0,00 INR

No products in the cart.

பெண்களின் திருமண வயது 21 

-தனுஜா ஜெயராமன்

பெண்களின் திருமணவயதை இருபத்தி ஒன்றாக உயர்த்தி இருக்கும் தற்போதைய சட்டமானது மிகவும் வரவேற்க தக்கது. இதன்மூலம் மேற்கல்வி கற்கும் பெண் குழந்தைகளின் சதவீதம் அதிகரிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக பெண்களின் திருமண வயது என்பது பதினெட்டாகவே இருந்து வந்தது. பதினெட்டு வயதில் பெண்குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்பு உயர்நிலை கல்வியை மட்டுமே முடித்திருக்க முடியும். ஆனால் தற்போதைய  சட்டமானது அவளின் கல்லூரி படிப்பை உறுதி செய்ய ஒரு வாய்ப்பாக அமையும் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  இது பல கிராமப்புற பெண்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் தங்கள்  கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தேர்வு செய்யவும் , தனது திருமணம் , எதிர்காலம், வாழ்க்கைத் துணை குறித்த புரிதல்களை பெறவும் உகந்த வயது இருபத்தியொன்று தான். கடந்த இரண்டு வருட காலமாக பெரும் நோய் தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இக்காரணங்களால் இன்று பல பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம்  கேள்விக்குறியாகி வருகிறது. பழங்காலத்திலிருந்து பாடுபட்டு வளர்த்தெடுத்த பெண் கல்வி இன்று பல்வேறு காரணங்களால் பரிதவித்து போயிருப்பது வருத்தமளிக்கிறது.

பள்ளிகளின் முடக்கம் பெண் குழந்தைகளுக்கு வெகுவான பாதிப்பை ஏற்படுத்தி வருவது பலரும் அறிந்ததே. தற்போது பள்ளிகளில் மாணவியர் இடை நிற்றல் பரவலாக பரவி வருகிறது. பள்ளிகளில் இருந்து நிறுத்தபடும் இளம்பெண்கள் பலர் சிறுவயதிலேயே திருமணம் செய்விக்கப் படுகிறார்கள்.

சென்ற  நூற்றாண்டின் முன்பகுதியிலே வழக்கொழிந்து போனதாக கருதப்படும்  குழந்தைத் திருமணங்கள், 2021 லும்  தொடர்வது காலக்கொடுமையே. இந்த காலகட்டத்திலும் குழந்தைத் திருமணத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிவரும் என்பதை யாரும் கிஞ்சித்தும் யோசித்திருக்கமாட்டார்கள். இந்த நோய்த்தொற்று காலத்தில் பால்ய திருமணம் என்ற பெரும் சமூக தொற்றும் பரவி வருவது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு நோய்தொற்று காலம் என்பது மட்டுமே நேரடி காரணம் என சொல்லிவிட முடியாது. கிராமங்களில் பரவலாக காணப்படும் படிப்பறிவின்மை, போதிய விழிப்புணர்வின்மை, வறுமை , வேலையின்மை போன்ற மறைமுக பிரச்னைகளுமே குழந்தை திருமணத்திற்கான காரணங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

தற்போதைய சூழலில், ‘இதற்கு மேல் பிள்ளைகளை படிக்க வைக்க தங்களால் இயலாது’ என்பதும் , ‘நோய் தொற்றினால் தங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பெண் குழந்தைகளை பார்த்து கொள்ள ஆள் தேவை,’ என்பதையும் பால்ய திருமணத்திற்கான காரணமாக வைக்கின்றன அந்த பெற்றோர்களின் தரப்பு. ஆனால் இத்தகைய காரணங்களெல்லாம் பெண் குழந்தைகளை பள்ளியிலிருந்து இடை நிறுத்தி திருமணம் செய்து வைப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த இயலாது.

தற்போதைய திருமண வயது வரம்பை அதிகரிக்கும் இச்சட்டமானது பல பெண்களின் கல்வி மற்றும் வாழ்வுரிமையை காக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல கிராமப்புற பெண்களின் வாழ்வில் ஓளியேற்ற வைக்கப் போகும் இச்சட்டத்தை வாழ்த்தி வரவேற்ப்போம்!

3 COMMENTS

 1. பெண்கள் 21 வயதில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற சட்டம் வரவேற்க வேண்டியது; நியாயமானது; பெண்களின் எதிர்கால வாழ்விற்குத் தேவையானது. குறிப்பாக கிராமப்புற பெண்களின் மேல்படிப்புக்கான கனவு நிறைவேறும்.
  ஆர்.வித்யா சதீஷ்குமார்,
  பள்ளிக்கரணை.

 2. திருமண வயது வரம்பை உயர்த்தி இருப்பது பெரும்பாலான பெண்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எந்தவித நிபந்தனையும் இன்றி இந்த சட்டத்தை வாழ்த்தி வரவேற்போம்.

 3. பெண்களின் திருமண வயதை அதிகரித்திருப்பது நிறைய பலன்களை
  தரும் வகையில் உள்ளது. இது மிகவும்
  மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...