0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

து ஒரு கல்யாண மண்டபம்! விருந்தும் இசைக் கச்சேரியுமாக ரிசப்ஷன் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. மணமக்கள் தேர்ந்த அலங்காரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது படித்த களையுள்ள டீசன்டான மூன்று இளைஞர்கள், மாடர்ன் ஆன ஓர் இளம் பெண்ணுடன் மேடை ஏறி, மணமகனுடன் சண்டை போடுகிறார்கள். அந்த இளம்பெண் மணமகனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கோபமாகக் கத்துகிறாள்.

“என்னை லவ் பண்ணிட்டு, எப்படிடா, எவளையோ கல்யாணம் பண்ணலாம்?”

“அஞ்சு வருஷம் காதலிச்சோமே? இப்ப கழட்டிவிட்டா… பதில் சொல்லு!” என திட்டுகிறாள்.

மணமகன் அப்படியே ‘ஷாக்’ அடித்ததுபோல திகைச்சு நிற்க, அவனது வருங்கால மனைவிக்கும் ஒரே அதிர்ச்சி… நடுவில் புகுந்து என்னவோ அறிய முற்படுகிறாள்.

சற்று நேரத்தில் பெரியவர்கள் சூழ, ஒரே குழப்பம், கூச்சல்… மணப்பெண் கண் கலங்கித் தவிக்கிறார்.

சில நிமிடங்களில், அந்த இளைஞர்கள் மாப்பிள்ளையின் தோளைத் தட்டி, “கூல் ப்ரோ! ஜஸ்ட் எ ப்ரான்க்” என்கிறார்கள். காதலியாக நடித்த அந்த இளம் பெண்ணும் சிரித்தபடி, கையை அசைக்கிறாள்!

இவன்ட் ஆர்கனைஸரும், நண்பர்களும் சேர்ந்து செய்த ஜாலி கலாட்டாவாம்!

(இந்த வீடியோவை நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.)

………………………………

ன்னொரு கல்யாணம். மணமேடையில் மணமக்கள் நிற்கிறார்கள்.
ஓர் இளம் ஃபோட்டோகிராஃபர், மணப்பெண்ணை மட்டுமே
வளைச்சு வளைச்சு, மிக நெருக்கமாக நின்றபடி புகைப்படங்கள் எடுக்கிறார்.

“இப்படி போஸ் கொடுங்க!” என்றபடி மணமகளை தோள், கன்னம் என தொட்டுப் பேசுகிறார்.

இது தொடர்ந்து நடக்கவே, மாப்பிள்ளைக்கு வந்ததே கோபம்!

“ஏன்டா… அப்ப நாங்கல்லாம் யாரு?”ன்னு புகைப்படக்காரருக்கு ஓங்கி ஒரு குத்து விடுகிறார். அவர் ஓடியே போக, மணமகள் அதை ரசிச்சு, குலுங்கிக் குலுங்கி சிரிச்சு, தரையில் மண்டியிட்டு தட்டி மகிழ்கிறார். இதுவும் மணமகள் வீட்டார் ஏற்பாடு செய்த ‘ப்ரான்காம்!’ அதாவது மாப்பிள்ளை ரோஷக்காரர்தானா என்று டெஸ்டிங் செய்கிறார்களாம்!

………………………………

ர் அழகான, அருமையான தாம்பத்தியத்துக்குள் நுழையும்போது, ஒரு சீரியஸ்னெஸ் வேணாமோ?

குத்துப்பாட்டுக்கு மணமகள் ஆடிக்கொண்டே வருவது, ரேஸ் பைக்கில் ஸ்டைலாக வந்து இறங்குவது, சிலம்பம் சுற்றுவது… இதையெல்லாம்கூட ஓரளவுக்குப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டுவிடலாம்.

ஆனால் ‘ப்ரான்க்’ என்ற பெயரில் கலவரம், ரகளை செய்வது எல்லாம்
டூ மச்! த்ரி மச்!

இந்த செட்-அப் பற்றி ஒன்றும் தெரியாத மணமக்களின் வயதான தாத்தா, பாட்டி, அப்பா – அம்மா போன்றவர்கள், இது போன்ற ‘ப்ரான்க்’ செயல்களால் அதிர்ந்து போய், அதனால் அவர்களுக்கு சில சமயம் மாரடைப்பு கூட நேரலாம்! அல்லது ப்ரெயின் ஹெமரேஜ் நேரலாம்! பின்விளைவுகள் பற்றிக் கவலை இல்லாமல் அப்படி என்ன சிறுபிள்ளைத்தனம்?

இனிமையான பந்தத்துக்குள் இரு மனங்கள் நுழையும் புனித விழாவில், தோழியரே, தோழர்களே… கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்… மணநாளில்
ஓர் அவச் சொல்லைக்கூட, பேசாமல், கேட்காமல் கண்ணியம் பார்த்த சமுதாயத்தில் இந்தக் கேவலமான செயல்பாடு வருத்தம் தருகிறது. நீங்களும் உங்கள் பாழாய்ப் போன ப்ரான்க்கும்!

டீஸிங்குக்கும் புதுமை எல்லாம் ஓர் அளவுக்குத்தான்! அளவுக்கு மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும்!

வாழ்நாள் முழுதும் நினைத்து மகிழ வேண்டிய நல்லதொரு நிகழ்வு அது! ப்ளீஸ் நோ யுவர் லிமிட்ஸ்! கீப் டிஸ்டென்ஸ்!

……………………………………………………………………………………………………………….

சென்ற இதழில் இடம் பெற்ற மகளிர் தின சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

 1. P. ஹேமித்ரா, லால்குடி,
 2. வீ. சகுந்தலா, மதுரை,
 3. N. ஸ்ரீகலா, சென்னை,
 4. நளினி ராமசந்திரன், கோயம்புத்தூர்,
 5. மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்,
 6. R. பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்,
 7. ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்,
 8. எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்,
 9. எஸ். கெஜலட்சுமி, லால்குடி,
 10. வி. பவானி, மதுரை.

வெற்றி பெற்ற அனைவருக்கும்  ஒரு பரிசு வீடு தேடி வரும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

விடைகள்:

இடமிருந்து வலம்

 1. லட்சுமி
 2. சுஷ்மா (ஸ்வராஜ்)
 3. மகா
 4. குமாரி
 5. அனிதா
 6. ராக
 7. ஒளவையார்
 8. மலாலா
 9. சுசீலா
 10. நீனா

மேலிருந்து கீழ்

 1. லதா
 2. சுஷ்மா (வர்மா)
 3. சுகாசினி
 4. மாதவி
 5. குந்தவை
 6. தாரா
 7. நிர்மலா (சீதாராமன்)
 8. கல்பனா
 9. கலா

8 COMMENTS

 1. புதிர் போட்டியில் கலந்து கொண்டபோது மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது பரிசும் கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
  மிக்க நன்றி.
  என்றும் அன்புடன்:
  எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
  லால்குடி.

 2. எங்களை பல வகையிலும் ஊக்குவிக்கும் மலருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசி பெற்றமைக்கு மகிழ்கிறேன்.

 3. எங்களை பல வகையிலும் ஊக்குவிக்கும் மலருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசுபெற்றமைக்கு மகிழ்கிறேன்.

 4. மங்கையர் மலருக்கு அன்பான வேண்டுகோள்:
  வாரம்தோறும் புதிர் போட்டி இடம் பெற்றால் நன்றாக இருக்கும். பொது அறிவு வளரும். பெண்களுக்கு புது உற்சாகம் பிறக்கும்.
  ஆவலுடன் எதிர்பார்க்கும்
  எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
  லால்குடி.

 5. கல்யாணம் செய்பவர்களுக்கான அட்வைஸ் சூப்பர். காலத்துக்கு தகுந்தபடியான சும்மா நச்சுனு ஒரு அட்வைஸ். உஷா சங்கரன்.

 6. குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு மகிழ்ச்சி.மங்கையர் மலர் டீமிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .
  இதுபோன்ற குறுக்கெழுத்துப் போட்டிகளை வாரந்தோரும் வழங்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவோம்.
  கல்யாண நிகழ்வுகளை கண்ணியத்துடன் நடத்த “ஒரு வார்ததை” பகுதியில் இடம்பெற்ற அனுஷாவின் அட்வைஸ் சும்மா “நச்” சுன்னு இருந்தது.இன்றைய இளம்தலைமுறையினர்களில் ஒரு சிலர் என்ஜாய்மென்ட் என்ற பெயரில் லிமிட்டைத் தாண்டும்போது மனம்வலிக்கிறது. விளையாட்டு வினையாகுமே என்பதை இவர்கள் ஏன் உணருவதில்லை?

 7. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்
  அதில் விளையாடி ஆபத்தை விளைவிப்பது
  தகாத ஒன்றாகும்.இந்த மாதிரி விளையாட்டு
  களால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை
  சந்திக்க நேரிடும். டீசண்டாக நடந்து கொள்வதுதான் நல்ல நண்பனுக்கு அழகு.

 8. குறுக்கெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற
  அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு... (லாட்டரிச் சீட்டு இல்லீங்க.... இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா! ************** கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண...

ஒரு வார்த்தை!

இன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், “என்னோட ஹப்பி, என்னை ‘caring’ஆ பார்த்துக்கணும்... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும்... என் மேல...

ஒரு வார்த்தை!

அது ஒரு காலேஜ் ஹாஸ்டல். அங்கே நூறு மாணவியர் தங்கிப் படித்து வந்தனர். அந்த விடுதியில், காலை உணவு என்னத் தெரியுமோ? ரவை உப்புமா! வாரத்துக்கு இரண்டு நாளோ, மூணு நாளோ இல்லை......