவான தன்மை கொண்டவை. இவை மணலில் புதைந்திருக்கும் இயல்பு கொண்டவை என்பதால் மணற்பாங்கான கடற்பகுதிகளில் அலைகளில் நீந்துபவர்கள் தெரியாமல் இந்த திருக்கைகளை மிதித்துவிடுவார்கள், அப்போது திருக்கைகள் தாக்கலாம். 

திருக்கை மீன் தாக்கிவிட்டாலே இறப்பு என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான நேரங்களில் இந்த முள் பட்டுவிட்டால் மிகவும் மோசமான வலி ஏற்படும். இந்த முள் இதயப்பகுதியில் தாக்கும்போது விஷம் நேரடியாகத் தாக்கி இறப்பு நேரலாம், ஸ்டீவ் இர்வினுக்கு நடந்தது அதுதான் 

நிலத்தில் இருக்கும் செடிகளுக்குத் தேனீக்களும் பட்டுப்பூச்சிகளும் உதவி செய்து மகரந்த சேர்க்கை நடத்தித் தருகின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் கடல்புல் இனங்களுக்கு எப்படி மகரந்த சேர்க்கை நடக்கும்? 

டலுக்குள் தனியான தேனீக்கள் இருக்குமா என்று யோசிக்கிறீர்களா? இல்லை. ஒருவேளை இருந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்…. இல்லையா? நாமும் கடல் தேனை உப்பு ருசியுடன் சுவைக்கலாம்!! 

கடல்புற்களின் மகரந்த சேர்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருப்பது அவை வாழும் கடல் சூழல்தான். கடல்நீரில் ஆண் பூக்கள் மகரந்தங்களை வெளியிடும். இவை நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு பெண்பூக்களைச் சென்று சேரும் 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சில குறிப்பிட்ட கடல்புல் இனங்களின் மகரந்த சேர்க்கைக்கு சிறிய நண்டு இனங்களும் கடல் புழு இனங்களும் தேனீக்களைப் போலவே மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 

எல்லா பறவைகளும் குளிர்காலத்தில் வலசை போகின்றனவே, கடும் குளிராக இருக்கும் அண்டார்டிக் பகுதியில் உள்ள பறக்க முடியாத பென்குயின்கள் என்ன செய்யும்? 

பென்குயின்களும் வலசை போகின்றன! ஆனால் அவை நீந்தி, கடலைக் கடந்து அண்டார்டிக் பகுதியில் உள்ள சிறு தீவுகளுக்கு வலசை போகின்றன, குளிர்காலம் முடிந்த பிறகு திரும்பி வருகின்றன. நம் ஊருக்கு அவை வருவதில்லை என்பதால் இந்த சிறு வலசை அதிகமாக அறியப்படுவதில்லை. 

பேரரசப் பெங்குயின்கள் மற்றும் அடிலெய்டு பென்குயின்கள் எந்த சூழலிலும் அண்டார்டிக் பகுதியை விட்டுப் போவதில்லை, கடுமையான குளிர்காலத்தையும் பனிப்புயல்களையும் தாங்கக்கூடிய வகையில் அவற்றின் உடல் தகவமைப்புகளும் செயல்பாடுகளும் இருக்கின்றன. 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com