0,00 INR

No products in the cart.

நம் வீட்டுத் தோட்டத்தில்!

தொடர் – 4
தொகுப்பு : லதானந்த்
வீட்டிலேயே தோட்டம் அமைத்து, வெற்றிகரமாகக் காய்கறிகள் மற்றும் பூஞ்செடிகள் வளர்க்கும் திருமதி ராமசந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்ச்சி…

பூச்சி விரட்டி என்று சொன்னீர்களே அது என்ன?

ண்ணீரை வேகமாய் அடித்தாலே போதும் பல பூச்சிகள் ஓடி விடும். எறும்புகள் அதிகம் தென்பட்டால் மஞ்சள் பொடி, லேசாய் சாம்பல், மசாலா பட்டை தூவினால் போதும்.

ஆனால் எல்லாப் பூச்சிகளையும் இப்படி விரட்டிவிட முடியாது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, வேப்பெண்ணைய் நாலு மி.லி. எடுத்து, அதில் நாலு சொட்டு பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு கலந்தால் வெள்ளை நிறத் திரவம் வரும். அதை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து ஸ்ப்ரே செய்தால் செடிக்கு வரும் பல பூச்சிகள் ஓடியே அல்லது பறந்தே போய்விடும்.

சோப் எதற்கு என்றால் தண்ணீரில் எண்ணெயைக் கலக்க முடியாது இல்லையா? அதற்காக சேர்ப்பது. அந்த ரசாயனமும் வேண்டாம் என்றால், பூந்திக்கொட்டை என்று கடைகளில் கிடைக்கும். விதைகளை வாங்கி, கொட்டையை எடுத்து விட்டுத் தண்ணீரில் ஊற வைத்தால், சோப்பு போன்ற திரவம் கிடைக்கும் அதையும் உபயோகிக்கலாம்.

புளித்த மோரும் சிறந்த பூச்சி விரட்டி. இதைத் தவிர Beauveria bassiana, Verticillium lecanii என்பன கடைகளிலும், அமேசானிலும் கிடைக்கும். இவை சாறு உறுஞ்சும் மோசமான பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; இவை இரண்டும் ஆர்கானிக் பூச்சிகொல்லிகள்.

எந்த பூச்சிகொல்லி உபயோகித்தாலும், முகத்தில் மாஸ்கும், எந்த தோட்ட வேலை என்றாலும் கைக்கு கிளவுசும் போட்டுக்கொள்வது நல்லது. நிலத்தில் எத்தனையோ பூரான் போன்ற பூச்சிகள், தேனி, வண்டுகள் போன்றன இருக்கும். சிலருக்கு அலர்ஜியும் வரும். அதனால் மாஸ்கும், கிளவுசும் அணிவது மிக அவசியம்.

நீங்கள் சொன்னது அனைத்துமே காய்கறி வளர்ப்புக்கான வழி முறைகள். பூஞ்செடிகள் வளர்ப்பதைப் பற்றியும் சொல்லுங்கள்?

டிப்படையில் மண் கலவை ஒன்று தான். ஒரு மடங்கு மண், ஒரு மடங்கு கோகோ பித், ஒரு மடங்கு மண் புழு உரம் அல்லது வீட்டு உரம் அல்லது தொழு உரம் (சாணக் குப்பை) இவற்றைக் கலந்தும் போடலாம், கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் போன்றனவும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் சாமந்தி செடிக்கு கோகோ பித்தை விட, ஆற்று மணல் சேர்த்தால் சிறப்பு. காரணம், கோகோ பித் ஈரத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும். அது சாமந்திக்கு ஆகாது. இப்படிச் சில செடிகளுக்கு கோகோ பித் சரிப்படாது. அதற்கு பதில் ஆற்று மணல் பயன்படுத்தவேண்டும்.

பொதுவாய்க் காய்கறிச் செடிகளுடன் பூஞ்செடிகளையும் கூடவே வைக்க வேண்டும். முதல் காரணம் கேந்தி, சாமந்தி, கனகாம்பரம் போன்ற பூக்களின் அடர் வண்ணங்கள் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். இந்தப் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு மிக உதவும். காய்கறிச் செடிக்கு அருகில் சாமந்திச் செடி வைத்தால், அதில் இருந்து வரும் மணம், தொல்லை தரும் பல பூச்சிகளுக்கு பிடிக்காது.

உரம், பூச்சி விரட்டி, மருந்து எல்லாம் என்ன கால அவகாசத்தில் வைக்க வேண்டும்?

தொட்டியில் வைக்கும் செடிகளின் வளர்ச்சியும், அது தரும் பலனும் நாம் தரும் உரத்தில்தான் இருக்கிறது. வெண்டைக்கு வாரம் ஒரு கைப்பிடி உரம் மண்ணில் வைக்க வேண்டும், மற்ற செடிகளுக்கும் அப்படியே, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது உரம் வைக்க வேண்டும். அரிசி கழுவிய தண்ணீர், பழத் தோல், வெங்காயத் தோல் போன்றனவற்றை அவ்வப்பொழுது தரலாம். ஏதாவது ஸ்ப்ரே செய்ய வேண்டும் என்றால், காலை சூரிய வெளிச்சம் சுள் என்று அடிப்பதற்கு முன்பு அதாவது ஏழு மணிக்கு முன்பு தெளிக்க வேண்டும். மாலை அதேபோல சூரிய வெளிச்சம் மங்கும் ஆறு மணி வாக்கில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். பொதுவாய்ச் செடிக்கு உரம் காலையிலும், பூச்சி விரட்டி/கொல்லி மாலையிலும் ஸ்ப்ரே செய்வது சிறந்தது.

எதுவானாலும் ஓவர் டோஸ் வேண்டாம். முதல் முறை உபயோகிக்கும்பொழுது சொல்லப்பட்ட அளவைவிடக் கொஞ்சம் குறைவாகவே போட வேண்டும். அளவுக்கதிகமாகப் போட்டால் செடிகள் கருகி விடும்.

செடி வளர்ப்பில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன என்ன? அவற்றை எவ்விதம் நீங்கள் எதிர் கொண்டீர்கள்?

விவசாயி என்பவர் நெல் போடுவார், காய்கறி, பூ என்றால் சிலவற்றைத்தான் ஆயுள் காலம் முழுக்கப் பயிர் செய்வார். ஆனால் எங்களுக்குப் பேராசை. எல்லாச் செடிகளையும் வளர்க்க வேண்டும் என்று. ஆரம்பத்தில் தெரியாமல் செய்த பிழைகள் நிறைய இருக்கின்றன. காய்கறி வளர்ப்பதில் மிக முக்கியம் சூரிய வெளிச்சம், ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நல்ல வெயில் பட்டால்தான் செடி வளரும். இது தெரியவே சில காலம் ஆனது.

ஒரு முறை, நன்கு வளர்ந்து காய்க்கும் தருணத்தில் இருந்த கத்தரிச் செடிகள் காலை வாடியதுபோல இருந்தன; மாலை முற்றிலும் தலை சாய்ந்து விட்டன. என்னவென்று பார்த்தால் இலையின் பின் பக்கம் முழுக்கப் பூச்சிகள். அன்றுதான் தெரிந்தது, வேப்பெண்ணெய் தெளிக்கும்போது, இலையின் பின் பக்கமும் தெளிக்க வேண்டும் என்று. இப்படி நிறைய ஆரம்பக்கால தடுமாற்றங்களைச் சந்தித்து இருக்கிறேன்.

செடி வளர்ப்பில் மிகவும் மகிழ்வாய் உணர்ந்த தருணம் எது? ஏன்?

தினமுமே ஏதோ ஒரு இயற்கையின் அற்புதத்தைச் செடிகள் காட்டும் என்றாலும், செள செள என்னும் பெங்களூர்க் கத்திரிக்காய் காய்த்ததைப் பார்த்த அனுபவம்தான் மறக்கமுடியாதது. கொடி முழுக்கக் காய்கள் பல்பு போல தொங்கிக்கொண்டு இருந்தன. ஓரே கொடிதான், வாரம் இரண்டு கிலோ அளவுக்கு காய்கள்.

அடுத்து இந்த வருடம், செவ்வந்தி செடி பரவச அனுபவம் தந்தது. தொட்டி முழுக்க, நூற்றுக்கணக்கான பூக்கள். அதை வளர்க்கும் முறையை இந்த வருடம்தான் சரியாய்க் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு செடியையும் வளர்க்கச் சில பிரத்யக முறைகள் உண்டு. அதைத் தெரிந்துக்கொண்டால் வெற்றிதான்.

அப்படி என்ன டெக்னிக், செவ்வந்தி வளர்ப்பில்?

ர்சரியில் பூக்களுடன் பெரிய செடிகள் விற்பார்கள். அவற்றை வாங்காமல் நாற்று பண்ணைகளில் நம் விரல் அளவு நீளத்தில் கிடைக்கும் செடிகளை வாங்கவேண்டும். ஆன் லைனிலும் கிடைக்கின்றன. அவற்றை ஜூலை மாதத்தில் வாங்கி, செடிகள் வளர வளர நுனியைக் கிள்ளி விட்டுக்கொண்டு இருந்தால், அடர்த்தியாய் வளரும். ஒரு செடியில் நூறுக்கணக்கான பூக்கள் கிடைக்கும்.

ஓரளவு விளக்கமாய் எல்லாம் சொல்லி விட்டீர்கள். கடைசியாய் சில டிப்ஸ் சொல்லுங்களேன்?

ரளவு செடிகள் வளர்க்க ஆரம்பித்ததும், டைரி போல ஒரு நோட்டுப் புத்தகத்தில் செடி வளர்ப்பில் நீங்கள் செய்ததை எல்லாம் எழுத ஆரம்பியுங்கள். என்ன உரம் தந்தீர்கள், எந்த பூச்சிகொல்லி உபயோகித்தீர்கள், எந்த விதை என்று விதைத்தீர்கள், எந்த செடி என்று நட்டீர்கள் என்பதை எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தினாலே ,உங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும்.

செடிக்கு தண்ணீர் விடுவதும் அப்படித்தான். தினமும் கடமைக்கு எல்லாத் தொட்டிக்கும் தண்ணீர் ஊற்றுவது நல்லதல்ல. பொதுவாய் மேலே ஈரம் இருந்தால் தண்ணீர் விட வேண்டாம். அதற்காக மேலேயும் காய்ந்து, மண் கெட்டியாகி, செடியின் இலைகள் வாடவும் விட்டுவிடக் கூடாது.

புளித்த மோரில், பத்து மடங்கு தண்ணீர் சேர்த்து, பெருங்காயம் ஒரு அரை டீ ஸ்பூன் கலந்து தெளித்தால் பிஞ்சுகள் உதிராது. அதே மோரில் சுண்ணாம்பு கொஞ்சம் கலந்து வேரில் ஊற்றினால், தக்காளியில் வரும் காய் அழுகலைத் தடுக்கும். சுண்ணாம்பில் இருக்கும் கால்ஸியம் அதற்குத் தேவை.

பல வழி முறைகள் இணையத்திலும் கிடைக்கின்றன. செடி வளர்க்க ஆர்வமும் நேரமும் இருந்தால் போதும். உங்கள் வீட்டுத் தோட்டமும் ஆரோக்கியமான காய்கறிகளாலும் அழகிய பூஞ்செடிகளாலும் நிரம்பி வழியும்!

’செடி டாக்டர்’ ராமசந்திரன் உஷா அவர்களுக்கு மங்கையர் மலர் வாசகர்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துகளையும் கூறி விடைபெற்றோம்.

[நிறைந்தது]

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...