0,00 INR

No products in the cart.

திக்… திக்… திக் ! அமானுஷ திகில் அனுபவங்கள்! 

சுசீலா மாணிக்கம்.

பெரிதாக ஒன்றும் தேவையில்லை. சில சமயங்களில் நம் விட்டுக் குழாயில் இருந்து சொட்டும் டக் டக் சப்தம், Paper Fan காற்றில் அசையும் சப்தம், கடிகார டிக் டிக் என சில சமயங்களில் நம் பெருங்குடல் தொண்டைக்கும் வரும் அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும். (வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருளுவது போல… ஒட்டு மொத்தமாய் பெருங்குடல் சுருண்டு வந்து தொண்டையை அடைப்பது போல…) அப்படிப்பட்ட ஒர் அனுபவத்தைத் தான் பகிர்ந்து கொள்கிறார் நமது வாசகத் தோழி சுசீலா மாணிக்கம்.

‘திக் திக்’ னு மனம் பதற படியுங்கள்… உங்களுக்கும் இது போன்ற ‘திகில்’ அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், “டக் டக்னு’’ மின்னஞ்சல் வழியே அனுப்புங்க mm@kalkiweekly.com 

னக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும், அறியாத வயதில், விவரம் புரியாத பெண்ணாய்… அப்போது நான் 8ம் வகுப்பு. தருமபுரியில் இருந்தேன். 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் கிராமம் ரொம்ப அழகாக இருக்கும். நல்ல கிளைமேட்… வெள்ளந்தியான மக்கள்… வரம் பெற்ற நாட்கள் அவை…

பக்கத்து வீட்டில் பத்மா அக்காஇருந்தாங்க. அப்போதெல்லாம் கதை புத்தகங்கள் அவர்கள் வீட்டில்தான் வாங்குவார்கள். அவர்கள் வீடு சென்று படிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான்.

ஓட்டு வீட்டு முன்பக்கம், ஒரே ஒரு மஞ்சள் குண்டு பல்பு. அதன் கீழ் கயிற்றுக் கட்டில். சற்று தொலைவில் வாழை மரங்கள், தோட்டம் மற்றும் கிணறு. சாதாரண நாட்களிலேயே யாரோ நடப்பது போன்ற பிரம்மை தட்டும். அப்போது இரவு 7 மணி இருக்கும். கட்டிலில் அமர்ந்து நானும் பத்மா அக்காவும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம். அந்த அக்கா பாட புத்தகம், நான் மர்ம தொடர்.

திடீரென அக்கா, ‘குட்டி, நீ படிச்சிட்டு இருடா.. நா வீட்டுக்குள்ள போயி நோட்ஸ் எடுத்துட்டு வந்துடறேன்,’ எனக் கூறி வீட்டுக்குள் சென்று விட,

அப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன் ஒவ்வொரு மரமும் ஓர் ஆள்போல தெரிகிறது. சரி நாமும் இறங்கி வீட்டுக்குள் ஓடிவிடலாம் என நினைத்த போதுதான் அந்த highlight சம்பவம் நடந்தது.

ஆம். கட்டிலை விட்டு இறங்க கால்களை தொங்கப்போடும் போதெல்லாம் கட்டிலுக்கடியில் இருந்து கர்ணகடூரமான ‘குர்’ எனும் சப்தம். கால்களை மேலே தூக்கிக் கொண்டால் நிசப்தம். கால்களை கீழே போட்டால் ‘குர்‘ . மேலே எடுத்துக் கொண்டால் ‘Nil’. 

மீண்டும் ‘scenary’ யை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்… வீட்டின் முக்கால்வாசி பாகம் தோட்டம். ஒரே ஒரு ஓட்டு வீடு. மஞ்சள் குண்டு பல்பு. திண்ணையில் கயிற்றுக் கட்டில். கட்டிலின் மேல் தனியே நான். கைகளில் மர்ம நாவல். மணி சுமார் இரவு ஏழு. ‘குர்‘ ‘Nil’- ‘குர்‘ ‘Nil’ situation.

பெருங்குடல் சுருண்டு தொண்டைக் குழியை மொத்தமாய் அடைத்துக் கொள்ள… முச்சுத் திணற… கண்களில் கண்ணீர் வழிய…

super star ஒரு படத்தில் பாம்பைப் பார்த்து, ‘ப…..ப….’என்பாரே அதே effect ல பத்மா அக்காவை அழைக்க ‘ப…..ப….’ என திணற,

‘Sorry da குட்டி. bath room போயிட்டு வந்தேன்,’ என கூறிக் கொண்டு  அவர் என் அருகில் வந்தார்.

விழி பிதுங்கி, வாய் கோணி வேர்த்து அமர்ந்திருந்த என் அழகை பார்த்து அதிர்ச்சி அடைந்து ‘குட்டி என்னாச்சு… குட்டி என்னாச்சு’ என அவர் என்னை உலுக்க, மீண்டும் கட்டிலுக்கடியிலிருந்து அதே ‘குர்‘ சப்தம் இன்னும் கர்ணகடூரமாய் கேட்டது.

அக்காவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் நிலை பெற்றுவிட்ட கருவிழிகளை பெயர்த்து அக்காவை பார்த்து கேட்க நினைக்கிறேன்… முடியவில்லை. ஆதிவாசி பாணியில் கட்டிலுக்கடியில் கரங்களை சுட்டிக் காட்டுகிறேன். ‘ஓ… அதுவா… கோழி அடைகாக்குது குட்டி’ என படு casual ஆக பத்மா அக்கா பதில் கூறினார்.

ஆயிரம் side dancers வந்து என் பின்னால் ஆட, மனதும் உடம்பும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், தொண்டைக்குழிக்குள் சிக்கிய பெருங்குடல் மட்டும் சாமாணியமாய் இறங்க மறுக்கிறது.

‘ஐயோ அக்கா நான் பயந்தே போயிட்டேன். பேய்னு நெனைச்சிட்டேன்’ – என்று திக்கித்திணறி, கண்களோ பாத்ரூமை தேட, கால்கள் பாத்ரூம் நோக்கி ஓட, பத்மா அக்காவின் சிரிப்பும், கோழியின் ‘குர்’ சப்தமும் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...